`குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் விண்ணப்பம் உண்மையா… போலியா?' – அன்புமணி ட்வீட்

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை. … Read more

"நாயகனுக்கோ, நாயகிக்கோ அப்பா ரோலில் நடித்துவிடலாம் என்பதே என் திட்டமாக இருந்தது!"- விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். உங்கள் சினிமா வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளீர்கள். என்றேனும் ஒருநாள் கதாநாயகன் ஆவேன் என்று நினைத்திருக்கிறீர்களா? … Read more

திமுக Vs பாமக: ராமதாஸ் ட்வீட்டால் வார்த்தைப் போர்; வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் என்ன நடக்கிறது?

வேலூர் மாநகராட்சி, 24-வது வார்டு பா.ம.க வேட்பாளர் பரசுராமனை கடத்திச் சென்று, தி.மு.க தரப்பு மிரட்டியதாக, கடந்த 6-ம் தேதி இரவு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். மறுநாள் காலையே, வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார் ட்விட்டரிலேயே ராமதாஸின் அந்தப் பதிவுக்குப் பதிலடி கொடுத்தார். அதைத்தொடர்ந்து, பா.ம.க, தி.மு.க இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் முற்றியது. இதனால், மாநகராட்சியின் 60 வார்டுகளிலேயே… இந்த 24-வது வார்டு தேர்தல் … Read more

IPL 2022 Full Squad Details: மெகா ஏலத்தில் எந்த அணி சிறப்பாகச் செயல்பட்டது, எது சொதப்பியது?

முதல் நாள் ஏலத்தில் டெல்லி முந்தியது என்றால், இரண்டாம் நாள் ஏலத்தில், நடப்புச் சாம்பியனான சிஎஸ்கே, தனது வழக்கமான கம்பேக்கைக் கொடுத்துள்ளது. எந்தெந்த அணிகள் சிறப்பாகச் செயல்பட்டன, எந்தெந்த அணிகள் ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என யோசிக்க வைத்தன… ஒரு விரிவான அலசல்! IPL 2022 டெல்லி கேப்பிடல்ஸ் பந்திக்கு முந்து என்பது போல, டெல்லி கேப்பிடல்ஸ் ஏலத்தில் முந்தி தனக்குத் தேவையான வீரர்களை மொத்தமாக அள்ளிக் கொண்டது எனச் சொல்லலாம். முதல் நாள் ஆகட்டும், இரண்டாவது … Read more

"அந்த ஒரு சீன்ல நான் வர்றதுக்காக வடிவேலுண்ணே அவ்வளவு போராடினார்!"- நெகிழும் அமிர்தலிங்கம்

வடிவேலுவின் காமெடி டீம்… இயக்குநர் ஹரியின் படங்களில் சின்ன ரோலாக இருந்தாலும் செம ஸ்கோர் செய்பவர் அமிர்தலிங்கம். அடிக்கடி படங்களில் பார்த்திருக்கலாம். சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக 500 படங்களில் நடித்திருப்பவரான அமிர்தலிங்கத்திடம் பேசினேன். “எதாவது ஒரு துறையில சாதிக்கணும்னு விரும்பினேன். சினிமா என் லட்சிய பயணம். அதுல இத்தனை வருஷங்களாக இருக்கறது சந்தோஷமா இருக்கு. நாம மறைந்தாலும் ‘இப்படி ஒருத்தர் இருக்கார்’னு மத்தவங்க சொல்லணும்னு விரும்பினேன். ஆரம்ப காலங்கள்ல மேடை நாடகங்கள்ல இருந்தாலும், 1980க்கு பிறகுதான் … Read more

Mr.IPL: சேப்பாக்கம் முதல் சென்சூரியன் வரை… ரெய்னாவின் வெறியான 5 இன்னிங்ஸ்கள்!

Mr.IPL, சின்ன தல என ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் கரியர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. சென்னை அணியுமே கூட கைவிரித்துவிட்டது. ஒரு மாபெரும் சகாப்தமே கண்முன் சரிந்ததை போல இருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக சென்னை அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. அதை கொண்டாடும் வகையில் சென்னை அணிக்காக ரெய்னா ஆடிய டாப் 5 இன்னிங்ஸ்கள் இங்கே… 87(25) … Read more

`என் சகோதரர் ராகுல் காந்திக்காக உயிரையும் தியாகம் செய்வேன்!" -யோகிக்கு பிரியங்கா காந்தி பதில்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் உள்ளதாகவும், அந்த மோதல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் பிளவுபடுத்தி வருவதாகவும் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி – யோகி ஆதித்யநாத் பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய … Read more

`மனசெல்லாம் பட்டாம்பூச்சி பறக்க!' – தமிழ் சினிமாவின் Cute Love Proposal Scenes!

பாம்பே “உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன். நீ எனக்காக வருவியா” என அரவிந்த்சாமி, மனிஷாவிடம் படகில் கேட்கும் கேள்வி 90’ஸ் கிட்ஸின் விருப்பமான லவ் ப்ரோபோசல் சீன். அலைபாயுதே “நான் உன்ன விரும்பல. உன் மேல ஆசைப்படல. நீ அழகா இருக்கனு நினைக்கல. ஆனால் இதுலா நடந்துடுமோனு பயமா இருக்கு” என மாதவன், ஷாலினியிடம் நகரும் ட்ரைனில் ப்ரபோஸ் செய்வது எவர்கிரீன் காட்சி. மின்னலே “இனிமேல் என்னால பொறுத்துக்க முடியாது ப்ளீஸ். உனக்கு என்ன பிடிச்சுருக்கானு சொல்லு” … Read more

IPL Auction 2022: எல்லைச்சாமி சிஎஸ்கேவுக்கு இல்லை சாமி… டு ப்ளெஸ்ஸி இல்லாத சென்னை, இனி எப்படி?!

பொதுவாக, தன்னுடைய அணியைச் சேர்ந்த வீரர் என்பதை ஒட்டி ஏற்படும் வீரர்களுடனான ரசிகர்களின் மனநெருக்கம், சமயத்தில் எல்லைகளைத் தாண்டிப் பயணிக்கும். தங்களது அணியில் அவர்களுடைய எழுச்சியினை, சாதனையை, அணிக்கு அவர்கள் ஈட்டித் தந்த பெருமையினை, புல்லரிக்க, கண்கள் வேர்க்கக் கொண்டாடி, அணுஅணுவாய் ஆராதித்தவர்களுக்கு, அவர்களை வேறு அணிக்குள் பொருத்திப் பார்க்க வேண்டிய சூழல் வரும் போது, அது ஆறாத வலியினை நெஞ்சினில் ஏற்படுத்தும். ஏறக்குறைய இருபது ஆண்டுகள், இணைந்து பயணித்த பார்சிலோனைவை விட்டு மெஸ்ஸி வெளியேறிய போது, … Read more

“முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தா, என் ஆட்டமே வேற..!" – ஹேம மாலினி ஷேரிங்ஸ்

`பாலிவுட்டில் கால் பதித்துவிட வேண்டும்…’ – இந்திய சினிமா கலைஞர்கள் பெரும்பாலானோருக்கும் இந்த ஆசை இருந்தாலும், அந்தக் கனவு, திரையுலகில் முத்திரை பதிக்கும் சிலருக்கே நனவாகும். அந்தப் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்திலுள்ள ஹேம மாலினி, தென்னிந்திய சினிமாவிலிருந்து சென்று பாலிவுட்டில் கோலோச்சியவர். ஹேம மாலினி பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் ஜோடியாக நடித்தும், நடனத்திறமையாலும் ரசிக்க வைத்ததுடன், அடிதடி, சண்டைக்காட்சிகளிலும் நடித்து ஆச்சர்யப்படுத்தியவர். தமிழில் ஹிட் அடித்த `அன்னை ஓர் ஆலயம்’, `வாணி ராணி’, ‘குரு’ … Read more