கோலிவுட் ஸ்பைடர்: பாலா படத்தில் சூர்யாவின் புது கெட்டப்; கைகோக்கும் வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன்!

இளையராஜாவும் கங்கை அமரனும் சந்தித்தது வைரலாக, அடுத்து அவர்கள் குடும்பங்களிலும் சந்தோஷம் பெருகியிருக்கிறது. இந்தப் பெரிய சந்திப்பிற்குப் பிறகு இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு கூடலுக்கு ஏற்பாடு செய்யலாமா என்று கேட்க சகோதரர்கள் இருவருமே ஓகே சொல்லிவிட்டார்கள். இந்த மாதக் கடைசியில் எல்லோரும் ஒரே இடத்தில் குழுமி சந்தித்துப் பேசி, இத்தனை நாள் இடைவெளியைக் குறைக்கத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். கிழக்கு கடற்கரைச் சாலையில்தான் அந்தச் சந்திப்பு நடக்க இருக்கிறது. அதனால் இந்த மாதத்தின் கடைசி மூன்று … Read more

`லன்ச் டைம்’ – ரெய்டாக இருந்தாலும், போராட்டமாக இருந்தாலும்… இது வேலுமணி கவனிப்பு!

கரூர் தி.மு.கவினரை வெளியேற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏக்கள் போலீஸாரால் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டனர். பொதுக் கூட்டங்களின் போது மட்டுமல்லாமல், பிரச்னைகளின் போதும் பிரமாண்டம் காட்டுவது வேலுமணியின் ஸ்டைல். வேலுமணி போராட்டம் “வெளியூர்ல இருந்து கத்தி, பிளேடு பொருள்களோட குண்டர்கள இறக்கிருக்காங்க!” – கொதிக்கும் வேலுமணி கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர் வீட்டில் ரெய்டு நடத்தியபோது கூட, அங்கு … Read more

நானே வருவேன் பட அப்டேட்; செல்வராகவனும் நடிக்கிறாரா?

தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் ஷுட்டிங் ஊட்டியில் மும்முரமாக நடந்து வருகிறது. ‘மயக்கம் என்ன’ படத்திற்குப் பிறகு இப்போதுதான் அண்ணனின் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். செல்வராகவனும் இப்போது ‘சாணிக் காயிதம்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடிகராகவும் களம் இறங்கிவிட்டார். செல்வராகவன் இயக்குநராக ஹிட் கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’, ‘என்.ஜி.கே.’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என எதுவும் வசூலை குவிக்கவில்லை என்பதால் செல்வா- தனுஷ் … Read more

லீ மெரிடியன் ஹோட்டல் கையகப்படுத்தும் திட்டம் ரத்து; மேல்முறையீட்டில் ஜெயித்த அப்பு ஹோட்டல்ஸ்!

பிரபல லீ மெரிடியன் ஹோட்டல் வாராக்கடன் காரணமாக திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு விற்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்த அப்பு ஹோட்டல்ஸ் அதில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை கிண்டி, கோவை ஆகிய இடங்களில் லீ மெரிடியன் ஹோட்டலை நடத்திவரும் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமிக்கு சொந்தமானதாகும். பழனி ஜி.பெரியசாமி மருத்துவமனையாக மாறப்போகும் பிரபல … Read more

மைனஸ் 15 டிகிரி குளிரில் மக்கள்; ரகசிய ஹீட்டர் மேல் நின்று குடும்பப் பெருமை பாடிய கிம் ஜாங் உன்!

மறைந்த முன்னாள் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் இல்-ன் 80-வது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை, சாம்ஜியோன் நகரில் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்களை உறையவைக்கும் கடும் குளிரில் நிற்கவைத்து அவருடைய தந்தையின் புகழ் பற்றிப் பேசியிருக்கிறார். கிம் தனது குடும்பத்தைப் பற்றி சுமார் 30 நிமிடங்கள் வரை அந்த நிகழ்ச்சியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குளிர் `மைனஸ் 15 டிகிரி செல்சியஸ்’ என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி … Read more

"தாத்தா நிஜத்திலும் என்னை பேத்தி மாதிரி கவனிச்சிப்பார்!" – `கடைசி விவசாயி' ரேச்சல் ரெபேக்கா

‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பினால் பலரது பாராட்டையும் பெற்றவர், ரேச்சல் ரெபேக்கா. அடிப்படையில் ஆயுர்வேத மருத்துவராக இருந்தாலும் நடிப்பின் மீதுள்ள காதலால் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். ரேய்ச்சல் மணிகண்டன் சாரை நண்பரா ரொம்ப நாளாத் தெரியும். அவர்கிட்ட சும்மா பேசும்போது நடிப்பில் ஆர்வம் இருக்கு என்கிற விஷயத்தை சொல்லியிருந்தேன். அவர் இந்தப் படம் வந்தப்போ என்னை ஞாபகம் வச்சு கூப்பிட்டார். ஆரம்பத்திலேயே இது முக்கியமான கதாபாத்திரம்னு தெரியும். நடிப்புன்னா என்னன்னு மட்டும் … Read more

விவசாயிகள் கோரிக்கையை ஏற்ற கர்நாடக அரசு; கன்னட மொழியில் சோலார் ஒப்பந்த நகல்!

இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான பாவகடாவின் ஒப்பந்த நகல் ஆங்கிலத்திலிருந்து கன்னட மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறித்த புரிதலை இது விவசாயிகளுக்கு வழங்கும். மேலும் விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒப்பந்தத் தொகையை உயர்த்துவது குறித்தும் கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக சூரிய எரிசக்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2016-ம் ஆண்டில் கர்நாடக அரசானது, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டது. அதற்காகப் பாவகடா பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள விவசாயிகளின் நிலங்களைக் குத்தகைக்கு எடுக்கவிருப்பதாகக் … Read more

உக்ரைன் விவகாரம்: “பேச்சுவார்த்தை மட்டுமே இதற்குத் தீர்வு!" -ஐ.நா-வில் இந்தியா கருத்து

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் பதற்றம், உலக நாடுகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அவசர கூட்டம் ஒன்றை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடத்தியுள்ளது. இதில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, “அதிகரித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றத்தைத் தணிக்க ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவார்ந்த நடவடிக்கைகளைத் தான் நாம் மேற்கொள்ள வேண்டும். அது தான் காலத்தின் தேவையும் கூட. உலக நாடுகளின் அமைதியைப் பாதுகாப்பதே நோக்கமாக ஏற்று, … Read more

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்… என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாப்பதற்கான பெட்டகத்தை 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன், கூடங்குளம் அணுஉலை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்த பதிலில், “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறுசுழற்சி மையத்துக்கு எடுத்துச்செல்லப்படும். … Read more

நட்சத்திரப் பலன்கள் – பிப்ரவரி 18 முதல் 24 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டைமூலம் மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link