புதுக்கோட்டை: இளைஞர்களுக்குக் கஞ்சா சப்ளை! – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

புதுக்கோட்டைப் பெரியார் நகரைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்(33). இவர் புதுக்கோட்டை நகராட்சி 23-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் தான், கடந்த 13-ம் தேதி புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி முன்பு கார்த்திக் என்ற இளைஞர் சிகரெட்டில் கஞ்சாவை இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்திருக்கிறார். இதையடுத்து, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையிலான போலீஸார் இளைஞரைப் பிடித்து விசாரணை … Read more

பஞ்சாப்: `தேர்தல் நடத்தை விதிகள்… ரூ.449.55 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!’ -தேர்தல் ஆணையம்

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 20-ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை வெளியிட்ட நாளிலிருந்தே, அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடத்தில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் அளிக்கக்கூடாது, வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடங்களைச்சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் பிரசாரம் நடத்த தடை, வாக்கு பதிவு நடைபெறும் இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மட்டுமே அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி போன்ற தேர்தல் நடத்தை விதிகள் பஞ்சாப்பில் அமலில் … Read more

இன்றைய ராசி பலன் | 17/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

இளையராஜா-கங்கை அமரன்: 13 வருடங்களுக்குப் பின் பேசிய அண்ணன்- தம்பி;பின்னணி இதுதான்! #VikatanExclusive

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் உள்பட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதற்கிடையில் சில வருடங்களாக இளையராஜாவும் அவரின் சகோதரர் கங்கை அமரன் பேசிக் கொள்வதில்லை என்ற செய்திகள் வெளியாகின. தற்போது இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கங்கை அமரனின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் அந்தப் புகைப்படத்தைப் … Read more

`பயிற்சிக்குப் பிறகு ஒரு ரஷ்ய வீரர் கூட உக்ரைன் எல்லையில் இருக்கமாட்டார்!' – பெலாரஸ் அமைச்சர் பேட்டி

உக்ரைன் – ரஷ்யா விவகாரம் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த விவகாரத்தில் ரஷ்யா தரப்பிலிருந்து தீர்க்கமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மேலும் பல நாடுகளும் உக்ரைனில் வசித்து வரும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. நேற்றுகூட ரஷ்யா, உக்ரைன் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 1.3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களில் சில பகுதியினரை தங்கள் முகாம்களுக்கே திருப்பியனுப்பியதாக கூறியது. ஆனால், அமெரிக்காவோ, ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து முழுமையான உறுதியான … Read more

போயஸ் கார்டன் விவகாரம்: ரூ.68 கோடி டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற தமிழக அரசு மனுத் தாக்கல்!

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்ற நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது எனக்கூறி அவசரச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு முடிவு செய்தது. போயஸ் கார்டன் வீடு #VikatanExclusive எனவே, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி, வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா … Read more

ஹிஜாப் விவகாரம்: `இவர்களின் தாத்தாக்கள் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை' -சுப்ரமணியன் சுவாமி

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், கர்நாடகாவில் நேற்று பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப்பை கழற்றிய பிறகே பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கர்நாடகாவில் உள்ள ஷிவமோக கல்லூரியில், 30 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் வருவோம் எனக் கூறி வகுப்பை புறக்கணித்தனர். ஹிஜாப் சர்ச்சை இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பாக … Read more

உள்ளாட்சி ரேஸ்: அடித்து ஆடும் அதிமுக; குஸ்தி சண்டையில் திமுக! -திருப்பூர் மாநகரம் யாருக்கு?

திருப்பூர் மாநகராட்சி ஆளும்கட்சியாக இருந்தாலும் தி.மு.க-வுக்கு கொங்கு மண்டலம் எப்போதும் கண்டம்தான். தற்போதைய அமைச்சரவையில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தி.மு.க-வுக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். பார்ப்பதற்கு பவர்புல்லாக தெரிந்தாலும், கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டும்தான் தி.மு.க வென்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் `ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!’ – அரசுக்குக் கடிதம் எழுதிய திருப்பூர் கான்ட்ராக்டர் அதில் 2 தொகுதிகள் புறநகர் பகுதியை சேர்ந்தவை. மாநகராட்சி பகுதிகளில் … Read more

அண்ணியை அடித்த `லட்சிய நடிகர்' எஸ்.எஸ்.ஆர்., மகள்; அதிகாலையில் விசாரித்த முதல்வர் அலுவலகம்?!

‘லட்சிய நடிகர்’ என தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப் ஶ்ரீபட்ட மறைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் வீட்டுச் சண்டை காவல் நிலையம் வரை வந்து பரபரப்புச் செய்தி ஆகியிருக்கிறது. எம்.ஜி.ஆர்., நம்பியார் காலத்தில் சினிமாவில் நடித்து, பிறகு அரசியலிலும் ஈடுபட்ட மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. எஸ்.எஸ்.ஆர் இருந்த போது மட்டுமல்ல, அவர் மறைந்து வருடங்கள் பல கடந்தும் இன்றும் கூட்டுக்குடும்பமாகவே வசித்து வருகின்றனர், அவரது வாரிசுகள். எஸ்.எஸ்.ஆர். மகள் லட்சுமி, எஸ்.எஸ்.ஆரின் மகன் கண்ணனின் … Read more

நாட்டின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு விரைவில் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்த நிலையில், நாட்டின் இளம் மேயராகப் பொறுப்பேற்றார். 21 வயதில் ஆர்யா ராஜேந்திரன் மேயராகப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், அவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தொகுதி எம்.எல்.ஏ சச்சின் தேவ் என்பவரைத்தான் ஆர்யா கரம்பிடிக்க உள்ளார். ஆர்யா ராஜேந்திரன் சிறுமியாக இருக்கும்போதே சி.பி.எம் அமைப்பின் பால சங்கத்தில் … Read more