HBD Selvaraghavan: ஃபேன்டஸி உலகங்களின் கிரியேட்டர் செல்வராகவன்! | Visual Story

செல்வராகவன் ‘துள்ளுவதோ இளமை’ 2002 இல் வெளியாகிறது. இயக்கம் கஸ்தூரிராஜா என்றிருந்தாலும் படம் அவரது போல இல்லை. திரைக்கதையில் இருந்த மேஜிக் வேறு ஒருவருடையது. அது செல்வராகவனுடையது. செல்வராகவன் 2003 இல் ‘காதல் கொண்டேன்’. தனுஷின் பாத்திரப்படைப்பும் சரி, அவ்வளவு சிக்கலான கதையை இயக்குநராகக் கையாண்ட விதமும் சரி, இவரின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன. செல்வராகவன் அதற்கு அடுத்த ஆண்டு ‘7ஜி ரெயின்போ காலனி’ படம். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருந்தது படம். ‘கண் … Read more

`இது ஆரம்பம்தான்!' – பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அமைப்புகளுடன் இணைந்துள்ள நடிகை யாமி கௌதம்

பாலிவுட் நடிகை யாமி கௌதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் மறுவாழ்வுக்காகவும் பணியாற்றுவதற்காக, இந்தியாவில் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் `மஜ்லிஸ்’ (Majlis)’ மற்றும் `பாரி (Pari)’ ஆகிய இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளார். பாலிவுட் நடிகை யாமி கெளதம் இந்தி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் `மஜ்லிஸ்’ மற்றும் `பாரி’ ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களில் இணைந்துள்ளார். யாமி கவுதம் … Read more

சசிகலாவை சந்தித்துப் பேசிய ஓ.ராஜா உட்பட பலர் அதிமுக-விலிருந்து நீக்கம்!

நடந்த முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க ஒரு மாநகராட்சியைக் கூட கைப்பற்றாமல் படுதோல்வியைச் சந்தித்தது. இதன் விளைவாக மீண்டும் அ.தி.மு.க-வில் கழக நிர்வாகிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை கட்சியில் சேர்க்கவேண்டும் என்று ஒரு அந்தக் கட்சியில் ஒரு தரப்பினர் சமீப நாள்களாக வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். அண்மையில் கூட ஓ.பி.எஸ் வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் சேர்த்தாலே எல்லா பிரச்னையும் முடிந்துவிடும் என்று அ.தி.மு.க தேனி … Read more

முன்னாள் அமைச்சர்… 23 ஆண்டுகள் மாவட்டச் செயலாளர் – குமரி சுரேஷ்ராஜன் பதவிநீக்கப் பின்னணி இதுதான்!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சுமார் 23 ஆண்டுகள் பதவி வகித்தவர் சுரேஷ்ராஜன். 1996-ல் எம்.எல்.ஏ ஆகி இளம் வயது அமைச்சராக வலம்வந்தார் இவர். முதலில் இளைஞரணி பொறுப்பில் இருந்தவர், பின்னர் 1998-ல் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரானார். நேற்று நாகர்கோவில் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் சுரேஷ்ராஜனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என அறியப்பட்ட சுரேஷ்ராஜனிடம் இருந்து திடீரென மாவட்டச் … Read more

“நீங்க எங்களுக்கு கெடச்ச பொக்கிஷம்!" – தஞ்சை மாநகராட்சி ஆணையரை பாராட்டி நெகிழ்ந்த மேயர்

தஞ்சாவூர் மாநகராட்சி மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த சண்.இராமநாதன், துணை மேயராக டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என மேயரும், தஞ்சையின் பொக்கிஷம் என துணை மேயரும் ஆணையரை பாராட்டி வாழ்த்தி பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் திமுக மேயர் சண்.இராம நாதன்,ஆணையர் சரவணக்குமார் தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில், தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் 40 வார்டுகளிலும், அ.தி.மு.க 7 இடங்களிலும், சுயேச்சைகள் … Read more

Doctor Vikatan: தினமும் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பழக்கத்தை மாற்ற முடியாதா?

எனக்கு இனிப்புகள் பிடிக்கும். தினமும் ஏதேனும் ஒருவேளையாவது இனிப்பு சாப்பிட வேண்டும். இதனால் எடையும் அதிகரிக்கிறது. ஆனால் இனிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இந்தப் பழக்கத்தை நிறுத்த என்ன வழி? – குமார் (விகடன் இணையத்திலிருந்து) ஷைனி சுரேந்திரன் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். “ஆரோக்கியமாக வாழ வேண்டும், எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைக்கிற பலருக்கும் இப்படியொரு சவால் இருப்பதைப் பார்க்கலாம். ஆனாலும் அதை எதிர்கொள்ள சில … Read more

இன்றைய ராசி பலன் | 05/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

பிரதான கட்சிகளை வாஷ் அவுட் செய்தும், இறுதியில் ட்விஸ்ட்… குலுக்கலில் இரணியலைக் கைப்பற்றிய பாஜக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இரணியல் பேரூராட்சியில் தி.மு.க, அ.தி.மு.க, கங்கிரஸ் என பிரதான கட்சிகளை வாஷ் அவுட் செய்து அமோக வெற்றி பெற்று கெத்து காட்டியிருந்தது பா.ஜ.க. மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் பா.ஜ.க வென்றது. 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றார்கள். அதிலும் 4-வது வார்டில் தி.மு.க முன்னாள் கவுன்சிலர் முருகன் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒரு ஓட்டு வாங்கியதை ‘ஒத்த ஓட்டு தி.மு.க’ என ட்ரெண்ட் செய்து தமிழக அளவில் கவனம் பெற்றிருந்தது இரணியல் … Read more

“பதவியை ராஜினாமா செய்ய முடியாது..!" – முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சேர்மனின் கணவர் பதில்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று நடைப்பெற்றது. அதில் தி.மு.க தலைமையால் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில், தி.முக-வினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அதுகுறித்து தி.மு.க-விடம் கூட்டணிக் கட்சியினர் முறையிட்டு வரும் நிலையில், “கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தை காக்க வேண்டுமென முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவு … Read more