பூமியை சிறுகோள் தாக்கியதால் உயிரிழந்த டைனோசரின் புதைபடிமம்!

சிறுகோள் பூமியைத் தாக்கியதில் கொல்லப்பட்ட டைனோசரின் ‘பாதுகாக்கப்பட்ட’ புதைபடிவத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறுகோள் பூமியைத் தாக்கிய காலத்தில் உலகில் உயிருடன் இருந்ததாகக் கூறப்படும் டைனோசரின் புதைபடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடாவில் சிறுகோள் தாக்கப்பட்ட இடத்திலிருந்து 3,000 கிமீ தொலைவில் உள்ள வடக்கு டகோட்டாவில் உள்ள டானிஸில் உள்ள ஒரு புதைபடிவ தளத்தில் தோலால் மூடப்பட்ட தெஸ்செலோசரஸ் என்னும் டைனோசரசின் மூட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சிறுகோள் ஒன்று பூமியில் மோதியபோது  … Read more

காளான்கள் தங்களுக்குள் பேசுகின்றன; ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்

மரங்களிலும், செடிகளிலும் உயிர்கள் இருப்பது பல  ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. விலங்குகளும் பரஸ்ரம், அவைகளுக்கான சொந்த மொழியில் பேசிக் கொள்கின்றன. இந்நிலையில், இப்போது  வெளிவந்துள்ள ஒரு புதிய ஆராய்ச்சியில், காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. கேட்பதற்கு வினோதமாகத் தோன்றினாலும், ஒரு முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு, காளான்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் என்பது தெரிய வந்துள்ளது. காளான்கள் தங்களுக்குள் பேசும் போது 50 வார்த்தைகளை பயன்படுத்துகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து மேற்கு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது … Read more

இந்தியா மூத்த சகோதரர் – இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா

இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் அனைத்து விண்ணை முட்டும் அளவு இருக்கிறது. அதுமட்டுமின்றி நாள் ஒன்றுக்கு 10லிருந்து 12 மணி நேரம்வரை மின்வெட்டும் ஏற்படுகிறது. இதனையடுத்து மக்கள் வீதியில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் ராஜபக்‌ஷே உள்ளிட்டோர்தான் காரணம். எனவே அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 40க்கும் … Read more

China Cyber Attack: இந்திய மின் நிலையங்களை கண்காணிக்கிறதா சீனா? அதிகரிக்கும் கவலை

புதுடெல்லி: லடாக் அருகே இந்திய பவர் கிரிட் அமைப்பில் சீனா ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. சமீபத்திய மாதங்களில் லடாக் அருகே உள்ள இந்திய பவர் கிரிட் அமைப்பை சீனா ஆதரவு அரசு ஹேக்கர்கள் தாக்கி வருவதாக கூறும் புலனாய்வு தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.   புதனன்று (2022, ஏப்ரல் 7) Recorded Future வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் இந்தியாவிற்கு எதிரான சீனாவின் இணைய உளவுப் போரின் ஒரு பகுதியாகும் என்று … Read more

கனடாவில் பரவும் ஜாம்பி நோய்…சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் ஆகிய மாகாணங்களில் மான்கள், கலை மான்கள், கடமான்கள் உள்ளிட்ட மான் வகைகள் இடையே வித்தியாசமான நோய் பரவி வருவதாக அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு எவ்வித சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த தொற்று 1960-களில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. கொலராடோ, கன்சாஸ், மின்னிசோட்டா உள்ளிட்ட 26 மாகாணங்களில் இந்த தொற்றுநோயின் தாக்கம் இருந்தது. கடந்த 1996-ம் ஆண்டு கனடாவில்  முதன்முதலாக … Read more

Israel: புளித்த பிரட்டினால் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் சிக்கலில் சிக்கியுள்ளார். அவரது கூட்டணி அரசாங்கத்தின் மிக முக்கியமான கூட்டாளியான இடித் சில்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவமனைகளில் உணவு வழங்குவது தொடர்பான விதிமுறைகள் குறித்து எம்பி சில்மான் இதனை செய்துள்ளார். ஜெருசலேம்: இஸ்ரேலில், ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்ததை அடுத்து,   பிரதமர் நஃப்தலி பென்னட்டின் அரசு சிறுபான்மை அரசாக மாறியுள்ளது. ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடித் சில்மான் ராஜினாமா செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  … Read more

"கணவரை கொல்வது எப்படி?" கதைபோல கணவரை கொலை செய்த பெண் எழுத்தாளர்!

நான்சி கிராம்ப்டன் ப்ரோபி என்பவர் ஒரு பெண் எழுத்தாளராவார். இவர்  “தி ராங் ஹீரோ”, “தி ராங் பிரதர்” மற்றும் “தி ராங் ஹஸ்பண்ட்” போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய புத்தகத் தொடரை எழுதி பிரபலமடைந்தார்.  நான்சி கிராம்ப்டன் ப்ரோபி தனது கணவர் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு “உங்கள் கணவரை எப்படி கொலை செய்வது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.  செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு இவரது கணவர் டேனியலின் உடல் போர்ட்லேண்டில் உள்ள ஒரேகான் … Read more

50 ஆண்டுகளாக போலீஸூக்கு தண்ணிகாட்டிய முதியவர் – சிக்கியது எப்படி?

இங்கிலாந்தை பொறுத்தவரை டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது கடும் தண்டனைக்குரியதாக கருதப்படுகிறது. அவ்வாறு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அதிகளவில் விதிக்கபடும். இந்நிலையில், 70 வயதாகும் முதியவர் ஒருவர் இதுவரை லசென்ஸ் எடுக்காமல் வாகனம் ஓட்டி வந்துள்ளார். சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் ஒருமுறைகூட போலீஸிடம் சிக்கியதாக பதிவுகளும் இல்லை.  டெஸ்கோ எக்ஸ்ட்ரா ஸ்டோர் அருகே முதியவரை டிராபிக் போலீஸார் பிடித்து விசாரித்தபோது இந்த உண்மை அவர்களுக்கு தெரியவந்தது.  மேலும் படிக்க | Aadhaar: உங்கள் ஆதார் அட்டையை வேறு … Read more

உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

உக்ரைனின் தாக்குதலில் பல ரஷ்ய நகரங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், புச்சா நகரின் தெருக்களில் மக்களின் பாதி எரிந்த உடல்கள் காணப்படும் காட்சிகள் உலகை உலுக்கியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் நடந்து 42 நாட்கள் கடந்துவிட்டன. குறைந்தபட்சம் 410 பொதுமக்களின் உடல்கள் தலைநகரில் (கிய்வ்) அங்கும் இங்கும் சிதறிக் கிடப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்ய ராணுவம் கியேவ் நகரை விட்டு வெளியேறியது. மற்ற நகரங்களிலும் இதே கதைதான். பின்வாங்கும் ரஷ்ய இராணுவம் … Read more

பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும் இலங்கை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியுள்ளது. எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் அபாயம் உள்ளது. இலங்கையில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ள நிலையில், அரசியல் நெருக்கடியை தீர்க்க பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்துவருகின்றனர். இன்றும் (ஏப்ரல், 6ம் தேதி), நாளையும் (ஏப்ரல், 7ம்தேதி) நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன்படி 9 ஆவது நாடாளுமன்றத்துக்கு 2025 வரை … Read more