டெஸ்லா அதிகாரியுடன் ரகசிய உறவு… 9 வது முறையாக தந்தை ஆனார் எலன் மஸ்க்!

டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் உலகமே திரும்பி பார்த்த எலன் மஸ்க்கின் பக்கம் அண்மை காலமாக ஊடகங்கள் தங்களது கழுகு பார்வையை செலுத்தி வருகிறது. சமீபத்தில் அவரது முதலாவது வாரிசான சேவியர் மஸ்க் தனது பெயரை மாற்றிக்கொண்டு, பாலினத்தையும் மாற்றிக்கொண்டார். பின்னர் அவரது தந்தையுடனான உறவைs முறித்துக்கொள்வதாக சேவியர் தெரிவித்தார். இதனால் சில காலம் அவரது பேச்சு இணையத்தில் சுற்றி வந்தது. பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் குழுவின் பெண் பணியாளரிடம் எலன் மஸ்க் தன் … Read more

பல நூறு அடி உயரத்தில் கிரேனில் தொங்கிய ஊழியர் – திகைப்பூட்டும் வீடியோ

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் கிரேனில் சிக்கிக்கொண்டதால் அவர் பல நூறு அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கினார். இதனைத் தொடர்ந்து சக ஊழியர்கள அவரை பத்திரமாக தரையிரறக்கினர். அவருக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை. ஊழியரின் கை கிரேனுடன் சிக்கிக் கொண்டதால் இந்த விபத்து நேர்ந்ததாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் படிக்க | அமைச்சர்கள் ராஜினமா… சிக்கலில் இங்கிலாந்து … Read more

அமைச்சர்கள் ராஜினமா… சிக்கலில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனின் நிதி அமைச்சரான ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் செவ்வாயன்று ராஜினாமா செய்தனர். பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அமைச்சர் ஒருவர் மீதான பாலியல் முறைகேடு புகாரை உள்ளடக்கிய சமீபத்திய ஊழலுக்கு மன்னிப்பு கேட்கு வகையில், எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசு பதவியில் நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  மனசாட்சியுடன் பணியை தொடர முடியாது என்றும் அரசாங்கம் … Read more

Viral News: வயிற்றில் இருந்த ஆணி, பேட்டரி, நாணயங்கள்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

 நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளைஞர் ஒருவர், நிவாரணம் பெர மருத்துவரிடம் சென்றுள்ளார்.  மருத்துவமனைக்குச் சென்று பரிசோத்த பின் டாக்டர்கள் எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தனர். ஆனால் எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  பாதிக்கபப்ட்டவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உள்ளே இருந்த சுமார் 233 பொருட்களை அகற்றினர். இதுபோன்ற சம்பவங்கள் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். துருக்கியின் இபெக்கியோலுவில் வசிக்கும் புர்ஹான் டெமிரின் இளைய சகோதரர் தான் கடும் … Read more

Aliens Search: ஏலியன்களை தேட யூரோபாவில் களமிறங்கும் நீச்சல் ரோபோக்கள்

ஏலியன்களைத் தேடும் முயற்சிகள் அறிவியல் உலகில் முக்கியமான ஒன்றாக மாறிவிட்ட்ட காலம் இது. அதுமட்டுமல்லாமல், வேற்றுகிரகவாசிகளைத் தேடுவது மனித குலத்தின் விருப்பமான பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது. பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு காரணம், நமது கிரகத்தின் பெரும்பகுதியில் தண்ணீர் இருப்பதுதான். எனவேதான், பிற கிரகங்களில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை ஆராயும்போது நீர் இருக்கிறதா என்பதை தேடுவது முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதனால்தான், பிற கிரகங்களில் உயிரினங்கள் அதாவது குறிப்பாக வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) இருக்கிறார்களா என்று தேடும் போதும், ​​தண்ணீர் இருப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானதாக … Read more

உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு முந்தைய ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வாதாரக் குறியீட்டிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது.  உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை EIU வரிசைப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் 10 உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் … Read more

சுதந்திர தினப் பேரணியில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி

அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று சிகாகோ நகரில் பேரணி நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள கட்டடத்தில் இருந்து கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் காரில் தப்பி ஓடிய நிலையில், போலீசார் அவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து உயர் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நபரின் பெயர் ராபர்ட் க்ரிமோ ஆகும். அவருக்கு 22 வயதே ஆகிறது. … Read more

CoVarScan: கொரோனாவின் அனைத்து பிறழ்வுகளையும் கண்டறியும் புதிய சோதனை

கொரோனா வைரஸின் (COVID-19) தற்போதைய அனைத்து வகைகளையும் விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிய அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய சோதனையை உருவாக்கியுள்ளனர். இந்த சோதனைக்கு  CoVarScan என்று பெயரிடப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸில் உள்ள எட்டு ஹாட்ஸ்பாட்களின் அடிப்படையை கண்டறிவதன் மூலம், SARS-CoV-2 இன் தற்போது இருக்கும் கொரோனாவின் அனைத்து வகைகளையும் சில மணிநேரங்களில் கண்டறிய முடியும். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் (UT) தென்மேற்கு மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் 4,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்து, இந்த சோதனை … Read more

Russia – Ukraine Crisis: உக்ரைன் அணு ஆயுதத்தை உருவாக்குவதே தீர்வா

லண்டன்: உக்ரைன், அணு ஆயுதங்களை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. உலகின் மிக அழிவுகரமான ஆயுதத்தை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்தினால்தான், ரஷ்யாவின் படையெடுப்பு எதிர்காலத்திலும் தொடராது என்று உக்ரைன் கருதுகிறது. லாஃப்பரோவில் உள்ள சர்வதேச வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் டாக்டர் பால் மாட்ரெல், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அணு ஆயுதக் களஞ்சியத்தை நிறுவுவது ரஷ்யாவின் தாக்குதலைத் தடுக்க ஒரு நல்ல வழி என்று உக்ரைன் நம்புவதாக அவர் கூறுகிறார்.  ரஷ்ய அதிபர் புடினின் போர் ஆர்வத்தை … Read more

Viral Video: விண்வெளியில் சேட்டிலைட் எடுத்த செல்ஃபி….

2013 ஆம் ஆண்டில், ‘செல்ஃபி’ என்ற வார்த்தை  ஆக்ஸ்போர்டு அகராதிகளின் ‘word of the year’ ஆகும். முந்தைய ஆண்டுகளில் இந்த கருத்து புதியதாக இருந்தது. ஆனால் அப்போதிருந்து, இந்த வார்த்தையும் செல்ஃபி புகைப்படங்களும் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட வார்த்தையாகவும் அங்கமாகவும் ஆகி விட்டது.  நாம் எந்த இடத்திற்கு போனாலும், அங்கிருக்கும் இயற்கை சூழ்நிலையில்  செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது. குடும்ப விழாக்களின் போது, செல்ஃபியைக் கிளிக் செய்யாதவர்கள் யாராவது உண்டா என்ன. நாம் … Read more