மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவழியை தூக்கிலிட்ட சிங்கப்பூர் அரசு! காரணம் என்ன?

மலேசியாவைச் சேர்ந்த இந்தியர் நாகேந்திரன் தர்மலிங்கம், 34 வயதான மன வளர்ச்சி குன்றி நபர் ஆவார்.  இவர் 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், தனது கால் தொடையில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை ஸ்டிராப்பால் கட்டிக்கொண்டு மறைத்து கடத்தி செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் (இது உலகின் மிகக் கடுமையான சட்ட திட்டம்) 15 கிராமிற்கு அதிகமாக போதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும் … Read more

ட்விட்டரால் திசை மாறிய எலான் மஸ்க்..ஒரே நாளில் சரிந்த டெஸ்லா பங்குகள்

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும்  வாங்க முன்வந்தார். ஒரு பங்குக்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய அதே சமயம் அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ட்விட்டரை வாங்குவதற்காக … Read more

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசிற்கு கொரோனா தொற்று

கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், தான் வீட்டில் இருந்தபடியே பணிகளைத் தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொற்று இல்லை என பரிசோதனை முடிந்த பின்னரே அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  Today I tested positive for COVID-19. I have no symptoms, and I will continue to isolate and follow CDC guidelines. … Read more

குழந்தைகளை தாக்கும் மர்மக் காய்ச்சல்; அலட்சியப்படுத்த வேண்டாம்

உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் இன்று ஒரு மர்மமான நோயுடன் போராடி வருகின்றனர். இந்த நோயிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினால், அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.  இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும் இந்த மர்ம நோயால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக தி சன் செய்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வல்லுநர்கள் சில அறிகுறிகளை வெளியிட்டுள்ளனர் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும், இதனால் குழந்தைக்கு … Read more

பூமியை நெருங்கும் சிறுகோள்: பாதிப்பை ஏற்படுத்துமா? கண்காணிக்கும் நாசா

நாம் வாழும் பூமி கிரகமானது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயிரினங்களை வளர்த்திருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் பேரழிவு நிகழ்வுகளையும் பூமித்தாய் எதிர்கொண்டிருக்கிறாள். பூமியை பல்வேறு சிறுகோள்கள் அவ்வப்போது தாக்கிவந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய ஒரு சிறுகோள் ஒரே அடியில் கிரகத்தில் உள்ள பெரும்பாலான உயிரினங்களை அழித்துவிட்டது.  அந்த சிறுகோள் மோதலானது டைனோசர்கள் உட்பட பல உயிரினங்களை பூண்டோடு ஒழித்துவிட்டது. அந்த மாபெரும் அழிவுக்கு பிறகுதான் உலகில் பாலூட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும் படிக்க … Read more

எலான் மஸ்க் ட்விட்டருக்கு மிக பொருத்தமான நபர்: ஜாக் டார்ஸி

உலக பணக்காரர்களின் ஒருவரான எலோன் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கிக் கொண்டுள்ளார். அவர் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார். மஸ்க்கின் இந்த முடிவை ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி ஆதரித்துள்ளதோடு, ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்து ட்விட்டருக்கு ஏற்ற நபர் எலான் மஸ்க் என்று புகழ்ந்துள்ளார். மஸ்கின் மீது  நம்பிக்கையை வெளிப்படுத்திய ஜாக் டோர்சி எலோன் மஸ்க்  டிவிட்டருக்கு பொருத்தமான நபர் என்று ஜாக் டோர்சி தனது ட்வீட்டில் எழுதியுள்ளார். … Read more

கராச்சியில் குண்டு வெடிப்பு; 3 சீன நாட்டவர் உட்பட 4 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் பல்கலை கழகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 2 சீன பிரஜைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குண்டுவெடிப்பு காரணமாக மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கராச்சி பல்கலைக்கழகத்தில் மதியம் 1:52 மணியளவில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது என கூறப்படுகிறது. கராச்சி பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெடி விபத்துக்குள்ளான வேனில் ஏழு முதல் எட்டு பேர் இருந்ததாக … Read more

ட்விட்டரின் எதிர்காலம் உறுதியற்றது..ஊழியர்களிடம் மனம் திறந்த பராக் அகர்வால்

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும்  வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  ட்விட்டர் நிறுவனம் கைமாறவுள்ள நிலையில் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், ஊழியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது … Read more

எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட்

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்,  வாங்குவது உறுதியாகியுள்ளது. மஸ்க் கடந்த சில காலமாக ட்விட்டரை வாங்க முயற்சித்து வந்த நிலையில், தற்போது  ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.  ட்விட்டர் நிறுவனத்தை  44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின்  9.2 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில், தற்போது 44 பில்லியன் டாலருக்கு நிறுவனத்தையும் வாங்க ட்விட்டர் … Read more

9/11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் செய்ய திட்டமிட்டிருந்த தீவிரவாத தாக்குதல்

ரயில்களை தடம் புரள வைப்பதும்,  எண்ணெய் டேங்கர்களை தகர்ப்பதும் என உலக மக்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழித்துவிட  ஒசாமா பின்லேடனின் திட்டம் என்று தெரியவந்துள்ளது.  ஒசாமா பின்லேடன் என்ற உலகளாவிய பயங்கரவாதி (International Terrorist), 2001 இல் 3,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற சோகமான 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா மீது இரண்டாவது தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என்று தெரியவந்துள்ளது.    ஒசாமா பின்லேடனை, கொன்ற பிறகு அவர் பதுங்கியிருந்த இடத்தில் … Read more