49 சுற்றுலாத் தலங்களை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட ஏற்பாடு – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்டயனா கமகே.

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவற்றை சுற்றுலா வலயங்களாக வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். சுற்றுலாத்துறையில் இடம்பெறும் மோசடிகளையும், ஊழல்களையும் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தனியான குழுவொன்றை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் … Read more

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட 131652குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த 20 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. யாழ் மாவட்ட செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு:

அயன மண்டங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் நாட்டின் வானிலையைப் பாதித்து வருகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 30 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 29 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. அயன மண்டங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையைப் பாதித்து வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. … Read more

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வெற்றிகரமாக செயல்பட முடியாததனால் அரசாங்க பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பில் பாரிய தொழில் முரண்பாடு  உருவாக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை இப்பிரச்சனைக்கு பொருத்தமான அரசாங்க பல்கலைக்கழக கட்டமைப்பில் தரம் 12 காக இம் முரண்பாட்டை தீர்ப்பதற்கு அவசியமான அமைச்சரவை தீர்மானம்,  அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை மற்றும் தொழிற்சங்கங்களுடனான, கலந்துரையாடலின் பின்னர்  2024.04.01 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் பல்கலைக்கழக கட்டமைப்பில் கல்வி சாரா … Read more

ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்துவதன் பலனைப் படிப்படியாக பெற்றுக் கொள்கிறார்கள்…

நாணய மாற்றுவீதம் சந்தையில் காணப்படும் கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை விளங்கிக் கொள்வது மிக முக்கியமான விடயம் என  இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.  ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதன் பயனை படிப்படியாக மக்களுக்கு கிடைக்கப் பெறச் செய்துள்ளதாகவும், நாணயமாற்று வீதம் சந்தையின் கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை புரிந்து கொள்ளுதல் அவசியமானது என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.  ரூபாயின் பெறுமதியை பலப்படுத்துவதனால் கடனை மீளச் செலுத்தும் சுமை குறைவடைகின்றமை மிக முக்கியமானது. … Read more

பொலிஸ் ஒழுக்காற்று நடவடிக்கைளை அமுல்படுத்தல் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு சமர்ப்பிப்பு 

அதிகாரிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல், நிருவாக முரண்பாடுகளுக்கான தீர்வு மற்றும் சிபரசுகளை முன் வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுப்பதனால் அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு, கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுகளில் ஏற்படும் தாமதம் போன்ற நிர்வாக சிக்கல்கள் தொடர்பாக ஆராய்ந்து … Read more

கிளிநொச்சி  மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து வருகின்றமையால் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவித்துள்ளது.  தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான நிலைமை காரணமாக பொது மக்களின் நீர் பயன்பாடு வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நாளாந்தம்  அதிக நீரை சுத்திகரித்து வழங்க வேண்டிய நிலைமை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அதிகரித்துச் செல்லும்  அளவுக்கு ஏற்ப … Read more

“வசத் சிரிய 2024” புத்தாண்டு கொண்டாட்டம்

• வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள். “வசத் சிரிய 2024” தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வெகு விமரிசையாக (27) கொழும்பு ஷங்ரீலா விளையாட்டரங்கில் நடைபெற்றது. “வசத் சிரிய 2024” புத்தாண்டு அழகியாக அனுராதபுரம் மரதண்டகவல பிரதேசத்தை சேர்ந்த மாதவி பிரார்த்தனா மகுடம் சூடினார். இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பன்னிபிட்டியவை சேர்ந்த பிரபானி எதிரிசிங்க பெற்றுக்கொண்டார். “வசத் சிரிய 2024” புத்தாண்டு அழகனாக எச்.டீ.மியூரங்க மகுடம் சூடியிருந்ததோடு அந்த போட்டியில் இரண்டாம் இடத்தை … Read more

“கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வின் பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்‌ஷ, மருதானை – சுதுவெல்ல விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து (27) நடத்திய புத்தாண்டு நிகழ்வுகள் டீன்ஸ் வீதி சுற்றுவட்டாரத்தில் நடைபெற்றன. இதன் போதான பரிசளிப்பு நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றததோடு, முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட புத்தாண்டு அழகிகளுக்கு ஜனாதிபதியினால் மகுடம் அணிவிக்கப்பட்டது. அகில இலங்கை உடல் கட்டழகு போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் சைக்கிளோட்ட போட்டியில் … Read more

பொதுவான வானிலை முன்னறிவிப்ப

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல்28ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 28ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களில் சில இடங்களில் காலை … Read more