உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த கால்நடைகளின் மாதிரிகள், மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை கால்நடை வைத்திய ஆராய்வு நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கால்நடை புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் ,இவற்றின் மாதிரிகள் பேராதனை கால்நடை வைத்திய ஆராய்வு நிறுவகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில், இறைச்சி கடைகள் ஒருவாரகாலத்துக்கு மூடப்படுகிறது

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் இன்று முதல் ஒருவாரகாலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எம். மணிவண்ணன் அறிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக சில கால்நடைகள் இறந்துள்ளன.இவற்றின் இறைச்சி வகைகளை ஏனைய மாவட்டங்களிலுள்ள இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சி கூடங்களுக்கு எடுத்துச்செல்லக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.இதனை தடுக்கும்வகையில் கிழக்கு மாகாண ஆளூநர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமைவாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, … Read more

வடக்கின் பொருளாதாரத்திற்கான சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. – அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொறோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பலாலிக்கான விமான சேவை இன்று (12) மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை, வடக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மற்றும் அநுராதபுரம் பொலனறுவை போன்ற வட மத்திய மாகாணங்களும் நன்மை பயக்கவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், “அடிப்படையான வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவு சேவைகள் தற்போது … Read more

யாழ்ப்பாணத்திற்கும், சென்னைக்கும் இடையிலான நேரடி சர்வதேச பயணிகள் விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும், சென்னைக்கும் இடையிலான நேரடி சர்வதேச பயணிகள் விமான சேவை இன்று (12) மீண்டும் ஆரம்பமானது. சென்னையிலிருந்து இன்று (12) காலை புறப்பட்ட பயணிகள் விமானம் பகல் 11.20 மணியளவில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் சுமார் 25 பேர் பயணித்தாக தெரிவித்த நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் W.M.L.G.  வன்சேகர இந்த பயணிகள் விமானம் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் சென்னை நோக்கி புறப்படும் என்றும் கூறினார். சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரத்தில் … Read more

இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தங்கத்தின் விலை

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,716 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. … Read more

சர்வதேச பௌத்த பிக்குகளின் பிரதிநிதிகள் குழு சபாநாயகரைச் சந்தித்தது

சர்வதேச பௌத்த வலையமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் மற்றும் பிக்குனிகளின் குழு அண்மையில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களைச் சந்தித்திருந்தது. மியான்மார், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குனிகள் இந்தக் குழுவில் அங்கம் வகித்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பில், பாலின சமத்துவம், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டிய குழுவினர் மற்றும் இது தொடர்பான தேசிய கொள்கையைத் தயாரிப்பது போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதில் … Read more

காலநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை – சூறாவளி ஏற்படும் அபாயம்

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது … Read more

மாண்டஸ் சூறாவளியினால் இலங்கையில் பதிவான சேதவிபரங்கள் வெளியானது!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கடற்பகுதியில் ஏற்பட்ட ‘மாண்டஸ்’ சூறாவளியினால் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளியினால் வீசிய பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 5,640 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. சேத விபரங்கள் வெளியானது பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் புத்தளம் … Read more

யாழ். – சென்னை விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

யாழ் சர்வதேச பலாலி விமான நிலையத்திற்கும் ,சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் இன்று (12) ஆரம்பமாகிறது. இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகும் இந்த விமான சேவைக்கு அமைவாக , சென்னை விமான நிலையத்தில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அலையன்ஸ் ஏர் விமானம் இன்று காலை 10:50 அளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது. அதே விமானம் முற்பகல் 11:50 மணிக்கு சென்னைக்கு புறப்பட உள்ளதாக பலாலி … Read more

வடக்கு, கிழக்கு ,ஊவா மாகாணங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 டிசம்பர்12ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 டிசம்பர்12ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. புத்தளம்,அம்பாறை,மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் … Read more