7 தொடக்கம் 8 மணிநேர மின்வெட்டு மற்றும் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்

7 தொடக்கம் 8 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தை பரப்பி கட்டணத்தை அதிகரிக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தயாராகி வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கணக்கீடுகள் சரியானவையல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார கட்டண அதிகரிப்பு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சந்தர்ப்பத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை. 12 முறைமைகளின் அடிப்படையில் மின்சாரக் … Read more

காலநிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரித்தானியாவிடமிருந்து ஒத்துழைப்பு

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக இலங்கை எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டுவதாகவும் அதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான ஒத்துழைப்புகளை வழங்க பிரித்தானியா எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென்றும் இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வென்ஸ்டால் (Lisa Whanstall) தெரிவித்தார். காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் … Read more

வெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

குருணாகலில் மனைவியை கொடூரமாக கொலை செய்த நிலையில் கணவனும் தன்னுயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் கொகரெல்ல, வேகம பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்ததுடன், அந்த நபரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேகம மற்றும் திவுலங்கடவல பிரதேசத்தை சேர்ந்த 49 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார். குறித்த பெண் வெளிநாடு ஒன்றிலிருந்த நாடு திரும்பியுள்ள நிலையில் இந்த கொடூர செயல் அரங்கேறியுள்ளது. 17 வருடங்களாக … Read more

சிறுநீரக கடத்தல் மோசடி விவகாரம்! கொழும்பு தனியார் வைத்தியசாலை விளக்கம்

சிறுநீரக மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், உடல் உறுப்புக் கடத்தலுடன் எவ்வித தொடர்பும் இல்லை என கொழும்பு- பொரளை தனியார் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் இந்தக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலை கூறியுள்ளது. எனவே ஊடகங்கள் தெரிவித்த கூற்றுகளில் உள்ள உண்மைகளை விசாரணைகள் விரைவில் வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புவதாக குறித்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த மூன்று தசாப்தங்களாக உலகத்தரம் வாய்ந்த செயல்முறைகள், நடைமுறைகள், … Read more

வரலாறு காணாத யுத்தம்! மிகப்பெரிய தீப்பரவல்: அதிர்ச்சியளிக்கும் பாபா வாங்காவின் கணிப்புக்கள்

ஒரு நாடு தன்னுடைய நாட்டு மக்கள் மீதே உயிரியல் ஆயுதத்தை(கிருமி) பயன்படுத்தும் என்னும் இதன் காரணமாக பல உயிர்கள் பலியாகும் என்றும் பல்கேரியன் நாட்டை சேர்ந்த கண் தெரியாத பெண் தீர்க்கதரிசி பாபா வாங்கா  கணித்துள்ளார்.   உலகத்தில் எந்த எந்த நாடுகளில் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நபர்கள் கணித்து வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக பாபா வாங்கா காணப்படுகின்றார்.  இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் … Read more

கோட்டாபயவின் தவறான செயல்:வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானத்தினால் நாட்டிற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  கோட்டாபய ஆட்சி கோட்டாபய ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை நிறுத்தியுள்ளார். இதனால் நாட்டுக்கு 5,978 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இந்த திட்டம் பொருத்தமான செலவு குறைந்த போக்குவரத்து தீர்வாக இல்லை என்று குறிப்பிட்டு 2020 செப்டெம்பர் 21ஆம் … Read more

பிரித்தானியாவில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி! ரிஷி சுனக்கின் அதிரடி அறிவிப்பு

வேலைநிறுத்தம் இடையூறுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க “புதிய கடுமையான சட்டங்களை” உருவாக்கி வருவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். “தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்ந்து நியாயமற்றவர்களாக இருந்தால், பிரித்தானிய பொதுமக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது தனது கடமை” என்று தெரிவித்துள்ளார். ஆனால் தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், தற்போதைய தொழில்துறை நடவடிக்கைக்கு புதிய சட்டங்கள் உதவாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவின் பொருளாதார நிலை பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி கோவிட் தொற்றின் பின்னர் மந்தமடைந்துள்ளது. … Read more

பிரித்தானியாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள உதவி

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக இலங்கை எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டுவதாகவும் அதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான ஒத்துழைப்புகளை வழங்க பிரித்தானியா எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென்றும் இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வென்ஸ்டால் (Lisa Whanstall) தெரிவித்தார். காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் … Read more

இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதற்கு செனகல் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் உறுதி

செனகல் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் அப்துல்லாயா ட்ரேரோ, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் (டிசம்பர் 06) இந்த சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கேர்ணல் ட்ரேரோவுடன் சுமுகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் … Read more