இம்மாத இறுதியில் வீட்டிற்கு செல்லப் போகும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இம்மாதம் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச ஊழியர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதன் பிரதானிகள் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சேவை நீடிப்பை பெற முயற்சி இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி 60 வயதை எட்டும் அதிகாரிகள் 27 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சேவை நீடிப்பை பெறுவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது … Read more

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நாட்டின் துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக துறைமுகங்கள்  , கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அலைதாங்கி உட்பட பல்வேறு தேவைகளை உருவாக்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார். எதிர்காலத்தில் கொழும்பு துறைமுகம், கொள்கலன் முனையங்கள் மட்டுமன்றி பயணிகள் கப்பல்களுக்கான … Read more

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்! அமெரிக்கா அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அலி சப்ரியை சந்தித்த அன்டனி பிளிங்கன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அடுத்த வருடத்துடன் 75 வருட ராஜதந்திர உறவு பூர்த்தியடைகிறது. இந்த நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு அன்பளிப்பு, கடன் மற்றும் ஏனைய … Read more

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான புதிய தகவல்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் சம்பளத்தை நிறுத்தப்போவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளதாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு ஏதும் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவு சுமார் 7885 பில்லியன் … Read more

எதிர்க்கட்சி உறுப்பினர் சிலரின் நடத்தை மிகவும் கவலைக்குரியது

எதிர்க்க கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிலரது நடத்தை மிகக் கலலைக்குரியதாக இருப்பதாக ,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களை சுற்றுலா வீசாவில் மலேசியாவிற்கு அனுப்பும் மோசடி அம்பலம்

இலங்கையர்களை சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி அம்பலமாகியுள்ளது. இந்த மோசடியை நடத்தும் நபர்களை கைது செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. புலனாய்வுப்பிரிவினர் விசாரணை மலேசியாவிற்கு விஜயம் செய்து வந்த 14 பேர் கொண்ட இலங்கையர்களில் நேற்று (1) கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையின் போது, ​​அவர்களில் ஒன்பது பேர் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு வேலைக்குச் செல்ல முயன்றுள்ளதாகவும் அதில் நான்கு பெண்களும், 5 … Read more

முன்னாள் நீதவானுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்

காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் டி.எஸ்.மெரிஞ்சி ஆராச்சி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தலா 5 ஆண்டுகள் என 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மதுவரி குற்றத்திற்காக அறவிடப்படும் அபராத தொகை குறைவாக பதிவு செய்தன் மூலம் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக தொடரப்பட்டுள்ள இரண்டு வழக்குகளை நீண்டகாலம் விசாரித்த மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தவிர்த்து வந்த குற்றவாளி நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தவிர்த்து … Read more

விபத்தில் இறந்த ரஷ்ய பெண்ணின் நான்கு வயது மகள்-பொறுப்பேற்க எவருமில்லை

காலி உணவட்டுன மஹாரம்ப தொடருந்து கடவையில் ரஜரட்ட ரஜின தொடருந்தில் முச்சக்கர வண்டி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழந்த நிலையில், தனித்து போயுள்ள அவரது நான்கு வயது மகள் நேற்றிரவு வரை முன்பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனித்து போயுள்ள பிள்ளையை பொறுப்பேற்க எவருமில்லை ரஷ்ய பெண் இந்த குழந்தையுடன் உணவட்டுன பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இவர்களின் உறவினர்கள் எவரும் இலங்கையில் இல்லை என்பதுடன் ரஷ்ய தூதரகத்தின் … Read more

புதிய இராணுவ பிரதம அதிகாரி நியமிக்கப்பட்டார்

இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நேற்று (29) பிற்பகல் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடமிருந்து இராணுவத்தின் 61 வது பிரதம அதிகாரியாக நியமனம் கடிதத்தை பெற்றுக்கொண்டார். மேஜர் ஜெனரல் வீரசூரிய தனது 36 வருட இராணுவ சேவையில் இலங்கை இராணுவத்தில் தொண்டர் படையின் கட்டளைத் தளபதி உட்பட பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். அவர் இலங்கை இலகு காலாட்படை மற்றும் இயந்திரமயமாக்கப்பட்ட … Read more