சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றதாகும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அங்கு தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நிதி தீர்வுகள் வலியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது. அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி … Read more

வவுனியா,பொலநறுவை பிரதேச நெல் களஞ்சியசாலைகளை நவீனமயப்படுத்த நிதி

2023 ஆம் ஆண்டில் 8000 மெற்றிக் தொன் அரிசியை கையிருப்பில் பேணுவதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக அரிசி கையிருப்பைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாக அவர் கூறினார். வெகுஜன ஊடக அமைச்சுஇ வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் இணைந்து நேற்று (29) நடத்திய ஜூம் zoom செய்தியாளர் … Read more

கொழும்பில் 'மெயின் ஷிஃப் 5' 5 (Mein Schiff-5) சொகுசு பயணிகள் கப்பல்

2000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் ‘மெயின் ஷிஃப் 5’ (Mein Schiff-5)  என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.   இவர்களை வரவேற்கும் நிகழ்வில், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

அடுத்த வருடம் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – நாடு முழுவதும் மின்தடை

எதிர்வரும் வருடத்தில் மின்சார உற்பத்தி மிகவும் நிச்சயமற்ற நிலைமையை எதிர்நோக்குவதாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முகாமையாளர் நாலக விஜேகோன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவைக்கு ஏற்ப நிலக்கரி விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுமாயின் இந்த நெருக்கடி நிலவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கான பிரதான மின்சாரத் திறனைக் கொண்டு செல்லும் பிரதான மின் உற்பத்தி நிலையம் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையமாகும். அனல்மின் நிலையம் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையமாகும். இலங்கையின் … Read more

இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர், சபாநாயகருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் ஜோ பஸ்வா நேற்று (நவ. 28) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். இதன்போது வரவுசெலவுத்திட்டக் காலம் மற்றும் பாராளுமன்றப் பணிகள் போன்று இரு நாடுகளிலும் காணப்படும் பாராளுமன்ற முறைமை மற்றும் அரசியல் கட்டமைப்பு என்பன தொடர்பில் இரு தரப்பினரும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 2023 இல் பிரான்ஸ் – இலங்கை இராஜதந்திர உறவுகளுக்கு 75 வருடங்கள் பூர்த்தியடைவது … Read more

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சிநேகபூர்வ கிரிக்கட் போட்டியில் கோல்டன் ஃப்ளாஷஸ் அணிக்கு வெற்றி

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் நலன்புரி மற்றும் விளையாட்டுப் பிரிவினால் நடாத்தப்பட்ட சிநேகபூர்வ கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 27ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவை மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ஊடகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எடிட்டோரியல் செலஞ்சர்ஸ், எட்வான்ஸ் பவர், ஃபயர் போல்ஸ், டிஜிட்டல் நோமேட்ஸ், மொன்ஸ்டர்ஸ், கோல்டன் ஃப்ளாஷஸ், பெட்டிங் டீவாஸ் (பெண்கள்) மற்றும் பொம் ஸ்கொட் (பெண்கள்) ஆகிய 8 அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. போட்டியில் கோல்டன் ஃப்ளாஷஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய போக்குவரத்து பிரிவு … Read more

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடி!

பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பணத்தினை பெற்றுவிட்டு பல மாதங்களாகியும் குறித்த பெண், முறைப்பாடு பதிவு செய்தவரை கனடாவிற்கு அனுப்பாமலும், பெற்றுக்கொண்ட பணத்தினையும் மீள வழங்காமலும் இருந்த காரணத்தினால் இவ்வாறு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மூன்றாவது முறைப்பாடு குறித்த பெண் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தங்களிடம் 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து … Read more

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இந்நாட்டிற்கான ஒழுக்கத்துக்கு ஏற்ற வகையில் இடம்பெற வேண்டும்…

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இந்நாட்டிற்கான ஒழுக்கத்துக்கு ஏற்ற வகையில் இடம்பெற வேண்டும்… சர்வமத பிரதிநிதிகள் தேசிய பேரவை உபகுழுவில் சுட்டிக்காட்டு இந்நாட்டில் கூடிய வருமானம் பெறும் 20% இல் 12 % ஆனவர்களுக்கு சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரணங்கள் கிடைக்கின்றன நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 20% இல் உண்மையான நிவாரணங்களைப் பெறுவர்கள் 49% ஆனவர்கள் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளை நாட்டில் பின்பற்றப்படும் ஒழுக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் … Read more

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவி நிலை கட்டளைத் தளபதி நியமனம்

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (COS) நேற்று (29.11.2022) நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மஹாநாம கல்லூரியின் மாணவரான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, 1986 இல் இராணுவத்தில் அதிகாரியாக இணைந்தார் மற்றும் இலங்கை இராணுவத்தின் மிகவும் மரியாதைக்குரிய காலாட்படை படைப்பிரிவுகளில் ஒன்றான இலங்கை லைட் காலாட்படையின் 1 வது படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். விருதுகள்  ஒவ்வொரு துறையிலும் படைப்பிரிவு நியமனங்களைத் தவிர, மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கட்டளை மற்றும் பணியாளர்களின் … Read more