வரவு செலவுத்திட்டம் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர்

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாத்து மக்களை வாழவைக்கும் சவாலை ,ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இம்முறை வரவு செலவுத்தி;ட்டத்தில் எதிர்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சூழ்நிலையில் வரலாற்றில் சவால்மிக்க வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இந்த நெருக்கடிமிக்க சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் வழமை போன்று செயற்படுவது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். ஜனாதிபதி ஒட்டுமொத்த … Read more

அமெரிக்க தூதரக பிரதிநிதி வன்னிக்கு விஜயம்

அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக திரு. டக்லஸ் சோனெக் அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் திங்கட்கிழமை (24) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார். வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் அவரை வரவேற்று, நல்லிணக்கம், அபிவிருத்தி, விவசாயம், பாதுகாப்பு மற்றும் அக்கறைக்குரிய ஏனைய பொதுவான விடயங்களில் விசேட கவனம் செலுத்தி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விளக்கமொன்றை வழங்கினார். … Read more

வங்கக்கடலில் ,இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் தமிழக பகுதிகளில் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு நிலைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி ஆரம்பித்து ,மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று (31) முதல் கனமழை பெய்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் … Read more

மெழுகுவர்த்தி ,ஊதுபத்தி உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம்

கெஸ்பேவ பிரதேச செயலக வலயத்தின் திவுல பிடிய கிழக்க மற்றும் திவுலபிடிய மேற்கு பிரதேச பெண்கள் அமைப்பிற்காக மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் திவுலபிடிய ஸ்ரீமகாபோதிராஜாராமயவில் அண்மையில் இடம்பெற்றது. பொருளாதார ரீதியில் பெண்களைப் பலப்படுத்துவதை நோக்கில் பிரயோக அறிவைப் பயன்படுத்தி சுயகைத்தொழிலில் ஈடுபடும் நோக்கிலான பெண்களுக்காக இந்நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பெண்கள் அபிவிருத்திக் குழுக்களின் அங்கத்தவர்கள் 40பேர் பங்குபற்றியதுடன் கெஸ்பேவ பிரதேச செயலகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அதிகாரி டீனா சஞ்சீவனி வள உதவிகளை … Read more

காத்தான்குடி மத்திய கல்லூரியின் ROAD 2 NATIONAL திட்டத்தின் ஆரம்ப வைபவம்

காத்தான்குடி மத்திய கல்லூரியின் 1988 O/L மற்றும் 1991 A/L பழைய மாணவர்களினால் மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்படவுள்ள விஞ்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு திட்டமாகிய ROAD 2 NATIONAL திட்டத்தின் ஆரம்ப வைபவமும் மாணவர்களுக்கான தேர்வு பரீட்சையும் (Talent Identification Test) நாளை 02.11.2022 திகதி மத்திய கல்லுரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர், காத்தான்குடி பிரதேச செபலாளர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, காத்தான்குடி தள வைத்தியசாலை அத்தியட்சகர், பொலீஸ் … Read more

வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை

வாடகை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை தொழில் ரீதியாக ஈடுபடும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும் முதல் கட்ட நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி மேல் மாகாணத்தில் தொழில் ரீதியாக ஈடுபடும் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பதிவு நடவடிக்கைகளின் பின்னர், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கும் வாரத்திற்கு 5 லீற்றர் என்ற எரிபொருள் கோட்டா எதிர்வரும் 6 … Read more

பல மாதங்களுக்கு பின் இலங்கை வரலாற்றில் இன்று கொழும்பில் பதிவான மிகக் குறைந்த தங்க விலை

கோவிட் தொற்று பரவலையடுத்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. இதனை தொடர்ந்து 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரம் இவ்வாறான சூழலில் இன்றைய … Read more

ஆட்சி அதிகாரத்தில் இளைஞர்களை அதிகமாக உள்ளீர்க்கும் ஜனாதிபதியின் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் தனிநபர் பிரேரணை முன்வைப்பு

நாட்டில் தீர்மானம் மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொவத்த முன்வைத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 262ஆவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அதிகார கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக இந்த தனி நபர் பிரேரணை சட்டமூலமாக முன்வைக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதலாவது மற்றும் … Read more

விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் மேலும் இரண்டு விஷேட படையினர் குழுக்கள்

இலங்கை இராணுவத்தின் விஷேட படையணி இலங்கையின் உயர்மட்ட சிறப்பு நடவடிக்கைப் படைகளில் ஒன்றாக காணப்படுவதுடன் நாடு பெருமை கொள்ளக்கூடிய சிறந்த பயிற்சி பெற்ற பிரிவு எந்தவொரு வழக்கத்திற்கு மாறான இரகசியப் பணிகளைச் செய்ய நன்கு தயாராக உள்ளதுடன் மேலும் பாடநெறி எண் – 52 மற்றும் 53 ஊடாக உயர்மட்ட பயிற்சி பெற்ற 19 அதிகாரிகள் மற்றும் 595 சிப்பாய்கள் தங்களின் தீவிர ஒன்பது மாத பயிற்சியினை நிறைவு செய்ததன் பின்னர், சனிக்கிழமை (29) மாதுருஓயாவில் உள்ள … Read more