பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு….

தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்ப வினைத்திறன் மிக்க வேலைத்திட்டமொன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்கவும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு கோபா குழு பணிப்புரை தொழிற் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்ப வினைத்திறன் மிக்க வேலைத்திட்டமொன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் … Read more

மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம், ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம், விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (25) சான்றுரைப் படுத்தினார். இதற்கமைய மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சட்டமூலங்களும் 2022ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டம், 2022ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம், 2022ஆம் ஆண்டின் … Read more

போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ,ஒலிரூட் பகுதியில் சரிந்து விழுந்த பாரிய மண்சரிவு அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 26.10.2022 அன்று மதியம் முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது. தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் (25) பாரிய மண்சரிவு ஏற்பட்டதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியமை குறிப்பிடத்தக்கது

இலங்கையில் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்..! ஆபத்து தொடர்பில் கடும் எச்சரிக்கை

இலங்கையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சேலைன் மற்றும் மயக்க மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளும் முடங்கும் நிலையில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதய நோய்க்கான மருந்துகளையும் வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தனியார் மருந்தகங்களில் இருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக … Read more

நாடு திரும்பும் இலங்கையர்களின் குடியுரிமை பிரச்சினைகளை தீர்க்க நடமாடும் சேவை

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   சுமார் ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு திரும்பி மீண்டும் குடியேறியுள்ளனர்.   அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மேற்பார்வையில், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடமாடும் … Read more

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின்  தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் மேஜெட் மொஸ்லா (Maged Mosleh) அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (26) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைப் புதுப்பிப்பதற்கான தனது ஆர்வத்தை எகிப்து தூதுவர் வெளியிட்டிருந்தார். அத்துடன், இலங்கைக்கும் எகிப்து அரபுக் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 65 வருடத்தைப் நிறைவுசெய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புக் … Read more

இலங்கையை வந்தடைந்துள்ள நிலக்கரி

60,000 மெற்றிக் டொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரை இறக்கும் பணிகள் இன்று (26) மேற்கொள்ளப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடம் இருந்து இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் 05 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, லக் விஜய அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான பெறுகை டுபாயில் அமைந்துள்ள … Read more

மேல் மாகாணத்தில் இருந்து சிறுவர்கள் தொடர்பாக, அதிக முறைப்பாடுகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பகுதியின் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உடல் குறைபாடுகள், மன நிலைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி நெருக்கடிகள் … Read more

நீர் மின் உற்பத்தியில் 65 சதவீத அதிகரிப்பு

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பதனால் நாளாந்த நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்படிஇ நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் 65 வீதமானவை நீர் மின் நிலையங்களினால் பூர்த்தி செய்யப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதனால் நாளாந்த மின் துண்டிப்பை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆராயுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது

நாட்டின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு அமைவாக இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ,வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகல் அல்லது நீக்கம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தீர்ப்பதற்கு நீதிமன்றத்தின் … Read more