நீர் மின் உற்பத்தியில் 65 சதவீத அதிகரிப்பு

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பதனால் நாளாந்த நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்படிஇ நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் 65 வீதமானவை நீர் மின் நிலையங்களினால் பூர்த்தி செய்யப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதனால் நாளாந்த மின் துண்டிப்பை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆராயுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது

நாட்டின் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு அமைவாக இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ,வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகல் அல்லது நீக்கம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தீர்ப்பதற்கு நீதிமன்றத்தின் … Read more

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு அனுமதி

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களால்,இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தின் 50%க்கு பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில், அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் நாட்டுக்கு பணத்தையனுப்பிய இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய தகுதியுடையவர்கள் என்றார். அரசாங்க தகவல்திணைக்களத்தில் ,இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,இதுகுறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 2022 மே 1 … Read more

குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு – கடற்றொழில் அமைச்சர்

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது வாரத்தில் குறித்த பகுதிகளுக்கான நேரடி விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வினை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு நேற்று (25) நடைபெற்றது. இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் … Read more

இலங்கையில் கேளிக்கை பூங்கா (Disneyland)

இலங்கையில் Disneyland கேளிக்கை பூங்கா ஒன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘அநேகமான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து என்னுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது,  Disneyland பூங்காவை இலங்கையில் அமைப்பது குறித்து என்னுடன் கலந்துரையாடினர். உலக நாடுகளில்  டிஸ்னிலேண்ட்டை அமைத்தவர்கள் என்னுடன் கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் டிஸ்னிலேண்ட்டை இலங்கையிலும் அமைக்க எதிர்பார்த்துள்ளனர். அதன் மூலம் எமக்கு, ஏராளமான சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும்’ என்றும் … Read more

அரசாங்க சேமநலத் திட்டத்தின் பயன்களை பெறுவதற்கான விண்ணப்பம்

அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சேம நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தகுதியானவர்களைக் கண்டறியும் திட்டத்திற்கு, எதிர்வரும் 28ம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றிற்கான கொடுப்பனவு திட்த்தின் கீழ் பயனடையும் அனைத்து குடும்பங்கள் … Read more

பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற மாணவனுக்கு பாராட்டு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் செல்வன் யோகநாதன் சதீஸ்காந்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை (25) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. பளுதூக்கல் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக கிழக்கு மாகாணம் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. பாடசாலை அதிபர் அ.கு.லேந்திரராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர், … Read more

பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை

பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவ்வாறு மேற்கொள்ள முயற்சிப்பது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகும் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த கடந்த 19 ஆம் திகதி தெரிவித்தார்.   தற்பொழுது சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு ஒப்பான மற்றுமொரு மக்கள் சபையை ஸ்தாபிப்பதற்கு தயாராகுவதாக ஊடகங்கள் மூலம் அறிக்கையிடப்படுவதாகவும் அது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். விசேடமாக தேர்தல் ஒன்றின் மூலம் பொதுமக்கள் பிரதிநிதிகள் தெரிவு … Read more