22 ஆவது அரசியல் யாப்பு திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு இந்த வாரத்தில்

22ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை இந்த வாரத்தில் அறிந்துகொள்ளக்கூயதாக இருக்கும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்., அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் இந்த திருத்த சட்டம் மூலத்தை நாட்டுக்கு பொருத்தமான வகையில் நிறைவேற்ற கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். இன்று … Read more

பாராளுமன்றத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூட்டுவதற்கு தீர்மானம்

பாராளுமன்றத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06) முதல் வெள்ளிக்கிழமை வரை (09) கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. 6 மற்றும் 7ஆம் திகதிகளில் “இலங்கையின் குழந்தைகள் மற்றும் தாய்மாரின் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வாறு கிடைக்கும்…! எதற்காக பயன்படுத்தலாம்.. வெளியான முக்கிய தகவல்

அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடிக்கு நிவாரணமாக சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த தொகையில் எரிபொருள், எரிவாயு அல்லது உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்ய முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார். நிதியத்தின் கடன் உதவி சர்வதேச நாணய நிதியத்தில் பெறும் கடன் தொகைஅல்லது நிதியத்துடன் இணங்கும் நிபந்தனைகள் கொண்டு நம் நாட்டின் … Read more

th

அரச நிறுவகங்களுக்கு கடிதங்களை அனுப்பும் போது ​​கடிதங்களை அனுப்பும் நபரின் முகவரி வதிவிடத்திற்கான தனிப்பட்ட தொலைபேசி மற்றும் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிடுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.  

ஆசிய வெற்றிக்கிண்ண போட்டி தொடரில் -இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி 

ஆசிய வெற்றிக்கிண்ண போட்டி தொடரில் ,இலங்கை அணி, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது டுபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டுள்ளது. துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி சற்று முன்னர் 16.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்திருந்தது. சூப்பர் 4 சுற்றை எட்டும் மற்றொரு அணியை நிர்ணயிக்கும் போட்டி இது ,என்பதினால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி மிக முக்கியமானது. இவ்விரு அணிகளும் தங்களது முதல் … Read more

பிரித்தானியாவை விட இலங்கையின் அதிகளவான படையினர் – சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

இலங்கையில் பிரித்தானியாவையும் விட அதிகளவான படையினர் இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் 3 லட்சத்துக்கு 31ஆயிரம் படை வீரர்கள் சேவையில் உள்ளனர். எனினும் பிரித்தானியாவில் 90 ஆயிரம் படையினரே உள்ளனர். போருக்கு பின்னர் ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய நல்லிணக்க விடயங்கள் இலங்கையில் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கம் இதன் காரணமாகவே இலங்கையில் … Read more

நாணய நிதியத்தின் நிதி உதவியின் ஊடாக மக்களின் வாழ்க்கையையும் படிப்படியாக மேம்படுத்த முடியும் – பிரதமர்

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளது.  அதன் மூலம் எமக்கு அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பதுடன், பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் படிப்படியாக மேம்படுத்த முடியும்  என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.  இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணிக்குழு மட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதமர்  இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின்  நிதியுதவி தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்து, பிரதமர் இதனைத்  தெரிவித்தார். மேலும், இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார … Read more

விவசாயத்துறை தொடர்பான தீர்மானங்கள் நிபுணர் குழுவால் மட்டுமே எடுக்கப்படும்

எதிர்காலத்தில் நிபுணர் குழுவே விவசாயத்துறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும், அதன்படி நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கான அடுத்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். க்ளைபோசேட் அடங்கிய களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் முழு விளைவு இன்று இந்த அவலத்தின் ஆரம்பம் என்றும் அவர் … Read more

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.  பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக   கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாடசாலை மதிய உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் உலர் உணவுகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட இந்த உணவுப்பொருட்கள் தொடர்பில் நேற்று சில ஊடகங்கள் தெரிவிது;துள்ள உண்மைக்குப்புறம்பான விடங்கள் குறித்து அமைச்சர் இதனைத் தெரிவித்தார். … Read more