இடைக்கால வரவுசெலவுத்திட்டம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்

எதிர்வரும் 30ஆம்திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டம் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் மக்கள்வாத வரவு செலவுத்திட்டமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள தேவையான மாற்றீட்டு செலவு புதிதாக இணைத்து, பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில்  இடைக்கால வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன் மேலும் கூறினார். நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை ஆகஸ்ட் 30 … Read more

இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவு பாரிய அளவில் அதிகரிப்பு

இலங்கையில் தற்போது குடும்பம் ஒன்றின் மாதாந்த வாழ்க்கைச்  செலவு பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் இவ்வாறு சாதாரண குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.  பாரிய அளவில் அதிகரித்த வாழ்க்கைச் செலவு இதன்படி, சாதாரண குடும்பம் ஒன்றின்  மாதாந்த வாழ்க்கைச் செலவு ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.  பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளவிபரவியல் ஆய்வுகள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சாதாரண … Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 7வருங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். எந்தவொரு அரசியல்வாதியும் 06 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அவரது குடியுரிமை 07 வருடங்களுக்கு ரத்து செய்யப்படும். இருப்பினும், அரசியலமைப்பின் 34 (2) பிரிவின் கீழ் பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், ஜனநாயக உரிமை கிடைத்திருக்கும்.  ஆனால் அரசியலமைப்பின் 34 … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ,ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (27) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகிறது. அனைத்து போட்டிகளும் இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி ஊடான வலையமைப்பான வசந்தம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இன்றைய போட்டித் தொடருக்கான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதனை தொடர்ந்து மறுநாள் (28) நடைபெறும் போட்டியில் சர்வதேச … Read more

17 வயதிற்கு உட்பட்ட 2022 மகளிர் உலக வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி

17 வயதிற்கு உட்பட்டோருக்கான 2022 பெண்கள் உலக வெற்றிககிண்ண கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30 ஆம் திகதி வரை மும்பை கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பதவி காலம் முடிந்த பின்னரும், புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை உச்ச நீதிமன்றம் நீக்கியது. அவர் … Read more

மே 9 அமைதியின்மை :மேலும் மூவர் கைது

இரத்மலானையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகளுக்கு சேதம் விளைவித்ததுடன் ,மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது வீட்டு உபயோகப் பொருட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (25) மாலை இரத்மலானையில் , கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான இவர், பாராளுமன்ற உறுப்பினர் அபேகுணவர்தனவின் இல்லத்தில் இருந்து … Read more