கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது

அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டுக்கு பொருத்தமான கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் -அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் நேற்று (23) நடைபெற்ற அகில இலங்கை … Read more

உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் பயண முறைமையுடன் “ஸ்ரீ ராமயண டிரேல்ஸ்” ஆரம்பிக்கப்பட்டது

இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண டிரேல்ஸ்” (ஸ்ரீ ராமாயண பாதை) திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம் (21) பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், இடம்பெற்றது. அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம பூஜை மாளிகையின் தலைமைப் பொருளாளர் மேதகு சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் … Read more

ஏறாவூரில் குறைந்த வருமானம் பெறும்  குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இலவச அரிசி பொதிகள் வழங்கும் மட்டக்களப்பு  மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று (22) ஏறாவூர்   கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரனின் வழிகாட்டுதலில் ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாவட்டத்திற்கான  600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் 6 … Read more

விசேட ஊடக அறிக்கை

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது. அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே மேற்படி அலுவலகம் இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. (இணைப்பு – 01) அதன்படி பல நிறுவனங்களால் மனித பாவனைக்கு உகந்தது என உறுதிப்படுத்தப்பட்ட அரிசி … Read more

காணிகளை விடுவிப்பதில் உரிமை தொடர்பாக எந்தச் சிக்கலும் இல்லை. – பிரதமர் தினேஷ் குணவர்தன

உரிமை அவ்வாறே இருக்கும் நிலையில் பயிர்ச்செய்கைக்கான அதிகாரத்தை வழங்க அரசு முடிவு செய்தது… கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில், நேற்று (2024.04.22) தெஹியோவிட்ட பிரதேச செயலகத்தில், முட்டை அடைகாப்பகங்களை வழங்கும் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- மக்கள் சீனக் குடியரசிடமிருந்து கிடைத்த இந்த உதவி நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மேலும், நாங்கள் பல … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 024 ஏப்ரல்23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. புத்தளத்திலிருந்து … Read more

நாட்டைக் கட்டியெழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ தயாரில்லை

கட்டியெழுப்பப்படும் பொருளாதாரத்தின் பலன்கள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கும் 2024 வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். வெலிமடை … Read more

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஜனாதிபதி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (21) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து பீட மகா நாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட பின்னர் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இச்சந்திப்பில் மல்வத்து பீட அனுநாயக்க வண, திம்புல்கும்புரே விமலதம்ம தேரரரும் கலந்து கொண்டதுடன் அவர் … Read more

குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம்

குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்றது. கௌரவ மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானத்தக் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதத்திற்கு 20 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமானது நேற்று (21) நாடளாவிய ரீதியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட மொத்தமாக 34146 குடும்பங்களுக்கு இந்த இலவச … Read more

‘வசத் சிரிய – 2024’ போட்டிகளில் பங்கேற்க பெருமளவானோர் விண்ணப்பம்

ஏப்ரல் 27 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நடைபெறவுள்ள ‘வசத் சிரிய – 2024’ சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கைகோர்த்து வருகின்றனர். புத்தாண்டு அழகன் மற்றும் அழகி, மரதன் ஓட்டம் மற்றும் மிதிவண்டி சவாரி ஆகிய போட்டிகளுக்காக பெருமளவு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. பல்வேறு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பில் இருந்து தூர பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் இப்போட்டிகளில் பங்கேற்க முன்வந்துள்ளமை விசேட … Read more