மட்டக்களப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினுடாக பால் நிலை பரிணாம மாற்றம் தொடர்பான கண்காட்சி

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக பால் நிலை பரிணாம மாற்றம் தொடர்பான கண்காட்சி கடந்த திங்கட்கிழமை (22) முதல் இன்று (24) வரை மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் இடம்பெறுகின்றது. கனடா அரசு மற்றும் ராயல் நார்வேஜியன் தூதரகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இப் பால்நிலை பரிணாம மாற்றம் மற்றும் பெண் தன் மேம்பாடடைதல் – ஓர் பயணம்; நெருக்கடிகளிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழி எனும் செயல் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. உலகின் 60 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் … Read more

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டிற்குத் தீர்வு

அரசாங்கப் பாடசலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகக் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக விசாரிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொள்கை சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஒரு அதிகாரி விசாரணை நடத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 2024.03.28 அன்று அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கிணங்க 2024.04.18 அன்று கல்வி அமைச்சின் … Read more

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்பு !

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று (24) இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மத்தளை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே அவர்கள் இன்று (24) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அநுராதபுர மாவட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கே.எச். நந்தசேன அவர்கள் இறப்பெய்தியமையின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வீரசேன கமகே அவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டார். 1945 … Read more

மன்னாரை போர்ட்சிட்டியாக மாற்ற ஜனாதிபதி எதிர்பார்க்கிறார்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் அரிசி விநியோகம் செய்வது அவரது நோக்கமல்ல, மாறாக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகும் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் நீண்டகாலம் இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதற் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்று பாராமல் சகலருக்கும் சமனாக சேவை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக் காட்டினார். மன்னாரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி … Read more

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்கு ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கைக்கு வருகை

இரு நாடுகளுக்கும் இடையில் 05 புரித்துணர்வு ஒப்பந்தங்களை கைசாத்திடத் தீர்மானம். தேசிய மின் கட்டமைப்பிற்கு 290 கிகாவோட் (290 GWh) மின் சக்தி. 4500 ஹெக்டயர் புதிய , 1500 ஹெக்டயர் பழைய விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி. பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று (24) இலங்கைக்குக்கு வருகைத் தரவுள்ளார். ஜனாதிபதி … Read more

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது

அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டுக்கு பொருத்தமான கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் -அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 10 ஆவது வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு நெலும் பொக்குன கலையரங்கத்தில் நேற்று (23) நடைபெற்ற அகில இலங்கை … Read more

உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் பயண முறைமையுடன் “ஸ்ரீ ராமயண டிரேல்ஸ்” ஆரம்பிக்கப்பட்டது

இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ ராமாயண டிரேல்ஸ்” (ஸ்ரீ ராமாயண பாதை) திட்டத்தின் உத்தியோகபூர்வ தொடக்கம் (21) பிற்பகல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில், இடம்பெற்றது. அயோத்தியில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீ ராம பூஜை மாளிகையின் தலைமைப் பொருளாளர் மேதகு சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் … Read more

ஏறாவூரில் குறைந்த வருமானம் பெறும்  குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக இலவச அரிசி பொதிகள் வழங்கும் மட்டக்களப்பு  மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு நேற்று (22) ஏறாவூர்   கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரனின் வழிகாட்டுதலில் ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாவட்டத்திற்கான  600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவின் 6 … Read more

விசேட ஊடக அறிக்கை

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது. அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே மேற்படி அலுவலகம் இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. (இணைப்பு – 01) அதன்படி பல நிறுவனங்களால் மனித பாவனைக்கு உகந்தது என உறுதிப்படுத்தப்பட்ட அரிசி … Read more