நெருக்கடியில் நாடு – பல கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர கார் வாங்கிய அரச அதிகாரி

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  அண்மையில் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி ஒருவரின் கார் கனவுக்காக 600 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரிக்கு அதிநவீன கார் 600 லட்சம் ரொக்கமாக செலுத்தி புதிய பென்ஸ் கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்கிறது. நாடு திவாலாகி, மக்கள் திவாலாகும் நிலையில், மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காக, அனைத்து தியாகங்களையும் செய்வதாக கூறி பதவிகளை ஏற்றவர்களின் … Read more

கொழும்பில் உணவகங்களில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – உணவு வாங்குவோருக்கு எச்சரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் பூனைக்கழிவுகள் அடங்கிய மனித நுகர்விற்கு பொருந்தாத உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்த 30 கடைகளில் சோதனை மேற்கொண்ட நிலையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உணவுகளில் பூனை கழிவு அதற்கமைய, இராஜகிரியில் உள்ள பிரபல உணவு … Read more

“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை , முன்னோக்கிய வழி” – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல்

“இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி” எனும் தலைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி இடம்பெறும் என பிரதி சபாநாயகர் அறிவிப்பு “இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் முன்னோக்கிய வழி” எனும் தலைப்பில் 2022 ஆகஸ்ட் 30 ஆம் திகதி பி.ப. 2.00 மணி முதல் பி.ப. 4.00 மணி வரை பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தவிர்க்கமுடியாத காரணங்களால் அன்றைய தினம் இடம்பெறாது எனவும் அந்த நிகழ்வு … Read more

இலங்கையின் முக்கிய இடங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சீனா!

இலங்கை, சீனாவுக்கு செலுத்த வேண்டிய 9.95 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு பதிலாக, இலங்கையில் உள்ள சீனாவின் திட்டங்களுக்கு அந்த கடனை ஈடு செய்ய விரும்புவதாக சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளதாக, ஞாயிறு இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமது ஊடகவியலாளர், ஒருவர், இராஜதந்திர தரப்புகளில் இருந்து இந்தத் தகவலைப் பெற்றுள்ளதாக இந்த செய்தி தாள் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் முக்கியப் பிரச்சினையாக இருந்த சீனக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக இலங்கை … Read more

மின் கட்டண அதிகரிப்பு: சபை ஒத்திவைப்பு  விவாதம் இன்று

பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30ற்குக் கூடவுள்ளது. இன்றைய சபை அமர்வின் போது மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள  சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று முற்பகல் 9.30ல் இருந்து பிற்பகல் 4.30 வரை இடம்பெறவுள்ளது. இதேவேளை நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை(30) பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார். நாளை (30) பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடும். ஒரு மணியில் இருந்து 2 மணி … Read more

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டு பணியாளர்கள் ஈட்டும் வருமானத்தை டொலரில் இலங்கைக்கு அனுப்பாமல் வெளிநாடுகளில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியும் பொலிஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்டியல், ஹவாலா போன்ற முறைகளில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாறிக்கொண்ட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. பணம் அனுப்புவோருக்கு எச்சரிக்கை அவர்களை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் முற்படுத்த குற்றப் … Read more

அடுத்த சில நாட்களில் சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஓகஸ்ட்29ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஓகஸ்ட்29ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில்அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டலநிலைமை காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும்மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் … Read more

ஜெனிவா பிரதிநிதிகளுடன் அலி சப்ரி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வுகளுக்கு முன்னதாக, இலங்கை வந்துள்ள ஜெனிவா பிரதிநிதிகள், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளனர். ஜெனிவா பிரதிநிதிகள் குழு தலைவர் ரோரி முன்கோவன் மற்றும் பிற உறுப்பினர்களை சந்தித்த சப்ரி விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளார். இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் எழுச்சி போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய நடப்பு காரணமாக, தேசிய இறையாண்மை மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளின் … Read more