தங்கப் பதக்கங்களை வென்று மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன்

தேசிய கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 12வது தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றிய வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப் 8வது பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்று மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் போசகரும் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரருமான யாசீர் அரபாத் மற்றும் பாத்திமா ஆகியோரின் புதல்வருமாவார்.

நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஆகஸ்ட் 09ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். பல தசாப்தங்களாக நிலவி வரும் நட்பு ரீதியான நல்லுறவுகளைக் குறிப்பிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், சவாலான காலங்களில் நியூசிலாந்து நல்கிய தொடர்ச்சியான ஆதரவு மற்றும் உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தூதுவருக்கு விளக்கமளித்தார். விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்பில் ஈடுபடுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் … Read more

கோட்டாபயவின் அடுத்த பயணம் ஆரம்பம்! செல்லவுள்ள நாடு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெற்ற பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச தற்காலிகமாக தங்கியிருக்க தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச  குடும்பத்தினருக்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்ததுடன் … Read more

பஸ் கட்டணத்திற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படுமாயின் கடும் நடவடிக்கை

மறுசீரமைக்கப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பஸ் கட்டண மறுசீரமைப்புக்கு அமைவாக அன்றி, சில தனியார் பஸ்களில் ஆகக்கூடுதலான தொகை கட்டணமாக அறவிடப்படுவதாக பயணிகள் முறைப்பாடு செய்திருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். பஸ்களில் மறுசீரமைக்கப்பட்ட பஸ் கட்டணங்களை காட்சிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறுந்தூர ஓட்ட வீரர் ஹிமாஷா இசானுக்கு 4 வருட கால போட்டி தடை

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டதனால் ,குறுந்தூர ஓட்ட வீரர் ஹிமாஷா இசானுக்கு 4 வருட கால முழுமையான போட்டி தடை விதிப்பதற்கு இலங்கை ஊக்க மருந்து தடுப்பு பிரிவினர் தீர்மானித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் 03 ஆம் திகதி இது தொடர்பில் இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிலையத்தினால் நடத்தப்பட்ட ஒழுக்க குழு பரிசோதனை சிபாரிசு அடிப்படையில் இவர் தவரிழத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டதனால் இந்த தடை விதிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. யுபூன் அபேகோனுக்கு … Read more

மாத மற்றும் நாள் சம்பளத்தொகை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தேசிய குறைந்தபட்ச மாத மற்றும் நாளென்றுக்கான சம்பளத்தொகைகளை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மாத சம்பளம் இதன்படி, தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச மாதாந்த சம்பளத் தொகையான 12500 ரூபாவை 17500 ரூபாவாக உயர்த்துவதற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய குறைந்தபட்ச மாத சம்பளத்தை ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச நாள் சம்பளம் மேலும் குறைந்தபட்ச … Read more

18,800 லீட்டர் டீசலுடன் நால்வர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட 18 ஆயிரத்து 800 லீட்டர் டீசலுடன் 4 பேரை ஹம்பாந்தோட்டை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஹம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (10) அதிகாலை 2 மணியளவில் ஹம்பாந்தோட்டை ஸ்ரீபோபுர பகுதிகளில் இதுதொடர்பான முற்றுகை மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உப்பு ஏற்றி செல்ல பயன்படும் பாரிய லொறி ஒன்றும், மீனை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் குளிரூட்டப்பட்ட … Read more