இலங்கை நாணயம் மதிப்பை இழக்கும் அபாயம் – பொருளாதார ஆய்வாளர் கடும் எச்சரிக்கை

இலங்கையில் பணவீக்கம் 60 வீதம் முதல் 70 வீதம் வரை அதிகரித்தால் நாட்டின் நாணயத்தின் பெறுமதி கடுமையாகப் பாதிக்கப்படலாம் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் நிதிச் சிக்கல்கள் உள்ளவர்களின் கைகளுக்குப் பணத்தைச் சேர்ப்பதற்கான முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் பணவீக்கம் 54 சதவிகிதம் என்பது முற்றிலும் உலகளாவிய காரணிகளால் ஏற்பட்டதல்ல, உள்ளூர் காரணிகளும் இதில் பாரிய … Read more

நுவரெலியா பொருளாதார நிலையங்களுக்கு மரக்கறி கொண்டும் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து கொழும்பு மெனிக் சந்தை உட்பட ஏனைய மாகாணங்களிலுள்ள பொருளாதார நிலையங்களுக்கு நாளாந்தம் மரக்கறி கொண்டும் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கான விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியாவில் சிங்க ஜெரிமென்ட் இராணுவ முகாமில் குறித்த வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. நுவரெலிய பொருளாதார மத்திய நிலையத்தினால் லொறிகளின் விபரம் இராணுவ முகாமிற்கு வழங்கப்பட்டிருப்பதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலகொட கூறினார். இதேவேளை … Read more

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 42 சதமாக பதிவாகியுள்ளது. அதேசமயம், டொலரொன்றின் விற்பனை விலை 367 ரூபா 24 சதமாகவும் பதிவாகியுள்ளது. பிரித்தானிய பவுண்ட்  பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 447 ரூபா 06 சதமாக பதிவாகியுள்ளது. பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது. யூரோ  யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி … Read more

இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

சுற்றுலா இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்யில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலி;ல் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்hடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 38 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் உதவி

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுடிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்கான உறவுகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்;கான ஜப்பான் தூதுவர் ஹிதஹி மிசிகோசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இதனைக் கூறினார். இந்த பேச்சுவார்த்தை கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இலங்கையுடனான பொருளாதார சமூக கலாசார உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தூதுவர் இதன்போது குறிப்பிட்டார். இலங்கைக்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி … Read more

ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கறுவாப்பட்டை

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.  இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. கடுமையாக உயர்ந்துள்ள விலைகள்  இதன்படி,  ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா 5,000 முதல் 6,000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் மிளகு … Read more

மாத்தறை பிரதேச செயலாளருக்கு நிகழ்ந்த செயல் குறித்து விசாரணை

மாத்தறை பிரதேச செயலாளர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற போது, ​​ சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவித்து, சித்திரவதை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக்கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜூன் மாதம் 25 ஆம் திகதி மாத்தறை பிரதேச செயலாளர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். மேலும் அவர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக பல அரசாங்க … Read more

கந்தக்காட்டில் இருந்து தப்பி ஓடிய 653 பேர் கைது…

பொலன்னறுவை கந்தக்காடு பகுதியில் உள்ள சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் உயிரிழந்த  கைதியின் பெற்றோரும் சகோதரரும் தொமோதராவில் இருந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர். உயிரிழந்தது அவரது குடும்பஸ்தர் இல்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர். கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தினால் வழங்கிய தகவல்களுக்கு அமைய, உயிரிழந்தவர் தெமோதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ராஜபக்ச எனவும், அவர் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பொலன்னறுவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கு முன்னர் சடலத்தை … Read more