2வது முறை அம்மாவாகும் நம்ம 'டிடி'

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அவர் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ரசிகர்களை கவர்ந்துவிடுவார். அது தான் டிடியின் ஸ்பெஷலே. இந்நிலையில் சுந்தர் சி . இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் டிடி. அந்த படத்தில் டிடி கர்ப்பமாக இருப்பது போன்றும், அவருக்கு வளைகாப்பும் நடக்கிறது. அந்த ரீல் வளைகாப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் விஸ்வநாத் தன் இன்ஸ்டாகிராம் … Read more

டியர் காம்ரேட்ஸ்! | உலக சினிமா #MyVikatan

1962 ஜூலை 2 அன்று ‘சோவியத் ரஷ்யா’ நாட்டில் நொவோசெர்கெஸ்க் என்ற பகுதியில் நடந்த படுகொலை தாக்குதலை விவரிக்கும் திரைப்படம் ‘ டியர் காம்ரேட்ஸ்!’. இயக்குநர் ஆந்த்ரே கான்கெலாவ்ஸ்கி உருவாக்கத்தில் மிகச்சிறப்பாக படுகொலைத்தாக்குதலை ஆய்வு செய்திருக்கிறது ‘டியர் காம்ரேட்ஸ்!’. அதிபர் நிகிதா க்ருஷோவ் ஆட்சி காலத்தில் சோவியத் ரஷ்யாவின் அவல நிலை திரைப்படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்டாலின் ஆட்சியில் நிலவிய பொற்காலத்தையும் எடுத்துரைக்கிறது. ஸ்டாலின் ஆட்சி பற்றிய அமெரிக்க ஏகாதிபத்திய ஊடக விமர்சனங்களுக்கு … Read more

ஒரே நாளில் 3 படம் பாக்குற அளவுக்கு எங்க குடும்பம் ஒரு சினிமா பைத்தியம்…!

ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாகவும் இயக்குனராகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டுள்ளார். நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடித்த மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது வீட்ல விசேஷங்க என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார்.காமெடி, நடிப்பு, இயக்கம் என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் ஆர்ஜே பாலாஜி, நாங்க ஒரு சினிமா பைத்திய குடும்பம், எங்க குடும்பமே அப்படித்தான் என செம ஜாலியாக பேசி உள்ளார். ரேடியோவில் தனது கலகலப்பான … Read more

போருக்கு எதிரான குரல்; சிவகார்த்திகேயன் ஜோடி; உக்ரைன் நடிகை Maria Ryaboshapka-ன் சுவாரஸ்யப் பின்னணி

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியாகும் #SK20 படத்தில் உக்ரைன் நடிகை மரியா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. யார் இவர்? அவரைப் பற்றிய சில தகவல்கள்! 25 வயதான உக்ரேனிய நடிகை மரியா முதலில் அறிமுகமானது உக்ரேனிய படங்களில்தான். 2018இல் வெளியான Eter என்கிற படத்தில் நடித்தார். இது சயின்ஸ் பிக்ஷன் வகையைச் சேர்ந்த Spanish திரைப்படம். ரஷ்யன், உக்ரேனிய மொழிகளில் நடித்து கொண்டிருந்தவர் இந்தியாவுக்கு வந்தது ‘Special OPS 1.5: The … Read more

'மாநாடு' தயாரிப்பாளருடன் ராசியான சிம்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்த 'மாநாடு' படம் கடந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் முக்கியமான ஒரு படம். படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், நாயகன் சிம்புவின் அப்பா டிஆருக்கும் இடையில் படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. அந்த சமயத்தில் படத்தின் சக்சஸ் மீட் அதன்பின் படத்தின் 50வது நாள் விழா ஆகிய நிகழ்வுகளில் சிம்பு கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். படத்தின் … Read more

வெளியானது சிம்புவின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்…!

சிம்புவின் ‘ வெந்து தணிந்தது காடு ’ ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகி வருகிறது ‘வெந்து தணிந்தது காடு’. கௌதம் மேனனின் வழக்கமான பாணியில் சிம்புவின் ஸ்டைலான நடிப்பில் உருவாகி வருவதால் இந்த படத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கதான் செய்கிறது. இதனால் இந்த எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.சிம்பு இந்த படத்தில் உடல் எடையெல்லாம் குறைத்து ஒல்லியான தோற்றத்தில் நடித்துள்ளார். சிம்புக்கு ஜோடியாக இந்த … Read more

Dasara: கே.ஜி.எஃப் கோலர் தங்க வயல்னா, இதுல சிங்கரேனி நிலக்கரி சுரங்கம்… நானியின் புது ரூட்டு!

சினிமாவையும் சினிமா நட்சத்திரங்களையும் ஆராதித்து கொண்டாடும் மாநிலம் ஆந்திரா. டோலிவுட் படங்கள் என்றாலே மசாலாதான் என்ற பெயரை மாற்றியமைத்து கலைரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் தற்போது மாஸ் காட்டி வருகின்றனர். நானியை நாம் செம ஜாலியாக நம் பக்கத்து வீட்டு பையனாக பார்த்திருப்போம். ஆனால், சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாம் அவரை ஒரு நடிகனாகத் தூக்கி நிறுத்துகிறது. நானி படத்திற்கு படம் சேஞ்ச் ஓவர் காட்டி வருகிறார். ‘ஜெர்ஸி’ – கிரிக்கெட் படம், ‘கேங் லீடர்’ – … Read more

வாடிவாசல் – டெஸ்ட் ஷுட்டில் சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உருவாக உள்ள படம் 'வாடிவாசல்'. இப்படத்தின் அறிவிப்பு எப்போதோ வெளியானது. ஆனால், இயக்குனர் வெற்றிமாறனும், சூர்யாவும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு காலதாமதம் ஆகி வருகிறது. இதனிடையே, இப்படத்திற்கான டெஸ்ட் ஷுட் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடைபெற்று வருகிறது. 'வாடிவாசல்' இடத்தை அப்படியே செட்டாக வடிவமைத்துள்ளனர். அதில் மாடு பிடி வீரராக சூர்யா கலந்து கொள்ளும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் … Read more

உறுதிசெய்த செல்வராகவன்..ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

இயக்குனராக ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்த செல்வராகவன் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் இயக்கத்தின் மீது காதல் கொள்ள வைத்தார் செலவராகவன். அதன் பின் 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் , மயக்கம் என்ன போன்ற தரமான படங்களை இயக்கினார். இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் தன் தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கிவருகிறார். டாப் ஸ்டார் … Read more

அந்த மாயசக்தி!|புத்தம் புது காப்பி #MyVikatan

Scene 1 (தக்க ஓவியங்களுடன் பின்னணியில் குரல் ஒலிக்கிறது) இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச கதை சுமார் 800 வருஷங்களுக்கு முன்னால முயலுக்கும் ஆமைக்கும் ஒரு பந்தயம் நடந்துச்சு அந்த பந்தயம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல கிட்டத்தட்ட பாதி தூரத்தைக் கடந்து வந்த முயல் தான் எப்படியும் ஜெயிக்க போறோம்ங்கிற Over confidence ல படுத்து தூங்க ஆரம்பிச்சது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பொறுமையாகவும் நிதானமாகவும் முயற்சி செஞ்சுகிட்டிருந்த ஆமை முயலுக்கும் முன்னாடி போயி பந்தய கோட்டை … Read more