முத்தையா இயக்கத்தில் இணையும் கமல்ஹாசன்?

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசனுடன் ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘விக்ரம்’ வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து, ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். இப்படமும் நிறைவடைந்தபிறகு இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி – ஷங்கர் மகள் அதிதி நடிக்கும் ‘விருமன்’ … Read more

மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் : நினைத்தாலே மனசு வலிக்கிறது : சூர்யா

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை(மார்ச் 10) வெளிவருகிறது. இதனை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கான புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளா சென்ற சூர்யா, அங்கு பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசி உள்ளார். “இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நடந்திருக்கக் கூடாது. இது நியாயமற்ற செயல். நவீனமான உலகத்தில் இந்த மாதிரியான … Read more

Dhanush Aishwarya:இன்ஸ்டாகிராமில் தனுஷ், ஐஸ்வர்யா மோதல்?

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். பிரிவுக்கு பிறகு அவரவர் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனுஷை பிரிந்த பிறகு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து மகிழ்ச்சியான போஸ்ட்டுகளாக போடுகிறார் ஐஸ்வர்யா. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்திருக்கும் நிலையில் சிரித்த முகமாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா மருத்துவமனையில் சேர்ந்து புகைப்படம் வெளியிட்ட நிலையில், தன் … Read more

’பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’?

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’மோதவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ’அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கினாலும் நிதி பிரச்னை, கொரோனா பரவல் போன்றவற்றால் படப்பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், … Read more

நலன் குமாரசாமி இயக்கத்தில் வசந்த் ரவி

சூது கவ்வும் என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த நலன் குமாரசாமி அடுத்து ஒரு வெற்றியை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். சூது கவ்வும் படத்திற்கு பிறகு காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார். இது ஒரு கொரியன் படத்தின் தழுவல். படமும் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு சில படங்களுக்கு வசனம் எழுதினார். இந்த நிலையில் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டார். இதில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அவர் தேதி ஒதுக்கித் தராமல் … Read more

நட்டி- பூனம் பஜ்வா கூட்டணியில் 'குருமூர்த்தி'… ஒரே ஷெட்யூலில் மொத்தத்தையும் தீயாய் முடித்த படக்குழு!

பிரண்ட்ஸ்டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் குருமூர்த்தி . இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார். தெரியலயா… இப்போ பாருங்க… கழட்டிக்காட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த இலியானா! ஜெய்பீம் படத்தின் மூலம் சர்ச்சைக்கு உள்ளான குருமூர்த்தி என்ற பெயர் இந்தப் படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. கடமைத் தவறாத போலீஸ் அதிகாரியாக பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அதனால் கடமைத்தவறாமல் பணியாற்றும் அவரது … Read more

’அஜித் 61’: இன்று பூஜை… மார்ச் 19-ல் படப்பிடிப்பு; அக்டோபர் ரிலீஸ்?

’அஜித் 61’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக நயன்தாரா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘அஜித் 61’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 19 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை ’அஜித் 61’ … Read more

'துருவ நட்சத்திரம்' விரைவில் ஒளிரும்?

கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன் மற்றும் பலரது நடிப்பில் 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போதே டீசர் வீடியோவெல்லாம் வெளியிட்டு அசத்தினார் கவுதம் மேனன். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டீசர், 4 வருடங்களுக்கு முன்பு மற்றொரு டீசர், 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு டீசர், 2 ஆண்டுகளுக்கு முன்பு 'ஒரு மனம்…' சிங்கிள், என அடுத்தடுத்து வெளிவந்ததால் அப்போதெல்லாம் படம் … Read more

கெத்துக் காட்டும் சிம்பு… தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ, 1 லட்சம் அபாராதம்.. ஹைகோர்ட் அதிரடி!

சிம்பு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு முன்பணமாக 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. நாயை அடிப்பது போல் அடித்தார்.. தினமும் சித்ரவதை.. கணவர் மீது பிரபல நடிகை பகீர் புகார்! இதில் சம்பள பாக்கியை பெற்றுத்தரக் கோரி சிம்பு, நடிகர் சங்கத்தில் … Read more

உக்ரைனுக்கு 10 மில்லியன் டாலர் உதவி அளித்த லியானார்டோ டிகார்ப்பியோ

ஹாலிவுட் நடிகரும், அழியா காதல் காவியமான 'டைட்டானிக்' பட நாயகனுமான லியானார்டோ டிகார்ப்பியோ உக்ரைன் நாட்டிற்கு 10 மில்லியன் யுஎஸ் டாலர் உதவி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. லியானார்டோ டிகார்ப்பியோவின் பாட்டி ஹெலென் டென்பிர்கென், உக்ரைன் நாட்டின் ஒடெஸ்ஸா நகரில் ஜெலினா ஸ்டெபனோவ்னா ஸ்மிர்ன்நோவா என்ற பெயரில் பிறந்தவராம். அவர் 1917ம் ஆண்டு தனது பெற்றோருடன் ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்துள்ளார். அங்குதான் லியானார்டாவின் அம்மா பிறந்தாராம். தனது அம்மா வழி பாட்டி மீது மிகவும் பாசம் … Read more