'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமம் யாருக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் காத்துவாக்குல காதல் படத்தின் படத்தின் தியேட்டர் ரீலிஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பகிர்ந்துகொண்டுள்ளது. ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைந்துள்ள படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. இவர்களுடன் சமந்தாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை … Read more

சமந்தாவின் 'சாகுந்தலம்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'சாகுந்தலம்'. இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். சமந்தா இந்த படத்தில் சகுந்தலையாக நடித்துள்ளார். கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார்.இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்து வருகிறார். படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமந்த வெள்ளை நிற உடையில் அடர்ந்த மரங்களுக்கு நடுவே அமர்ந்திருக்க, அவரை சுற்றி மான்கள், மயில்கள் கூட்டமாக இருப்பது போன்று … Read more

'வலிமை' படம் குறித்து அஜித் சொன்ன வார்த்தை: படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதனை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61 படத்தில் நடிக்கிறார். ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் … Read more

நேரில் வாழ்த்திய ரஜினி, கமல்; களைகட்டிய தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா!

தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், போனி கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான அன்பு செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கும் சன் ஐ.ஏ.எஸ் அகடாமியின் இயக்குநர் சரணுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. அதில், தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, … Read more

பிக்பாஸ் அல்டிமேட் – கமல்ஹாசன் பின்வாங்க காரணம் என்ன ?

உலக அளவில் புகழ் பெற்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக நடைபெற்று முடிந்தது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் கடந்த ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கினார். ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் அவருக்குக் கொரானோ தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். உடல் நலம் தேறிய பின் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த சீசனை நடத்தி முடித்தார். டிவியில் நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் … Read more

Dhanush:'அது' அப்போ புரியல, இப்போ புரியுது தனுஷ்

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் , சாரா அலி கான், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த அத்ரங்கி ரே இந்தி படம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக ஓடிடியில் ரிலீஸானது. அந்த படத்தை பார்த்த இந்தி ரசிகர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பை பாராட்டினார்கள். முன்னதாக அத்ரங்கி ரே படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தனுஷ் கலந்து கொண்டார். View this post on Instagram A post shared by Dhanush (@dhanushkraja) வெள்ளை நிற உடையில் தனுஷை … Read more

சரத்குமார் நடித்துள்ள இரை: ஓடிடியில் வெளியானது

சரத்குமார் நடித்துள்ள இரை: ஓடிடியில் வெளியானது 2/21/2022 5:46:49 PM சரத்குமார் நடித்துள்ள முதல் வெப் தொடர் இரை. இதனை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். இதில் சரத்குமார் தவிர ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கடாரம் கொண்டான், தூங்காவனம் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கி உள்ளார். சரத்குமாருடன் கிருஷ்ண தயாள், அபிஷேக் சங்கர், நிழல்கள் ரவி, கவுரி நாயர், ஷரிஷா ஆகியோர் நடித்துள்ளார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கி உள்ளார். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் கொடியவர்களை வேட்டையாடும் … Read more

புழுதி பறக்க நடந்துவரும் பாலகிருஷ்ணா! மிரட்டும் ‘என்பிகே107’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘என்பிகே107’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போயபதி சீனு இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ சமீபத்தில் வசூல் சாதனை செய்தது. இதனைத்தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்த ‘க்ராக்’ படத்தின் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். பாலகிருஷ்ணாவின் 107 வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. புழுதி தெறிக்க லுங்கி சட்டையில் … Read more

பெற்றோரிடம் ஆதாரம் காட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத் செய்த காரியம்

மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள ஆராட்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இது மலையாளத்தில் இவர் நடிக்கும் இரண்டாவது படம். இந்த படத்தில் ஆர்டிஓ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் மோகன்லால் மற்றும் உடன் நடித்த நடிகர்கள் சித்திக், நந்து, ரக்ஷனா உள்ளிட்ட பலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதற்கு அடுத்து அவர் பதிவிட்டுள்ள செய்திதான் ஹைலைட்டான விஷயமே. அதாவது பொதுவாக … Read more

சுப்ரமணியபுரத்தை மிஞ்சியதா 'வீரபாண்டியபுரம்'..?: ஜெய் படத்தின் முழு விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். கடைசியாக இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்‘ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது இவர் இயக்கத்தில் வீரபாண்டியபுரம் படம் வெளியாகியுள்ளது. ஜெய், மீனாக்ஷி கோவிந்தராஜன், காளி வெங்கட், பாலா சரவணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின் ஜெய் நடிப்பில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் கதாநாயகி மீனாட்சி. இவருக்கும் கதாநாயகன் ஜெயிக்கும் இடையில் காதல் … Read more