கொரோனாவுக்கு உலக அளவில் 6,616,169 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.16 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,616,169 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 640,503,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 620,221,130 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 35,787  பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பருவால் வந்த தழும்பு முகத்தில் அசிங்கமா இருக்கா? இதனை போக்க இதோ சூப்பரான டிப்ஸ்

பொதுவாக நம்மில் பலருக்கு பெரும் தொல்லையாக இருப்பது பருக்கள் பிரச்சினையே.  பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  இதனை சரியான முறையில் பராமரிக்கமால் விட்டால் பல ஆண்டுகள் கழித்தும் பருக்களால் ஏற்பட்ட கருமையான தழும்புகள் முகத்தை ஆக்ரமித்துவிடும். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. அந்தவகையில் பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் தழும்புகளை நிச்சயமாக எளிய பொருட்கள் மூலம் போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.  … Read more

வயிற்றுக் கொழுப்பை எளியமுறையில் கரைக்க வேண்டுமா? இதே சில உடற்பயிற்சிகள் உங்களுக்காக

 பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் தொப்பை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். பெரியவர்கள் வரை பள்ளி செல்லும் சிறுவன் கூட தொப்பையுடன் இருப்பதை காண முடிகிறது. இதற்கு காரணம் உணவு பழக்கத்தில் தொடங்கி, வாழ்க்கை முறையே மாறி இருப்பது தான். தொப்பை வயிற்றின் உள்ளேயும், அடிவயிற்று பகுதியிலும் கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது. இதனை கரைக்க சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். ரிவர்ஸ் க்ரஞ்ச் (Reverse crunch) உடற்பயிற்சியால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, சிக்ஸ் … Read more

“தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!" – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாடு – கேரளா பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை கனமழை வரும் 16-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்பட்சத்தில், அது கரையை நோக்கி நகரும்போது வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. அது புயலாக … Read more

நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு கனடா மகிழ்ச்சி செய்தி!

கனேடிய இராணுவத்தில் இனி நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோருக்கு இடமுண்டு. கனேடிய ஆயுதப் படை (CAF) அறிவிப்பு கனேடிய இராணுவத்தில் குறைந்த ஆட்சேர்ப்பு நிலைகள் காரணமாக நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோர் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று கனேடிய ஆயுதப் படை (CAF) அறிவித்துள்ளது. கனடாவில் 10 ஆண்டுகளாக வசிக்கும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனேடிய ஆயுதப் படைக்கு விண்ணப்பிக்க அனுமதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Royal Canadian Mounted Police (RCMP) “காலாவதியான ஆட்சேர்ப்பு செயல்முறையை” மாற்றுவதாக … Read more

புதுக்கோட்டை: மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவர்கள் உட்பட மூவர் பலி! – சோகத்தில் மூழ்கிய கிராமம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பறையத்தூர் கிராமத்தில் இரு மாணவர்கள் பள்ளியில் படித்து வந்தனர். தற்போது பருவமழை துவங்கி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தற்போது தினமும் பள்ளி முடிந்ததும் மாலை அந்த மாணவர்களின் சித்தப்பா இளையராஜா அவர்களை பள்ளியிலிருந்து வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டு வந்துள்ளார். வழக்கம் போல், இன்று பள்ளி முடிந்ததும் மாலை இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்புனவாசலிலிருந்து பறையூருக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, சிங்காரக்கோட்டைகோவில் என்ற … Read more

பிரித்தானியாவில் வழக்கத்திற்கு மாறாக பரவும் ஸ்கார்லெட் காய்ச்சல்! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஸ்கார்லெட் காய்ச்சல், பிரித்தானியாவில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பரவுவதாக எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் ஸ்கார்லெட் காய்ச்சலின் (Scarlet fever) வழக்குகள் அதிகரித்து வருகிறது, இது பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும் ஒரு தொற்று தொற்று ஆகும். மருத்துவர்கள் புகார்- எச்சரிக்கை! இந்த ஆண்டின் இந்த நேரத்தில் ஸ்கார்லெட் காய்ச்சலின் பாதிப்புகள் “வழக்கத்திற்கு மாறாக அதிகமாக” உள்ளதாக பொது மருத்துவர்கள் (GPs) புகாரளிக்கின்றனர். இந்நிலையில், சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கவும், நோய் பரவுவதை சரிபார்க்கவும் அறிகுறிகளைப் … Read more

15.11.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 15 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 6.77%ஆக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிப்பு

டெல்லி: நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 6.77%ஆக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 7.41%ஆக இருந்த நிலையில் சில்லறை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 0.64% குறைந்து 6.77%ஆக உள்ளது. நகர்புறத்தில் 6.5%ஆக உள்ள சில்லறை விலை பணவீக்க விகிதம் கிராமப்புறங்களில் 0.5% உயர்ந்து 7% ஆக உள்ளது.

“நான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள்; அப்படியிருக்கும்போது என்மேல..!" – நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டவர்கள் என்ற அடிப்படையில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமிற்கு வருகை தந்த நளினி, கிட்டத்தட்ட 6 மணி நேரம் … Read more