2024 மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட பட்டியல் வெளியீடு: 195 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி இரவு … Read more

‘சர்ச்சை கருத்துகளை தவிர்ப்பீர்’ – அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: சர்ச்சை கருத்துகளை தவிர்க்குமாறும், டீப்-ஃபேக் விவகாரத்தில் கவனமுடன் இருக்குமாறும் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். தனது அமைச்சரவை சகாக்களுடன் நடைபெற இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தயார் நிலை குறித்தும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான விரிவான செயல் திட்டம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் நிதானத்தை பிரதானமாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் பேசும் போது வார்த்தைகளை … Read more

''ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலம் சிறுதொழில்களை மோடி அழித்து விட்டார்'' – ராகுல் காந்தி தாக்கு

குவாலியர்: “கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறுதொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நடந்து வரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பின்னர் நாம் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கியுள்ளோம். இந்த … Read more

மேற்கு வங்கம் | அசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளர் பவன் சிங்  விலகல் – திரிணமூல் விமர்சனம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டிருந்த போஜ்புரி பாடகர் பவன் சிங் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பவன் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சி என் மீது நம்பிக்கை வைத்து அசான்சோல் தொகுதியின் வேட்பாளராக எனது பெயரை அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் தேர்தலில் அசன்சோல் … Read more

அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி டாக்டர் ஹர்ஷ்வர்தன்… காரணம் என்ன!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் ஆன டாக்டர் ஹர்ஷ்வர்தன், தான் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

அரசியலைவிட்டு விலகுகிறேன் – முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு

புதுடெல்லி: முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அரசியலைவிட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், டெல்லியின் தற்போதைய எம்பிக்களான ஹர்ஷ் வர்தன், பர்வேஷ் வர்மா, ரமேஷ் பிதுரி, மீனாட்சி லேகி ஆகிய 4 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் புதிய முகம்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலைவிட்டே விலகுவதாக முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் … Read more

பாஜகவுக்கு பிரதமர் மோடி கொடுத்த நன்கொடை… எவ்வளவு தெரியுமா?

BJP Donation For Nation Building: பாஜகவுக்கு நன்கொடை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியின் ஒரு தொகையை வழங்கி உள்ளார்.

மணிப்பூர் ஆயுதக் கொள்ளை வழக்கில் 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் 

புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது, பிஷ்ணுபூர் காவல்நிலைய ஆயுத கிடங்கில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். அசாமின் குவாஹத்தியில் உள்ள கம்ரூப்பின் (மெட்ரோ) தலைமை ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமீபத்தில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. சிபிஐ-ன் குற்றப்பத்திரிகையில், லைஷ்ராம் பிரேம் சிங், குமுசம் திரன் என்கிற தப்கா, மொய்ரங்தேம் ஆனந்த் சிங், அதோக்பம் … Read more

‘ஆல் தி பெஸ்ட்’ – என்டிஏவில்  நீடிப்பேன் என்ற பிஹார் முதல்வர் பேச்சுக்கு தேஜஸ்வி  எதிர்வினை

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடிக்கடி அணி மாறுவதைச் சுட்டிக்காட்டி அவரை விமர்சனம் செய்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், “நிதிஷ் குமார் அவரது வார்த்தைகளில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சனிக்கிழமை தேஜஸ்வி கூறுகையில், “நாங்கள் அவரை (நிதிஷ் குமார்) வாழ்த்துகிறோம். இந்த முறை அவர் இப்போது இருக்கும் இடத்திலேயே (என்டிஏ) நீடிப்பேன் என்று கூறியுள்ளார். இந்தமுறையாவது அவரது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இண்டியா கூட்டணியில் இருந்து … Read more

பெங்களூரு குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குகிறது – துணை முதல்வர் டி.கே. சிவகுமார் விமர்சனம்

பெங்களூரு: பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் விமர்சித்துள்ளார். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் இருவர், வாடிக்கையாளர்கள் 7 பேர் என 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 9 பேரும் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகாவின் பிரதான … Read more