மித் vs ரியாலிட்டி: தேர்தல் ஆணையத்தின் புதிய அதிரடி திட்டம் என்ன?

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மித் vs ரியாலிட்டி (Myth vs Reality) திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024 குறித்த அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர், அரசியல் கட்சிகள் பொய்ச் செய்திகளை பரப்பக் கூடாது என எச்சரித்தார். மேலும், சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க ‘மித் vs ரியாலிட்டி’ திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மித் vs … Read more

மக்களவைத் தேர்தல் அட்டவணை முதல் அமித் ஷாவின் தேர்தல் பத்திர ‘கணக்கு’ வரை | செய்தித் தெறிப்புகள் @ மார்ச் 16, 2024

ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி,ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19-ல் வாக்குப் பதிவு: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக … Read more

“நான் 2047-க்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: தான் ஏற்கெனவே 2047-ஆம் ஆண்டுக்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகவும், இந்தியா அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடியிடம், “2029 மக்களவை தேர்தலுக்கும் இப்போதே தயாராகி விட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர், “நீங்கள் 2029-ஆம் ஆண்டிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நான் ஏற்கெனவே 2047-ஆம் ஆண்டுக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், … Read more

மக்களவைத் தேர்தல் 2024 அட்டவணையும், 4 மாநில பேரவைத் தேர்தல் தேதிகளும் – ஒரு பட்டியல்

மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஏழு கட்டங்கள்: 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது. 94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் … Read more

543-க்கு பதிலாக 544: தேர்தல் அட்டவணையில் ஒரு கூடுதல் தொகுதி ஏன்?

புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தலில், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு மட்டும் இரண்டு நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, 543 தொகுதிகள் எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக 544 தொகுதிகள் என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டது. மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை வாக்குப் பதிவு நடக்கின்றன. தேர்தல் அட்டவணையில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு பதிலாக ‘544 தொகுதிகள்’ என இடம்பெற்றுள்ளது. … Read more

எந்த மாநிலங்களில் எப்போது தேர்தல்? – காஷ்மீர் முதல் தமிழகம் வரை… முழு விவரம்!

Lok Sabha Election 2024, 7 Phase Wise Details: எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த கட்டங்களில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பதை இதில் முழுமையாக காணலாம்.

தேர்தலில் வாக்களிக்க எந்தெந்த அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்?

புதுடெல்லி: தேர்தலில் வாக்களிக்க எந்தெந்த அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை, வங்கி அல்லது தபால் நிலையங்களில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டுக்கான ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தின் கீழ் RGI (Registrar General & Census … Read more

4 மாநில சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தேதிகள் அறிவிப்பு – முழு விவரம்

Four States Assembly Election 2024 Date Announced Tamil : ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்: கட்டுப்பாடுகள் என்னென்ன?

புதுடெல்லி: ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 2024-ஐ ஒட்டிய கட்டுப்பாடுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளடக்கிய, உண்மையான, … Read more

தேர்தலுக்கு தயாராக உள்ளோம், எங்கள் பணிகள் எங்களுக்காக பேசும்: பிரதமர் மோடி உற்சாக ட்வீட்

Lok Sabha Election 2024: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதன் கூட்டணிக் கட்சிகளின் தயார்நிலையை வலியுறுத்தினார்.