உள்ளூர் மொழிகளில் வழக்காட அனைத்து நீதிபதிகளும் ஆதரவு – மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு

சென்னை: இந்தியாவில் ஒரு மொழியை மட்டும் திணிப்பதை எதிர்க்கிறேன். நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12-வதுபட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில், 5,176 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களும், சிறப்பாகப் பயின்ற 41 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. முதன்மை … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் போல் நடித்து ரூ.41 லட்சம் பறிப்பு: பலே பெண் சிக்கினார்

பெங்களூரு: நடிகை கீர்த்தி சுரேஷை காதலிப்பதாக நம்பி சமூக வலைதளம் மூலமாக  ரூ.41 லட்சம் பணத்தை இழந்து இளைஞர் கொடுத்த புகாரின் பெயரில் மஞ்சுளா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், சிந்தகி நகரை சேர்ந்த பரமேஸ்வர் ஹிப்பர்கி. இவர் ஐதராபாத்தில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். திடீரென ஒரு நாள் நடிகை கீர்த்தி சுரேஷ் பெயரில் உள்ள சமூக வலைதள பக்கத்தில் இருந்து இவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்ய திட்டம்

புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தேசிய பல் மருத்துவ ஆணையம், தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணையம் உருவாக்குதல் உள்ளிட்டவை தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும். நடப்பாண்டில் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை தொடங்க சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

லூதியானா கோர்ட்டில் குண்டு வெடிப்பு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து தேடிய குற்றவாளி கைது

புதுடெல்லி: லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி லூதியானாவில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் அமிர்தசரசை சேர்ந்தவர் ஹர்பிரீத் சிங்கிற்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஒரு … Read more

எல்லை விவகாரம் மகாராஷ்டிரா அமைச்சர்கள் கர்நாடகா வர தடை

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது,  ‘‘கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையில் எல்லை பிரச்னை தொடர்பான தகராறு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்னை  காரணமாக இரு மாநில எல்லையில் பதட்டம் நிலவுகிறது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில்  பெலகாவியில் இயங்கி வரும் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி (எம்இஎஸ்) அமைப்பினரின் அழைப்பு ஏற்று, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் வரும் 6ம் தேதி பெலகாவி வருவதாக தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களை … Read more

டிரோனில் கடத்த முயன்ற 5 கிலோ ஹெராயின் பறிமுதல்

சண்டிகர்: பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வயலில் சுமார் 5 கிலோ ஹெராயினுடன் டிரோன் ஒன்று கைப்பற்றப்பட்டது. பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் டிரோன் ஊடுருவல் முயற்சிகளை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். அவ்வப்போது இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் டிரோன்கள் சுட்டு வீழத்தப்பட்டுகின்றது. நேற்று தர்ன் தாரன் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்பகுதியில் டிரோன் ஒன்று விழுந்து கிடந்தது. … Read more

ஸ்டெர்லைட் வழக்கு ஜனவரியில் விசாரணை

புதுடெல்லி: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய மேல்முறையீட்டு மனு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் ஆகிய அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், இந்த வழக்கு நீண்ட நாட்காளாக … Read more

சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து 7 பேர் பலி

ஜக்தல்பூர்: சட்டீஸ்கரின் பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள மால்கான் கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது. நேற்று காலை திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களில் 6 பேர் பெண்கள்.  

கழுத்தில் கம்பி குத்தி ரயில் பயணி பரிதாப பலி

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில் விபத்தில் இரும்பு கம்பி கழுத்தில் குத்தியதில் ஒருவர் பலியானார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து டெல்லி வரை செல்லும் நீலச்சல் எக்ஸ்பிரஸ் ரயில், பிரயாக்ராஜ் மண்டலத்தில் உள்ள தன்வார்-சோம்னா பகுதியை நேற்று காலை 8.45 மணிக்கு கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளம் அமைக்க வைக்கப்பட்டிருந்த கம்பி ஒன்று ரயிலில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து  ரிஷிகேஷ் துபே என்ற பயணியின் கழுத்தில் பாய்ந்தது. இதில், உட்கார்ந்த … Read more

மற்றொருவருடன் ‘டேட்டிங்’காதலியை சுட்டுக் கொன்று எரித்த காதலன்

ராய்ப்பூர்: காதலி மற்றொருவருடன் டேட்டிங்கில் இருந்ததால், அவரை காதலனே சுட்டுக்கொன்று சடலத்தை எரித்தார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தனு குர்ரே (26) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவரது காதலன் ஒடிசா மாநிலம் பலாங்கீரை சேர்ந்த தொழிலதிபர் சச்சின் அகர்வால்(40). இருவரும் கடந்த 2019 முதல் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளனர். கடந்த மாதம் 19ம் தேதி, காதலியை பார்க்க சச்சின் அகர்வால் ராய்ப்பூர் வந்துள்ளார். இருவரும் அங்குள்ள மாலில் சினிமா … Read more