கடந்த வாரம் துரோகி! இந்த வாரம் நண்பேண்டா! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

Rajasthan Politics: ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மீண்டும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றியுள்ளனர். இது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியங்களையும் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. இருவருக்கும் இடையே பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதா என்று பலரும் வியப்படைகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா (Bharat Jodo Yatra) விரைவில் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானை அடைய உள்ளது. யாத்திரை மாநிலத்திற்கு வருவதற்கு முன்னதாக, ராஜஸ்தான் காங்கிரஸின் முக்கியமான … Read more

ஒர்க் ப்ரம் ஹோமின் அடுத்த லெவல்; மணமேடையிலும் வேலை லேப்டாப்புடன் மணமகன்

கொல்கத்தா: கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு வீட்டிலிருந்து வேலை செய்யும் ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ பிரபலமாகி விட்டது. ஐடி துறையில் பணியாற்றும் பலரும் இன்னமும் ஒர்க் ப்ரம் ஹோமில் இருந்து வெளிவரவில்லை. அலுவலகத்திற்கு சென்றால் கூட நமது பணி நேரம் 8 மணி நேரம் தான். ஆனால் ஒர்க் ப்ரம் ஹோம் என்ற பெயரில் வேலை செய்வதற்கு என்று எந்த நேர காலமும் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் வேலை செய்ய தயாராக இருக்க … Read more

புதுச்சேரி | மணக்குள விநாயகர் கோயில் யானை ‘லட்சுமி’ நடைபயிற்சியில் மயங்கி விழுந்து திடீர் மரணம்: மீளா துயரில் பக்தர்கள்

புதுச்சேரி: ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு … Read more

நடிகை ஷோபிதாவுடன் நாக சைதன்யா வெளிநாடு டூர்

ஐதராபாத்: நடிகர் நாக சைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலா ஜோடியாக வெளிநாடு டூர் சென்றுள்ளனர். நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, சமந்தா காதலித்து மணந்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டனர். பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷாவின் தோழி வானதியாக நடித்தவர் நடிகை ஷோபிதா துலிபாலா. இந்நிலையில் ஷோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலிப்பதாக தகவல் பரவியது. இதை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு இந்த ஜோடி பறந்து சென்றுள்ளது. அங்கு … Read more

ஒரேயொரு Mailதான்.. சுற்றிச்சுழன்ற பெங்களூரு Airport நிர்வாகம்; சுவாரஸ்ய நிகழ்வின் பின்னணி!

உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில் ஒரு பொருளை தொலைத்து விட்டால், `அது மீண்டும் கிடைக்குமா’ என்பதில் சந்தேகமே எவருக்கும் இருக்கும். கடலில் போட்ட ஊசிபோல, நம் பொருள் என்ன ஆகுமே என்றே பொதுபுத்தி இருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல, நம் பொருள்கள் நிச்சயம் கிடைக்கும் என மெய்ப்பித்து காட்டியிருக்கிறது பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த சம்பவம். கூட்டம் நிறைந்த சந்தை, பொது போக்குவரத்து நிலையங்களில் இஷ்டமான பொருளாகவே இருந்தாலும் ஒருமுறை … Read more

தெலங்கானா அரசுப் பள்ளியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வங்கி நடத்தும் மாணவர்கள்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஜெனகாம மாவட்டம், சில்பூரில் உள்ள அரசு பள்ளி, 10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு சேமிப்பையும், வங்கி செயல்படும் முறையையும் கற்றுத் தருகிறது. இதனால், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் இணைந்து வங்கியை தொடங்கி அவர்களே நிர்வகித்து வருகின்றனர். வீட்டில் செலவுக்கு கொடுக்கும் பணத்தில் மிச்சப்படுத்தி, அந்த வங்கிக் கணக்கில் சேமித்து வருகின்றனர். இங்கு பணம் செலுத்தினால் ரசீது வழங்கப்படுவதுடன் பணம் எடுப்பதற்கென படிவமும் உண்டு. மேலாளர், காசாளர், வங்கி ஊழியர்கள் … Read more

தேசிய கட்சிகள் பட்டியலில் நடப்பாண்டில் தேர்தல் நன்கொடையாக ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம்

டெல்லி: தேசிய கட்சிகள் பட்டியலில் நடப்பாண்டில் தேர்தல் நன்கொடையாக ரூ.614.50 கோடி பெற்று பாஜக முதலிடம் பெற்றுள்ளது. நடப்பாண்டில் 7 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விபரங்கள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை அளித்துள்ளது. தேர்தல் நன்கொடையாக 7 தேசிய கட்சிகள் மொத்தமாக ரூ.778.7 கோடியாக பெற்ற நிலையில் ரூ.614.50 கோடி பாஜக பெற்றுள்ளது.

ராவணன் மாதிரி பிரதமர் மோடிக்கு 100 தலையா இருக்கு? – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘ராவணன் மாதிரி பிரதமர் மோடிக்கு 100 தலையா இருக்கு?’’ என கிண்டலாக கூறினார். குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது. பிரதமர் நரேந்திர மோடி, தான் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மாநகராட்சி … Read more

கொலிஜியம் பரிந்துரையை ஏற்று 2 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்; 20 பேரை நிராகரித்த பின் நியமனம்

புதுடெல்லி: கொலிஜியம் பரிந்துரையை ஏற்று, 2 வக்கீல்களை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் நடைமுறையை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 25ம் தேதி 20 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் அனுப்பிய கோப்புகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் கடும் … Read more

குஜராத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது..!!

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1ம் தேதி, 5ம் தேதி என 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை 1ம் தேதி தேர்தல் நடப்பதால், அங்கெல்லாம் பிரசாரம் நேற்று மாலை வரை நடைபெற்றது. வழக்கமாக பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நடைபெற்று வந்த குஜராத்தில், இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் 181 வேட்பாளர்களை களம் இறக்கி, ஆட்சியைப் பிடிக்கும் கனவில் இருப்பதால் மும்முனை … Read more