பப்பில் மப்பு ஆனவரை தூக்கிச் சென்றனர் கேரளாவில் மாடல் அழகி ஜீப்பில் கூட்டு பலாத்காரம்: மற்றொரு அழகி உட்பட 4 பேர் கைது  

திருவனந்தபுரம்: கேரளாவில் பப்புக்கு சென்று மப்பு ஆன 19 வயது மாடல் அழகியை தூக்கிச் சென்று, ஓடும் ஜீப்பில் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாடல் அழகியும் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், காசர்கோட்டை சேர்ந்த 19 வயதான இளம்பெண், கொச்சியில் தங்கி மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கொச்சி ரவிபுரத்திலுள்ள ஒரு மது பாருக்கு, ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான டிம்பிள் லாவா என்பருடன் … Read more

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோற்ற வேட்பாளருக்கு ரூ.2 கோடி பணம், கார்: கிராம மக்கள் பாசமழை

ரோடக்: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தோற்ற வேட்பாளருக்கு கிராம மக்கள் ரூ.2 கோடி பணமும், பெரிய காரையும் பரிசாக கொடுத்துள்ளனர். அரியானா மாநிலம், ரோடக் மாவட்டத்தில் உள்ள சித்தி கிராமம். இங்கு கடந்த 12ம் தேதி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில், இதே கிராமத்தை சேர்ந்த தரம்பால் தலால் அகா கலாவும், நவீன் தலாவும் போட்டியிட்டனர். இதில், தரம்பால் 66 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த கிராமம் மிகவும் பதற்றமிக்கது. தரம்பால் தோற்றதால் … Read more

ஸ்டீல், இரும்பு தாது ஏற்றுமதி வரி ரத்து ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஸ்டீல் மற்றும் இரும்பு தாதுக்கான ஏற்றுமதி வரியை ரத்து செய்து ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிந்தது. அதில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி (இஇபிசி) 21 சதவீதம் சரிந்து, ரூ.59,200 கோடியாக இருந்தது. குறிப்பாக, இஇபிசி ஏற்றுமதி சரிவிற்கு ஸ்டீல் மற்றும் இரும்பு தாது கட்டிகளின் ஏற்றுமதி சரிவே முக்கிய காரணமாகும். இதன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒன்றிய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, … Read more

மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் திடீரென வெடிவிபத்து..!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்கனடி என்ற பகுதியில் சனிக்கிழமையன்று மாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த பயணியும், ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே எதுவும் முடிவுக்கு வர முடியாது என தெரிவித்த காவல்துறையினர், மக்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், பீதியடையாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். ஆட்டோவில் பயணித்தவரின் பையை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து … Read more

No Money For Terror: 'உலக அமைதிக்கு எதிரானது பயங்கரவாதம்!' – அமித் ஷா

பயங்கரவாதம் உலக அமைதிக்கு எதிரானது எனக் குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதனை வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுப்பது குறித்து விவாதிக்கும் சர்வதேச அளவிலான இரண்டு நாள் மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. தலைநகர் டெல்லியில் நேற்று துவங்கிய மாநாடு இன்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் … Read more

ஆம் ஆத்மி கட்சி அமைச்சருக்கு மசாஜ் செய்த வீடியோ கசிந்தது குறித்து அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்..!

டெல்லி திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ வெளியான நிலையில், வீடியோ கசிந்தது எப்படி என கேட்டு அமலாக்கத்துறைக்கு, டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊடகங்களுக்கு வீடியோவை கசியவிட்டதாக குற்றஞ்சாட்டிய சத்யேந்தர் ஜெயின் தரப்பினர், அமலாக்கத்துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். வழக்கு தொடர்பான ஆதாரங்கள் வெளியாகாது என அமலாக்கத்துறை உறுதிமொழி அளித்த நிலையில், வீடியோ கசிந்தது தொடர்பாக வரும் 21-ம் தேதி பதிலளிக்க நீதிமன்றம் … Read more

இந்திரா காந்தியின் 105வது பிறந்த நாள்: சோனியா, ராகுல் மரியாதை

மும்பை: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.  ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடைப்பயணத்தின் இடையே, இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது … Read more

‘திட்டங்களை கிடப்பில்போடும் சகாப்தம் மறைந்தது’ – பிரதமர் மோடி

தொடங்கும் திட்டங்களை காலம் தாழ்த்தி நிறைவேற்றுவது, முடிக்காமல் விடுவது ஆகியவற்றுக்கான சகாப்தம் மறைந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தின் இட்டா நகருக்கு அருகே 640 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். மேலும், 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட 600 மெகா வாட் திறன் கொண்ட கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து, முதல் … Read more

தேர்தல் பணிகளில் இருந்து ‘பப்ளிசிட்டி’ ஐஏஎஸ் அதிகாரி நீக்கம்: போஸ் கொடுத்த போட்டோவால் வந்த வினை

அகமதாபாத்: குஜராத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், பப்ளிசிட்டிக்காக தனது புகைப்படத்தை வெளியிட்டதால் அவரை தேர்தல் பணியில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள பாபுன்நகர் மற்றும் அஸ்வாரா என்ற இரு தொகுதிகளில் அபிஷேக் சிங் என்ற ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவுகளை போட்டு வந்தார். இந்நிலையில், தான் தேர்தல் நடத்தும் அலுவலராக … Read more

'தமிழை காக்க வேண்டியது இந்தியர்களின் கடமை' – பிரதமர் மோடி பேச்சு!

“உலகின் பழம்பெரும் மொழியான தமிழ் மொழியை காக்க வேண்டியது 130 கோடி இந்தியர்களின் கடமை. அதனை காக்க தவறினால் நாட்டிற்கு நஷ்டம் ” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தனது உரையை ‘வணக்கம் காசி, வணக்கம் தமிழ்நாடு’ என தமிழில் கூறி துவக்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க … Read more