டாக்டர் கிட்னியை எடுத்து எனக்கு பொருத்துங்க: பாதிக்கப்பட்ட பெண் கதறல்..!

எனது கிட்னிகளை திருடிய மருத்துவரை உடனடியாக கைது செய்து, மாற்று அறுவை சிகிச்சைக்காக அவருடைய கிட்னி எடுத்து எனக்கு பொருத்த வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரைச் சேர்ந்தவர் சுனிதா தேவி (38). இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்படுள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இவரை பரிசோதித்த டாக்டர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு இருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் … Read more

'நான் ஒரு முதல்வர்… நாட்டை விட்டு ஓடிவிடுவேனா?' – ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: “நான் இன்று விசாரணை ஆணையத்தின் சம்மனை எதிர்கொள்வதாய் இருக்கிறேன். நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்” என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்தெரிவித்துள்ளார். தன் மீதான சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டு வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராவதற்கு முன்னர், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ” நான் ஒரு முதல்வர். நான் அரசியல் சாசன ரீதியிலான பொறுப்பை வகிக்கிறேன். ஆனால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள விதத்தைப் பார்க்கும் போது … Read more

புதுச்சேரியில் பாமக போராட்டம்: சட்டப் பேரவை நோக்கி முற்றுகையிட முயற்சி..போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாமக போராட்டம் நடத்தி வருகிறது. சட்டப் பேரவை நோக்கி முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு அரண்களை தாண்டி முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்று அதிகாலை சபரிமலையில் நடை திறப்பு – கொட்டும் மழையிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம்

சரண கோஷங்கள் முழங்க மண்டல பூஜைக்காக இன்று அதிகாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி கருவறையில் தீபம் ஏற்றினார் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றினார். இதைத் தொடர்ந்து சபரிமலை புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மற்றும் மாளிகபுரம் மேல்சாந்தி ஹரிஹரன் நம்பூதிரி ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் … Read more

அரசு மரியாதையுடன் நடிகர் கிருஷ்ணா உடல் தகனம்: திரளான ரசிகர்கள் இறுதி அஞ்சலி

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், முன்னாள் எம்பியும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, நேற்று முன்தினம் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து உடல், நேற்று காலை, நடிகர் கிருஷ்ணாவுக்கு சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், … Read more

LPG கேஸ் சிலிண்டர் இனி QR குறியீடுடன்… மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். QR குறியீடு கொண்ட சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நீங்கள் சிலிண்டரைக் கண்காணிக்கவும் டிரேஸ் செய்யவும் முடியும். எல்பிஜி சிலிண்டரைக் கண்காணிக்கலாம் இந்தியன் ஆயில் (IOCL) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என்று கூறினார். 2022 ஆம் ஆண்டின் உலக எல்பிஜி வாரத்தையொட்டி, வாடிக்கையாளர்கள் … Read more

சபரி மலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என கேரளா தேவசம் போர்டு அமைச்சர் விளக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைக்காக நடை திறந்த நிலையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களை எந்தெந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அனுமதிக்கப்படலாம் என்பது குறித்து புத்தகம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 2018ம் ஆண்டு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கலாம் என்ற வார்த்தையை நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தால், இந்த கருத்து பலரினிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கேரளா தேவசம் … Read more

”ஒருவேளை இன்ஜினியரா இருப்பாரோ” – தவறவிட்ட airpod-ஐ சாமார்த்தியமாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!

இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில் அவ்வப்போது வித்தியாசமான, ஆச்சர்யமளிக்கக் கூடிய செயல்கள் நடைபெறுவதும் அது சமூக வலைதளங்களில் PeekBengaluru என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பகிரப்படுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அந்த வகையில், ஆட்டோவில் சென்ற ஒரு பெண்ணின் airpod அரை மணிநேரத்திற்குள் அவரிடமே ஒப்படைக்கப்பட்ட சம்பவம் குறித்த ட்வீட்தான் தற்போது நெட்டிசன்களின் கமென்ட்ஸ்களுக்கு தீனி போட்டிருக்கிறது என்றே கூறலாம். Lost my AirPods while traveling in an auto. Half an hour later this … Read more

ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சியில் தேசிய கீதத்துக்கு பதில் மாற்றி ஒலிபரப்பப்பட்ட பாடல்: பாஜக கிண்டல்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு ஒரு பாடல் இசைக்கப்பட்டது குறித்து பாஜகவினர் ராகுலையும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் வாசிம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிகழ்ச்சி ஒன்றில், தேசிய கீதம் என்ற பெயரில் வேறு ஒரு பாடல் ஒலிபரப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டுடன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பிழை குறித்து ராகுல் காந்தி, காங்கிரஸ் … Read more

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட எச்சரிக்கை விடுப்பு..!!

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்ததால் 2ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 140 அடியானதும் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.