திருமண ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக காரை ஹெலிகாப்டர் போல மாற்றியவருக்கு அபராதம்

லக்னோ: காரை ஹெலிகாப்டர் போல டிசைன் செய்த நபருக்கு உத்தரபிரதேச மாநில போலீஸார் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டம் அம்பேத்கர் நகரிலுள்ள காஜுரி பஜாரைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் பழைய கார்களை விலைக்கு வாங்கி அதை ஸ்டைலாக மாற்றி அமைத்து விற்பனை செய்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு காரை வாங்கி, அதை ஹெலிகாப்டர் போல மாற்றி அமைத்துள்ளார். காரின் மேல்பகுதியில் சுழலும் ஃபேன், பின்பகுதியில் ஹெலிகாப்டரில் உள்ள … Read more

கட்சிகளின் இலவச வாக்குறுதிகளுக்கு எதிராக மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை (பிஐஎல்) உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும், சின்னங்களை முடக்கவும் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த பொது நல மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலவச வாக்குறுதி தொடர்பான இந்த பொது நல மனுவின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் … Read more

பல இலக்குகளை தகர்க்கும் புதிய வெடிகுண்டு கருவிக்கு காப்புரிமை பெற்றார் ராணுவ மேஜர்

புதுடெல்லி: எளிதில் எடுத்துக் செல்லக்கூடிய பல இலக்குகளை தகர்க்கும் புதிய வகை வெடிகுண்டு கருவியை (டபிள்யுஇடிசி) ராணுவத்தின் இன்ஜினியரிங் படைப் பிரிவில் பணியாற்றும் மேஜர் உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளார். இந்திய ராணுவத்தில் ‘எக்ஸ் ப்ளோடர் டைனமோ கெபாசிடர் (இடிசி)’ என்ற குண்டுகளை வெடிக்க செய்யும் கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் 400 மீட்டர் தூரம் உள்ள இலக்கை வயர்கள் மூலம் இணைக்கப்பட்ட குண்டு மூலம் தகர்க்க முடியும். ஆனால், ராணுவத்துக்கு அதிக தொலைவில் உள்ள இலக்கு … Read more

போலி என்கவுன்ட்டர் விவகாரம்: மும்பை முன்னாள் காவல் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை

மும்பை: மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி பிரபல தாதா சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் வாசி பகுதியில் ராம் நாராயண் குப்தா என்ற லக்கன் பாய்யாவை அவரது நண்பர் அனில் பேடாவுடன் சேர்த்து போலீஸார் கைது செய்தனர். அதேநாள் மாலை புறநகர் வெர்சோவாவில் உள்ள நானி பூங்கா அருகில் குப்தாவை போலி என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறி கடந்த 2013-ம் … Read more

தெலங்கானா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சவுந்தர்ராஜன், ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று ஆளுநர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். Source link

ஆந்திராவின் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் தரை இறங்கி பயிற்சி

பாபட்லா: ஆந்திர மாநிலம், பாபட்லாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், விமானப்படை விமானங்களை தரையிறக்கும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டன. ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தில் உள்ள சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்களை ஆபத்தான நேரங்களில் தரை இறக்கும் பயிற்சி விமானப்படை சார்பில்நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. காலை 11 மணிக்கு நான்கு சுகோய் ரக போர் விமானங்கள், கொரிசபாடு எனும் இடத்தில் இருந்து, ரேனங்கிவரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் 5 அடி உயரத்தில் பறந்தன. பின்னர் அந்த விமானங்கள் … Read more

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர், கூட்டாளி அசாமில் கைது

துப்ரி: அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநில காவல் துறையின் சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த இருவர் சர்வதேச நாடுகளின் எல்லையை கடந்து அசாமில் ஊடுருவி உள்ளதாக அந்த மாநில காவல் துறைக்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் துப்ரியில் … Read more

“மன்னிக்கவும்; என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன்” – மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்திப் பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அதற்காக மன்னிப்பு கோரியதோடு தனது கருத்துகளை திரும்பப்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இணையமைச்சர் ஷோபா தனது கருத்துகளை திரும்பப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எனது தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு, எனது வார்த்தைகள் ஒளியை பாய்ச்ச வேண்டும் என்று நினைத்தேனே தவிர இத்தகைய … Read more

மக்களவை முதல் கட்டத் தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான அறிவிப்பாணையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம். அந்த அறிவிப்பாணையில் மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் பிஹாரில் மார்ச் 28 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், மார்ச் 30-ல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காணும் மற்ற மாநிலங்களான அருணாச்சலப் … Read more

5 நீதிக் கொள்கை, 25 உத்தரவாதம் – விரைவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் செயற் குழு கூட்டத்தில் நேற்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் கட்சியின் 5 நீதிக் கொள்கை மற்றும் 25 உத்தரவாதங்கள் இடம்பெறவுள்ளன. டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, அம்பிகா சோனி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், குமார் செல்ஜா, பிரியங்கா உட்பட பலர் கலந்து … Read more