“இறுதி மூச்சு வரை என் தொகுதி மக்களுடன் உறவு…” – பாஜகவில் சீட் கிட்டாத வருண் காந்தி உருக்கம்

புதுடெல்லி: “இறுதி மூச்சு வரை பில்பித் தொகுதி மக்களோடு இருப்பேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், வருண் காந்தி மிகவும் உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பில்பித் தொகுதியின் எம்பியாக இருப்பவர் வருண் காந்தி. 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். 1996-ல் இருந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த தொகுதியின் எம்பியாக வருண் காந்தி அல்லது அவரது தாயார் மேனாகா காந்தி இருந்துள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் … Read more

தேர்தல் முடிவும் வரை எவ்வளவு பணம் கையில் கொண்டு செல்லலாம்? விதிகள் சொல்வது என்ன?

இந்தியாவில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக பணம் அல்லது அதிக நகைகள் எடுத்து செல்ல கூடாது.  உரிய ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்.  

முதல்வராக கேஜ்ரிவால் நீடிப்பதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) மன்மோகன் மற்றும் மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இது நீதிமன்ற தலையீட்டுக்கு அற்பாற்பட்டது. அரசின் மற்றப் பிரிவுகளும் சட்டத்தின்படி ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று … Read more

லோக்சபா தேர்தல் 2024: உங்கள் ஒரு ஓட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது

Lok Sabha Elections Budget: தேர்தல் நடத்த எவ்வளவு செலவாகிறது? ஒவ்வொரு வாக்காளருக்கும் எவ்வளவு செலவிடப்படுகிறது? அரசியல் காட்சிகள் எவ்வளவு செலவழிக்கின்றனர்? என்பதைக் குறித்து பார்ப்போம்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் நிறைவு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடையும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ரூ.100 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது. அவரை இன்று (மார்ச் 28) வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து … Read more

மேனகாவுக்கு சீட்; மகனை கைவிட்ட பாஜக: காங்., அழைப்பு வந்தும் மவுனம் காக்கும் வருண்

புதுடெல்லி: தாய் மேனகா காந்திக்கு போட்டியிட வாய்ப்பளித்து மகன் வருண் காந்தியை பாஜக கைவிட்டுள்ளது. இதனால், காங்கிரஸில் சேர அழைப்பு வந்தும் மவுனம் காக்கிறார் வருண் காந்தி. மேலும், பாஜகவின் நகர்வால் சுயேச்சையாகவும் போட்டியிட முடியாமல் வேறு கட்சியிலும் சேர முடியாமல் சிக்கலில் சிக்கியுள்ளார் வருண் காந்தி. முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு அவர் எம்.பியாக உள்ள உத்தரப்பிரதேசம் சுல்தான்பூரில் போட்டியிட பாஜக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. இதே மாநிலத்தின் பிலிபித் தொகுதியில் பாஜக எம்பியாக அவரது … Read more

அர்விந்த் கேஜ்ரிவால் கைது குறித்து கருத்து; அமெரிக்க தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்த நிலையில் அந்நாட்டின் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் கைது விவகார வழக்கு நியாயமாக நடைபெற வேண்டும் என்று நேற்று முன்தினம் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. … Read more

மேற்கு வங்க பாஜக வேட்பாளருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி: மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், “ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளையும் திரும்பப் பெறுவதற்கான சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறேன். நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ள அதேவேளையில் ஊழல்வாதிகள் அனைவரும் … Read more

ஆம் ஆத்மி காட்சிக்கு தொடரும் சோதனை: முக்கிய கட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியது ED

ஆம் ஆத்மி கட்சியின் கோவா தலைவருடன், ராமாராவ் வாக், தத்தா பிரசாத் நாயக் மற்றும் பண்டாரி சமாஜ் தலைவர் அசோக் நாயக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற பரிசீலனை: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. பொது ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், சந்தேகப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தவும் சந்தேக நபர்களை கைது செய்யவும், தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் ஆயுதப் படை வீரர்களுக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் ஊடக குழுமத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜம்மு … Read more