எடியூரப்பா மகன் Vs பங்காரப்பா மகள்: ஷிமோகாவில் ஜெயிக்கப்போவது யாரு?

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் இரு முன்னாள் முதல்வர்களின் வாரிசுகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும், முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான கீதா கடந்த ஆண்டு மஜதவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என கர்நாடக கல்வி அமைச்சரும், சகோதரருமான மது பங்காரப்பா காங்கிரஸ் மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து … Read more

SBI தேர்தல் பத்திரம்: தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் கிடைக்கக்கூடிய தகவல்கள்!

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தங்களிடம் வழங்கியதாகவும் அதனை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிஏஏ அமலுக்கு எதிராக செயல்படுவது மாநில அரசுகளால் சாத்தியமா? – ஒரு தெளிவுப் பார்வை

புதுடெல்லி: ”மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்திருந்தார். அதேபோல் கேரளா, மேற்குவங்க அரசுகளும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், குடியுரிமை வழங்குதல் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வருவதால் இதில் மாநில அரசின் நிலைப்பாடு என எதுவும் இருக்க முடியாது. மாநில அரசுகள் … Read more

அருணாச்சலில் நெடுஞ்சாலை திட்டத்துக்கு ரூ.6,621 கோடி ஒதுக்கீடு

இடாநகர்: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அருணாச்சலப் பிரதேத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் 8 முக்கிய நெடுஞ்சாலை திட்டங்களுக்காக ரூ.6,621.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலை 913-ல், 265.49 கி.மீ தூரத்துக்கு 8 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த தொகுப்பில் 1,3,5 ஆகிய திட்டங்கள் ஹர்லி-தல்ஹியா பகுதியையும், 2 மற்றும் 4-வது திட்டங்கள் கர்சாங்-மியாவ்-காந்திகிராம்-விஜய் நகர் ஆகிய பகுதிகளையும் இணைக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார். Source … Read more

Citizenship Amendment Act: இந்திய முஸ்லிம்களுக்கு இதனால் பாதிப்பு வருமா?

Citizenship Amendment Act: இந்த சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் CAA -வில் அவர்களின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை.

சிஏஏவால் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை ரத்தாகாது: இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுத்தீன் ராஜ்வி கருத்து

புதுடெல்லி: உத்தர பிரதேசம் பரேலியில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் (ஏஐஎம்ஜே) கடந்த வருடம் செப்டம்பரில் தொடங்கப்பட்டது. சன்னி முஸ்லிம் பிரிவின் பரேல்வி மதராஸா கொள்கைகளுக்கான முஸ்லிம் அமைப்பான இதன் நிர்வாகத்தில் உ.பி.யிலுள்ள பிரபல பரேலி ஷெரீப் தர்கா உள்ளது. இந்த அமைப்பு தொடக்கம் முதலே பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறது. இதனால், இந்திய முஸ்லிம்கள் இடையே சர்ச்சைக்குரிய அமைப்பாக இது கருதப்படுகிறது. இதன் தேசியத் தலைவரான மவுலானா ஷஹாபுத்தீன் ராஜ்வி … Read more

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனை சேர்ந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணைய தளம்

புதுடெல்லி: சிஏஏ சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. சிஏஏ சட்டத்தின்படி குடியுரிமைக்கு … Read more

ஜார்க்கண்டில் உடைந்தது இண்டியா கூட்டணி – இந்திய கம்யூ. தனித்து போட்டி

இண்டியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளம் கட்சிகள் ஏற்கெனவே வெளியேறி உள்ளன. மேலும், மேற்குவங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன்காரணமாக அந்த மாநிலத்தில் இண்டியா கூட்டணி உடைந்துள்ளது. பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்த சூழலில் ஜார்க்கண்ட் மாநில இந்திய … Read more

சிஏஏ-வை இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும்: அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் கருத்து

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை அதனால் முஸ்லிம்கள் அச்சட்டத்தை எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி வலியுறுத்தியுள்ளார். சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று (திங்கள் கிழமை) உடனடியாக அமலுக்குவந்த நிலையில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நடைமுறைக்குக்கொண்டுவந்துள்ளது. நான் இச்சட்டத்தை வரவேற்கிறேன். இது எப்போதோ அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டியது. … Read more

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா – பின்னணியில் என்டிஏ கூட்டணி விரிசல்

சண்டீகர்: ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்துள்ளது. ஹரியாணா இல்லத்தில் ஆறு சுயேட்சை எம்எல்ஏக்கள் உட்பட பாஜக எம்எல்ஏக்களுடன் நடந்த கூட்டத்துக்குப் பின்னர், கட்டார் ராஜ் பவனுக்கு விரைந்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ஆளும் பாஜக – ஜனநாயக ஜனதா கட்சி (ஜெஜெபி) இடையே பிளவு ஏற்படலாம் என்ற ஊகத்துக்கு மத்தியில் இந்த ராஜினாமா சம்பவம் நடந்துள்ளது. … Read more