அம்பேத்கர் பிறந்தநாள் | டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி: டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலைக்கு அருகே நடைபெற்ற விழாவில் அவரது முழு உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் … Read more

2ஜி மேல்முறையீட்டு வழக்கு: ஆ.ராசா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

2ஜி அலைக்கற்றை மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் சிபிஐ, அமலாக்கத் துறை, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 2 ஜி வழக்கு! ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், ஒன்றிய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் ஒன்றிய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் காட்டியது. டெல்லி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு! இந்த வழக்கை … Read more

2 எம்.எல்.ஏ உட்பட மூத்த தலைவர்கள் ராஜினாமா!!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்கப்படாததால் பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறுவதால், அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குழப்பதில் உள்ளார். மே 10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து அங்கு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே பாஜக சார்பில் இரண்டு … Read more

தங்கத்தின் விலை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

சென்னையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 45,520ஆக இருந்ததே அதிகபட்ச உச்சமாகும். தற்போது அந்த விலையை மிஞ்சும் அளவிற்கு தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760க்கு விற்பனை. மேலும் , அதைப்போல கிராமுக்கு ரூ.44உயர்ந்து ரூ.5,720க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் … Read more

இந்தியாவில் அன்றாட கோவிட் தொற்று 11,000-ஐ கடந்தது: சிகிச்சையில் 49,622 பேர்

சென்னை: இந்தியாவில் அன்றாட கோவிட் தொற்று 11 ஆயிரத்தைக் கடந்தது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 11,109 பேர் புதிதாக கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 49,622 பேர் தற்போது நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 10,158 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயர்ந்துள்ளது. நோய் தொற்று பாதிப்பால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். 6,456 தொற்று பாதிப்பில் … Read more

"விட்ருங்க அண்ணா".. கதறிய 11 வயது சிறுவன்.. ஆடையை கழற்றி.. "ஜெய் ஸ்ரீராம்" கோஷம் போட வைத்த கொடூரம்!

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 11 வயதே ஆன ஒரு சிறுவனை, மதம் சார்ந்த கோஷத்தை போட சொல்லி சில குரூரர்கள் ஆடைகளை அவிழ்த்தும், சரமாரியாக தாக்கியும் அராஜகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். நாட்டில் சமீபகாலமாக மத ரீதியிலான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதை காண முடிகிறது. குறிப்பாக, இஸ்லாம் மதத்தை குறி வைத்து இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளும், பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன. “முஸ்லிம்களை இந்தியாவில் … Read more

பஞ்சாப் ராணுவ முகாமில் தொடரும் மர்மம்: மேலும் ஒரு வீரர் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு

பதிண்டா: பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தியர்கள் யார் என தெரியாத நிலையில், நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளார். பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் கடந்த வாரம், இன்சாஸ் ரக துப்பாக்கி மற்றும் 28 குண்டுகள் மாயமாகின. இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த சாகர் பேன்னி (25), யோகேஷ் … Read more

கொரோனா பாதிப்பு 2 வாரத்தில் உச்சம் தொட்டுரும்… டெல்லிக்கு வந்த எச்சரிக்கை!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக வேகமெடுத்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 13ஆம் தேதி காலை நிலவரப்படி 44,998 கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். தலைநகர் டெல்லியில் ஒருநாள் பாதிப்பு 1,000ஐ தாண்டியது. இது கடந்த 7 மாதங்களில் காணாத ஏற்றம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. வைரஸ் தொற்று பரவலின் பாசிடிவ் விகிதம் 23.8 சதவீதமாக காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் … Read more

பெண் தொழில்முனைவோருக்கு முத்திரை வரியில் 100% விலக்கு! தமிழ் புத்தாண்டு தள்ளுபடி

Exemption In Stamp Duty: தனியார் தொழில் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், தொழில்துறை நிலத்தை வாங்கும் அல்லது குத்தகைக்கு எடுக்கும் பெண் தொழில்முனைவோருக்கு முத்திரை வரியில் 100 சதவீதம் விலக்கு அளித்துள்ளது இந்த மாநிலம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி வரை பெறப்படும் என்று முன்னதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. கால அவகாசத்தை நீட்டிக்கமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், சில மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான … Read more