காஸ் விலை, டோல் வரி, தங்கம், புதிய வரிவிதிப்பு உட்பட 8 விதமான நடைமுறைகள் இன்று முதல் அமல்: 2023-2024ம் நிதியாண்டு தொடங்கியதால் ஏராளமான மாற்றங்கள்

புதுடெல்லி: 2023-2024ம் நிதியாண்டு இன்று தொடங்கியதால் காஸ் விலை, டோல் வரி, தங்கம், புதிய வரிவிதிப்பு உட்பட 8 விதமான நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. நாடாளுமன்ற பொது பட்ஜெட் (2023-2024) கடந்த பிப். 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் (ஏப். 1) புதிய நிதியாண்டுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அதாவது இந்த நிதியாண்டுக்கான புது கணக்கு இன்று தொடங்கப்படுவதால், சில விதிமுறைகளும் அமலுக்கு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் … Read more

ஏழை சிறுமியின் உயிரை காப்பாற்ற ரூ.7 லட்சம் ஜிஎஸ்டி ரத்து – அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சசி தரூர் புகழாரம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு இளம் தம்பதியரின் மகள் நிகாரிகா அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். ரூ.65 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சிறுமியின் பெற்றோர் பல்வேறு வகைகளில் போராடி ரூ.65 லட்சத்தை திரட்டி வெளிநாட்டில் இருந்து மருந்துகளை வரவழைத்தனர். அந்த மருந்துகளுக்கு ரூ.7 லட்சம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏழை தாய், தந்தையால் ஜிஎஸ்டி … Read more

ஏப்ரல் 1 இன்று மோடி அனைவரையும் முட்டாளாக்குகிறார் என்று காங்கிரஸ் அறிக்கைவிடும்: வந்தேபாரத் ரயிலை தொடக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

போபால்: போபால் – டெல்லி இடையேயான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்தியபிரதேசத்தின் போபால் – தலைநகர் டெல்லி இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது 11வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். இந்த ரயில் போபாலின் ராணி கமல்பதி ரயில் நிலையத்தில் புறப்பட்டு 708 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து தலைநகர் டெல்லியின் ஹஸ்ரத் நிசாமுதின் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண … Read more

கவுரவர்களோடு ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட்ட விவகாரம்: ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு

ஹரித்துவார்: 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பு என விமர்சித்த ராகுல் காந்திக்கு எதிராக ஹரித்துவார் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி ஹரியாணாவில் கடந்த ஜனவரி 9-ம் தேதி பேசும்போது, 21ம் நூற்றாண்டின் நவீன கவுரவர்கள் ஆர்எஸ்எஸ் என கூறியதாக அவர் மீது ஹரித்துவார் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கமல் பதூரியா என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பை அநாகரிகமாக … Read more

ஆந்திராவில் தெலுங்கு தேசம் – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது தெலுங்கு தேச கட்சி நிர்வாகியான ரகுநாத ரெட்டியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் விரட்டி அடித்தனர்.

இது தேவையா ? போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்த மணமகளுக்கு நேர்ந்த விபரீதம்..!!

இந்தியாவில் திருமணங்கள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்களுக்கு விரிவான ஸ்டண்ட் செய்யும் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், இந்த ஸ்டண்ட் எப்போதும் பாதுகாப்பாக இருக்காது என்பதை சமீபத்திய வீடியோ நிரூபிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மணமகள், போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது கையில் இருக்கும் துப்பாக்கி அவரது முகத்திற்கு நேராக வெடித்துவிட்டது. மொத்தம் 13 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒரே மேடையில் போஸ் கொடுக்கிறார்கள். தம்பதியர் கையில் இருந்த துப்பாக்கிகளில் ஒன்று எதிர்பாராத விதமாக … Read more

கர்நாடகாவில் ஜெய் பாரத் பேரணி: எம்.பி. பதவி இழப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம்

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில் ‘ஜெய் பாரத்’ பேரணியை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. வரும் 9ஆம் தேதி கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்தப் பேரணியை மேற்கொள்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாரில் ராகுல் காந்தி ‘ஜெய் பாரத்’ பேரணி மேற்கொள்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி ராகுல் காந்தி வயநாட்டில் பிரச்சாரம் செய்கிறார். அவர் … Read more

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பொன்னாடை போர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்” – பிரதமர் மோடி

போபால்: உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி போபாலில் இன்று கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”இந்த வந்தே பாரத் சேவையை தொடங்கிவைக்கும் நாள் ஏப்ரல் 1 என என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது, ஒரு விஷயத்தை நான் உறுதியாக நினைத்தேன். இதுகுறித்த செய்தி வெளியாகும்போது நிச்சயம் … Read more

‘வந்தே பாரத் ரயில் – வளரும் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டு’ பிரதமர் மோடி பேச்சு

மத்திய பிரதேசத்தின் போபால் – டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். போபால் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 11வது வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ரயில் ஓட்டுநர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், நாட்டின் திறமை, திறன் மற்றும் நம்பிக்கையை வந்தே பாரத் … Read more