புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆட்டம் டிரா

பாட்னா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் … Read more

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி

கொழும்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 55 ரன்னில் ஆல்-அவுட் ஆகி மோசமாக தோற்றது அந்த நாட்டு அரசியல் மட்டத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டு இந்த நடவடிக்கைக்கு தடை விதித்தது. இருப்பினும் … Read more

231 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்கு.. ஒல்லி போப் செய்த தரமான சம்பவம்..!

இந்தியா – இங்கிலாந்து அணிகள்  மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்திருக்கிறது. அந்த அணியின் துணைக் கேப்டன் ஒல்லி போப் தனி ஒரு பிளேயராக கடைசி வரை போராடி அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார். இங்கிலாந்து அணியில் எல்லா வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அவர் மட்டும் 196 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் … Read more

ஆஸ்திரேலியாவை ஓடவிட்ட வெஸ்ட் இண்டீஸ்… இந்த வெற்றியில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

AUS vs WI Gabba Test: ஆஸ்திரேலியாவுக்கு மேற்கு இந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கு இந்திய தீவுகள் அங்கு விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக பறிகொடுத்த மேற்கு இந்திய தீவுகள், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மீது பலத்த எதிர்பார்ப்பை வைத்தது எனலாம். பகலிரவு போட்டி பிரிஸ்பேன் காபாவில் பகலிரவு … Read more

இந்திய அணியின் சோலியை முடிச்ச இங்கிலாந்து…. முதல் டெஸ்டில் தோல்வி – ஒல்லி போப், ஹார்டிலி அபாரம்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சுப்மான் கில் டக் அவுட்டாக, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். வெற்றி பெற ஏதுவான ஸ்கோர் என்றாலும் பேட்ஸ்மேன்கள் மெத்தனப்போக்குடன் விளையாடியது இந்திய அணி தோல்வி அடைய … Read more

கண்கலங்கிய பிரையன் லாரா, கூப்பர்..! வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்குப் பிறகு சுவாரஸ்யம்

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான காபா டெஸ்ட் போட்டி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக விளையாடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகும் முதன்முறையாக வீழ்த்தியிருக்கிறது வெஸ்ட் இண்டீஸ். இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் இளம் வீரர் ஷமர் ஜோசப். முந்தைய நாள் ஸ்டார்க் வீசிய வேகபந்துவீச்சில் பேட்டிங் செய்யும்போது … Read more

ஜோசப்: மரண மாஸ் பந்துவீச்சு… திக்குமுக்காடிய ஆஸ்திரேலியா – யார் இந்த இளம் புயல்..!

ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காபாவில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியாவும், தொடரை சமன் செய்ய வேண்டுமானால் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கின. முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி எடுக்க, ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளோர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 193 ரன்களுக்கு ஆட்டமிழக்க, … Read more

விராட் கோலியை பற்றி புகழ்ந்து பேசிய ரோஹித்! என்ன சொன்னார் தெரியுமா?

India vs England: தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார்.  இந்நிலையளி, விராட் கோலியை பற்றி ரோஹித் சர்மா புகழ்ந்து பேசி உள்ளார்.  தினேஷ் கார்த்திக் உடனான சமீபத்திய நேர்காணலில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மீதான தனது அபிமானத்தைப் பற்றி பெயசுல்லர்.  இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி இல்லாதது கவனிக்கப்படாமல் போகவில்லை, அவர் கோலியை மிக அருகில் இருந்து பார்த்ததாகவும், … Read more

இங்கிலாந்து அணியால் ஒரு போட்டியை கூட ஜெயிக்க முடியாது – காரணத்தை சொல்லும் கங்குலி!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து (IND vs ENG Test Series) அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி (Sourav Ganguly) கூறுகையில்,”இந்தியா தொடரை நிச்சயம் வெல்லும். அது, 4-0 அல்லது 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறுமா என்பதே பார்க்க வேண்டிய விஷயம். ஒவ்வொரு டெஸ்ட்டும் தீர்க்கமானதாக இருக்கும். பாஸ்பால் இங்கு பொருந்தாது இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து … Read more

ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய நிலை என்ன? வெளியான வீடியோ!

Hardik Pandya IPL 2024: மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.  தற்போது காயத்தில் அவதிப்பட்டு வரும் இவர் ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு மீண்டும் பிட்டாக இருக்க கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  அந்தவகையில் தற்போது ஹர்திக் பாண்டியா பந்துவீசத் தொடங்கி உள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் பாண்டியா பவுலிங் பயிற்சி மற்றும் வலைகளில் பந்து வீசும் வீடியோவை பகிர்ந்துள்ளது.  2023 ஒருநாள் உலகக் கோப்பையின் … Read more