சென்னையில் உலகக் கோப்பை டிக்கெட் கிடைப்பதில் ஏன் இவ்வளவு கஷ்டம் – இது தான் காரணம்!

ICC World Cup 2023 Match Tickets: ஒருநாள் போட்டி வடிவத்திற்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அக். 5ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் வரும் நவ. 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடர் இந்தியா முழுவதும் உள்ள 10 மைதானங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டு விற்பனையும் கடந்த மாத இறுதியில் நடந்தது. உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மீண்டும் நடக்கிறது. நேற்று மழை குறுக்கிட்டதால் ரிசர்வ் நாளான இன்று போட்டி நடத்தப்படுகிறது. நேற்று இந்திய அணி விளையாடிய இடத்தில் இருந்து போட்டி ரிசர்வ் நாளில் நடக்க இருக்கிறது. இந்த இரு அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாள் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை … Read more

IND vs PAK: விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த கேஎல் ராகுல்!

IND vs PAK Asia Cup 2023: நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரும்பிய இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் கே.எல்.ராகுல் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் போட்டியில் 2000 ரன்களை நிறைவு செய்தார். ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது, ​​ராகுல் 53 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை எட்டினார், இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். கோஹ்லி மற்றும் ராகுல் இருவரும் ஒரே எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினர். இருப்பினும், … Read more

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடம்

ஈரோடு ஈரோட்டில் நடந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடத்தை பிடித்தது. கூடைப்பந்து போட்டி ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஈரோடு திண்டல்மேட்டில் உள்ள இஷான் ஹைலேண்ட் அரினா மைதானத்தில் நடந்தது. தொடக்க நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும், சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். 14 … Read more

'டீன்ஏஜ்' வயதில் கிராண்ட்லாம் பட்டம்: கோகோ காப் சாதனை.!

நியூயார்க், அமெரிக்க ஓபன் ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்), 6-ம் நிலை இளம் புயல் கோகோ காப்புடன் (அமெரிக்கா) மோதினார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா எதிராளியின் 3 சர்வீஸ்களை முறியடித்ததுடன் அந்த செட்டையும் … Read more

IND vs PAK: இன்றும் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? முழு விவரம்!

Asia Cup 2023, India vs Pakistan: செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை, கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடந்த ஆசியக் கோப்பை 2023ல் பாகிஸ்தான் vs இந்தியா மோதலில் மழை மீண்டும் ஒருமுறை போட்டியை குறுக்கிட்டது.  இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது.  24.1 ஓவர்களில் 147/2 ரன்களை எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.  கொழும்பில் கனமழை பெய்து வருவதால், இன்று செப்டம்பர் 11 திங்கட்கிழமை ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று … Read more

கிங் கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா தோல்வி

சியாங் மேய், 49-வது கிங் கோப்பை கால்பந்து போட்டி தாய்லாந்தின் சியாங் மேய் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் (வெண்கலப்பதக்கத்துக்கு) இந்தியாவும், லெபனானும் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 77-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை இந்திய கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து தடுத்தார். அவரது கையில் பட்டு வெளியே வந்த பந்தை லெபனான் வீரர் காசீம் அல் ஸின் அந்தரத்தில் பல்டி அடித்தபடி உதைத்து வலைக்குள் … Read more

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்: ரசிகர்கள் இன்றி காலியாக கிடந்த ஸ்டேடியம்

கொழும்பு, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சூப்பர்4 சுற்று ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் பகல்-இரவு மோதலாக நேற்று நடந்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டு மறுநாளுக்கு நகர்ந்தது. இந்த ஆட்டத்தை நேரில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. ஸ்டேடியத்தின் பெரும்பகுதி ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பரம எதிரிகள் இந்தியா- பாகிஸ்தான் மல்லுகட்டியதால் ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த இலங்கை கிரிக்கெட் … Read more

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம்

புளோம்பாண்டீன், ஒரு நாள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டேவிட் வார்னர் (106 ரன்), மார்னஸ் லபுஸ்சேன் (124 ரன்) சதம் விளாசினர். அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த … Read more

INDVsPAK: இந்திய அணிக்கே அதிக சான்ஸ் ! பச்சி சொல்லல டேட்டா சொல்லுது

இலங்கையில் இருக்கும் பிரபலமான மைதானமான பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 35000 இருக்கைகள் இருக்கின்றன. கொழும்பில் உள்ள இந்த மைதானம் 200-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளை நடத்தியுள்ளது. பல பெருமைகளைக் கொண்டிருக்கும் இந்த மைதானத்தில் இந்தியா பல போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதிகபட்ச ரன்கள் அடித்த அணியாகவும் இந்தியா இருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு … Read more