எனக்கு போட்டி யார் தெரியுமா? 3 பேரை சொல்லி நெகிழ்ந்த ஜஸ்பிரித் பும்ரா

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி வாகை சூடியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், இப்போது இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமன் செய்திருக்கிறது இந்திய அணி. இப்போட்டியில் சிறப்பாக … Read more

இலங்கை ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

காபூல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான அந்த … Read more

இந்தியா மாஸ் வெற்றி… பஞ்சரானது 'பாஸ்பால்' – இங்கிலாந்தின் சோலியை முடித்தார் பும்ரா!

IND vs ENG 2nd Test Highlights: இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐபிஎல் தொடர் கோடை காலத்தில் தொடங்குவதற்கு முன், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இங்கு விளையாட உள்ளது.  ஹைதராபாத் நகரில் கடந்த ஜன.25ஆம் தேதி தொடங்கிய நிலையில், அந்த போட்டியும் நான்கு நாள்கள் மட்டுமே நீடித்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி, விசாகப்பட்டினத்தில் கடந்த … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்; ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் அடித்து அசத்தல்

மவுண்ட் மவுன்கானுய், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம், டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் லதாம் 20 ரன், கான்வே 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து … Read more

3ஆவது டெஸ்டில் சுப்மான் கில்லும் கிடையாதா…? இன்றும் விளையாடவில்லை – காரணம் என்ன?

IND vs ENG Highlights In Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் (IND vs ENG 2nd Test) போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த போட்டி இன்றைய தினமே நிறைவடைந்துவிடும் என்றாலும், போட்டி தற்போதும் யார் பக்கம் செல்லும் என்பதை கணிக்க இயலவில்லை எனலாம். மேலும், அடுத்த போட்டிக்கு ஒரு நீண்ட இடைவேளை இருப்பதால் ரசிகர்கள் சற்று உற்சாகம் குறைவாக இருக்கின்றனர். அந்த வகையில், … Read more

உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற நியூஜெர்சி

நியூஜெர்சி, பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி அடுத்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் நடத்துகின்றன. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற நியூஜெர்சி- டெக்சாஸ் இடையே கடும் … Read more

மகளிர் புரோ ஆக்கி லீக்; இந்திய அணிக்கு 2-வது தோல்வி

புவனேஸ்வர், மகளிருக்கான 5-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் சில லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவுக்கு எதிராக 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று பலம் வாய்ந்த நெதர்லாந்துடன் … Read more

பிசிசிஐயால் முடிவுக்கு வரும் இந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை! இனி விளையாடுவது சந்தேகம்!

Ishan Kishan: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அடுத்த ஒரு வருட காலத்திற்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது.  உலக கோப்பைக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் முதலில் இஷான் கிஷான் இடம் பிடித்தார்.  பின்னர் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், சிறிது நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டார். தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் அவர் விளையாடவில்லை.  இந்நிலையில், இந்த ஓய்வு அவரது … Read more

சொந்த மண் ராசி இந்தியாவுக்கு கை கொடுக்குமா? ரசிகர்கள் ஆவல்

விசாகப்பட்டினம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது … Read more

IND vs ENG: 3வது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி இல்லை?

India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடமாட்டார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.  இதன் காரணமாக மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு மாற்று வீரர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் உயர் அதிகாரிகள் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.  கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாகவும், இதனால் தான் … Read more