“நான் அளித்த ஓர் ‘உறுதி’யால்தான் எனக்கு அம்மா ‘சீட்’ கொடுத்தார்!”  – விஜயகாந்த் மகன் உருக்கம்

மதுரை: தன்னுடைய தாய் பிரேமலதாவிடம் அளித்த உறுதி ஒன்றின் காரணமாகவே விருதுநகர் தொகுதியில் தனக்கு ‘சீட்’ கிட்டியதாக டி.கல்லுப்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உருக்கமாக தெரிவித்தார். விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் திருமங்கலம் பகுதியில் உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவு கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார். முன்னதாக, டி குன்னத்தூர் உள்ள ஜெயலலிதா கோயிலில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் … Read more

“நல்லவர்களுக்கு வாக்கு சேகரிப்பது பெருமை” – கமல்ஹாசன் @ மதுரை

மதுரை: “மக்களவைத் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்கு சேகரிப்பது பெருமையாக இருக்கிறது” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெற்றுள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மதுரை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வேட்பாளர் … Read more

வைகோவுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்கிறாரா துரை வைகோ?

திருச்சி: திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனிடையே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மகன் துரை வைகோவுக்கு ஆதரவாக ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், வைகோ பிரச்சாரம் செய்யும் இடங்களில் துரை வைகோ பங்கேற்பது இல்லை. மேலும், கடந்த 6-ம் தேதி திருச்சியில் மதிமுக சார்பில் … Read more

கரூர் தொகுதி: பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பு

Lok Sabha Elections: கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று தாமரை சின்னத்திற்கு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர், தொழில்பேட்டை , வெள்ளாளப்பட்டி, புலியூர் பேருந்து வடக்கு பாளையம், காளிபாளையம், அப்பியம்பாளையம்  உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

“சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்” – செல்வப்பெருந்தகை

சென்னை: “சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், “மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற பாஜகவின் அரசியலுக்கு எதிராக முதலில் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கி.மீ., தூரத்தையும், இரண்டாவது முறை 6,500 கி.மீ. தூரத்தை மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை … Read more

திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை..!!

திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவரையொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

“தமிழகம் எதிலும் முதலிடம்” – மத்திய அரசின் ஆவணங்களை சுட்டிக்காட்டி திமுக பட்டியல்

சென்னை: தமிழகம் எதிலும் முதலிடம் என்பதற்கு மத்திய அரசின் ஆவணங்களே சாட்சி. 50 சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கி இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக உள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகப்பேற்றுக்குபின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் … Read more

பிரதமர் ரோட் ஷோ மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை – அதிமுக ஜெயவர்தன்

தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் 7 ஆயிரம் சாக்லெட் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து பூசணிக்காய் சுற்றி, ஆள் உயர ரோஜா பூ மாலை அணிவித்து அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.   

“வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்காவிட்டால்..” | எச்சரிக்கும் ராமதாஸ்

சென்னை: “வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித் தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், … Read more

திருச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை

புனித ரமலான் பண்டிகை திருச்சி இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாட்டம். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.