செய்தித் தெறிப்புகள்: காங்கிரஸுக்கு ஐ.டி நோட்டீஸ் முதல் தங்கம் விலை புதிய உச்சம் வரை

ரூ.1,823 கோடி நிலுவை – காங்கிரஸுக்கு ஐ.டி நோட்டீஸ்: 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு காலக்கட்டத்துக்கான வரி நிலுவை மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடியை செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ஆண்டுகளுக்கான வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது” … Read more

சசிகலா EPS-ஐ விட இளையவர்… குண்டை தூக்கிப்போட்ட கே.சி. பழனிச்சாமி – என்ன மேட்டர்?

Edappadi Palanisamy News: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விட வயதில் மூத்தவர் என்று அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை இதில் காணலாம். 

ஒரு காலத்தில் மதுரை ‘கெத்து’… இப்போது ‘ஒத்து’ – பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் பேச்சு

மதுரை: “பாஜக வென்றால் ரவுடித்தனம் ஒழியும். பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். மின் தடை இருக்காது. நல்ல சாலை, குடிநீர் கிடைக்கும்” என மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் பேசினார். மதுரை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் கட்சி பாஜக. பாஜகவுக்கு ஓட்டுப்போட்டால் தான் மதுரை வளரும். மதுரையின் பெருமையை மீட்டெடுக்க வந்த கட்சி பாஜக. ஒரு காலத்தில் மதுரை என்றால் … Read more

தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் கேட்ட சின்னம் கிட்டியது எப்படி? – ஒரு பின்புலப் பார்வை

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்காமல், அதற்கு பதிலாக ‘மைக்’ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதேபோல், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. விசிக கடந்த முறை போட்டியிட்ட பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதன் பின்னணி என்ன? நாம் … Read more

பிரதமர் ‘ரோடு ஷோ’வில் மாணவர்கள்: ஏப்.3 வரை கடும் நடவடிக்கையை தவிர்க்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி வரை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டனர். … Read more

சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட எங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களை நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் … Read more

பாஜகவை அதிமுக விமர்சிக்காது… காரணத்தை ஓபனாக சொன்ன எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், கூட்டணி தர்மத்தின்படி நாங்கள் பாஜகவை விமர்சிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதே கூட்டணி பலத்தோடு களத்தில் கனிமொழி… – ‘ஸ்டார் தொகுதி’ தூத்துக்குடி களம் எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுதான் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் சாத்தூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் இருந்து, தூத்துக்குடி மாவட்ட பகுதிகள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி தொகுதி உருவாக்கப்பட்டது. இதுவரை சந்தித்த 3 தேர்தல்களில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. 2009 தேர்தலில் திமுக … Read more

Sekhmet Club: மதுபான கூட மேற்கூரை இடிந்த விபத்தில் சேக்மெட் கிளப் மேலாளர் கைது! போலீஸ் விசாரணை!

Hotel Ceiling Collapse Accident Latest Update : பிரபல ஓட்டலின் மதுபான கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை…

“இந்த தேர்தல் யாருக்கானது?” – நிர்மலா சீதாராமனை மேற்கோள் காட்டிய செ.கு.தமிழரசன்

வாலாஜா: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாஜகவும், திமுகவும் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வர வில்லை என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ளும். இந்த தேர்தலில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்தவித வளர்ச்சியும் கொண்டு … Read more