புதுச்சேரியில் ரூ.4.9 கோடி பறிமுதல் – 2 வீடுகளில் பறக்கும் படை அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு வீடுகளில் இருந்து ரூ.4.9 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வருமான வரித் துறையினர் விசாரணை நடந்து வருகிறது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க புதுவையில் 72 பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர். மாநில எல்லைகளிலும், வாகனங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். புதுச்சேரியில் பாஜக கட்சியினர் வாக்குக்கு ரூ.500-ம், காங்கிரஸ் கட்சியினர் வாக்குக்கு ரூ.200-ம் தருவதாக அதிமுக … Read more

கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்

வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

“95% தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன்” – இபிஎஸ் மீது தயாநிதி மாறன் வழக்கு

சென்னை: “95 சதவீதத்துக்கு மேல் எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிதியை பயன்படுத்தியுள்ளேன். என் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டது. கரோனா சமயத்தில் நிதி தடுத்து வைக்கப்பட்டது. எனினும், ரூ.17 கோடியில் மீதமிருப்பது ரூ.17 லட்சம் தான்.” என்று கூறி மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்பியும் மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான தயாநிதி மாறன் … Read more

வியர்வை சிந்தி விதைத்தவை அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி | பணப் பட்டுவாடா புகார்: தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் தர்ணா

புதுச்சேரி: பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பணம் தருவதால் தேர்தலை ரத்து செய்து அவர்களை கைது செய்யக்கோரி புதுச்சேரியில் சுயேச்சை வேட்பாளர் சாலையில் தர்ணாவில் ஈடுபட்டார். புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் தருவதாக குற்றஞ்சாட்டி நேற்று (புதன்கிழமை) அதிமுகவினர் ஆட்சியர் அலுவலகம் சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒதியம்பட்டு நான்கு முனை சந்திப்பில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ இன்று (வியாழக்கிழமை) பணப் பட்டுவாடாவை எதிர்த்து கறுப்புக் கொடியுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் சாலையின் நடுவே அமர்ந்து … Read more

அண்ணாமலைக்கு தோல்வியா… உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக 'வெறியர்' – திடீர் பரபரப்பு

Coimbatore Latest Updates: கோவையில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என கூறி தனது கைவிரலை துண்டித்த பாஜக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 8,655 வழக்கு: உயர் நீதிமன்ற கிளையில் டிஜிபி தகவல்

மதுரை: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 2019 மக்களவைத் தேர்தலில் 4,349 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 8,655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில், தன் மீதான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின்பு நீதிமன்றத்தில் … Read more

வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க தீவிர நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 44,800 வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹு தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்களின் சோதனையில் ஏப்.17 காலை வரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.79.90 கோடியும், வருமானவரித் துறையால் ரூ.90.40 கோடியும் என மொத்தம் … Read more

பணப்பட்டுவாடா செய்யும் பாஜக? பெரிய தொகையை கைப்பற்றிய அதிகாரிகள் – கோவையில் பரபரப்பு

Coimbatore Latest Updates: கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ. 81 ஆயிரத்தை பாஜக நிர்வாகியின் வீட்டில் இருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். 

வாக்களிக்க சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்: இன்று பயணம் செய்ய 30,000 பேர் முன்பதிவு

சென்னை: தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. இன்று பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் உட்பட 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் நேற்று (ஏப்.17) முதல் இயங்கத் தொடங்கின. குறிப்பாக, சென்னையில் இருந்து 684 பேருந்துகள் உட்பட தமிழகம் முழுவதும் 2,621 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு … Read more