ஆ.ராசாவின் வாகன சோதனையில் மெத்தனம் – பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனையிடுவதில் மெத்தனமாக செயல்பட்ட பறக்கும் படை பெண் அதிகாரி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குன்னூர் – கேரளா இடையிலான இரு மாநில எல்லை வாகன சோதனைச் சாவடியில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஆ.ராசாவின் காரை மறித்து, அதிகாரி கீதா தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை முறையாக செய்யவில்லை. மேலோட்டமாக செய்யப்பட்டது என புகார்கள் எழுந்தன. அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக … Read more

சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami criticized Tamil Nadu Chief Minister M.K.Stalin in Cuddalore: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சதுரங்க வேட்டை பட பாணியில் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனைத்து உயிர்களிடமும் அன்பை வலியுறுத்தும் ஈஸ்டர் பண்டிகை: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படு கிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஈஸ்டர் பண்டிகையை அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டுவதை வலியுறுத்தும் திருநாள்என தெரிவித்துள்ளனர். புனித வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தியஇயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இன்று (மார்ச் 31) ஈஸ்டர் பண்டிகைகொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு: பாமக நிறுவனர் … Read more

பிரதமர் மோடிக்கு மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை: முதல்வருக்கு அண்ணாமலை பதில்

சென்னை: மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பிரதமர் மோடிக்கு இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தாய்மொழியாக தமிழ் எனக்குகிடைக்காதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியதைமுதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கி தமிழகத்தைச் சுரண்டிய திமுகவின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நினைப்பாரேயானால், அவருக்கு ஏமாற் … Read more

பாஜகவில் இருக்கும் ரவுடிகளை பட்டியல் போட்டு விளாசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

M. K. Stalin, Salem, Lok Sabha election campaign: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் பேசும்போது, சரித்திர பதிவேடு ரவுடிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து கொண்டிருக்கும் பாஜக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட 30% அதிகம் விற்பனையானால் விசாரணை

புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வழக்கத்தைவிட 30 சதவீதத்துக்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகும் கடைகளில், டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, வாகனங்களில் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள், ரொக்கம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கூட்டங்களையும், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனையைக் கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். … Read more

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 950 பேர் போட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட தேர்தல் தமிழகத்தில் ஒரேகட்டமாக நடைபெறுகிறது. வரும் ஏப்.19-ம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த மார்ச் 20-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. மார்ச் 27-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் சார்பில் 1,749 … Read more

“மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்” – உதயநிதி

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியமைத்தால் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக லேப்டாப் வழங்கப்படும் என திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து நேற்று விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 2019 தேர்தலின் போது, இங்கு உங்களை சந்தித்து வாக்கு கோரினேன். அப்போது போட்டியிட்டவர்களை வெற்றிபெறச் செய்தீர்கள். அடுத்து 2021 சட்டப்பேரவைத் … Read more

“திமுகவும், பாஜகவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆபத்தானவர்கள்” – அதிமுக நிர்வாகி விந்தியா

மதுரை: திமுகவும், பாஜகவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் ஆபத்தானவர்கள்: அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா, தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். மதுரை – அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் சேகரித்து மதுரை முனிச்சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் வாக்கு சேகரிப்பு பணியில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா நேற்று ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ‘மோடியா, லேடியா’ எனக் கேட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் சொன்னதை மறந்துவிட்டு தற்போது … Read more

தஞ்சை காங்கிரஸ் தலைவரை சந்தித்தது மரியாதை நிமித்தம்: அண்ணாமலை தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையாரை, பாஜக மாநிலத் தலைவர் க.அண்ணாமலை நேற்று (மார்ச் 30) மாலை நேரில் சந்தித்தால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் அருகே பூண்டியை பூர்வீகமாக கொண்டவர் மறைந்த துளசி அய்யா வாண்டையார். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் சம்பந்தி. இந்நிலையில் இன்று … Read more