தமிழகத்தில் ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா.. 25 பேர் பலி..! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா.. 25 பேர் பல… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 3 ஆயிரத்து 592 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 663 பேருக்கும், கோவையில் மேலும் 654 பேருக்கும், செங்கல்பட்டில் 290 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 14 ஆயிரத்து 182 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்த நிலையில், 66 ஆயிரத்து 992 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

தமிழகத்தில் இன்று 3,592 பேருக்குக் கரோனா: சென்னையில் 663 பேருக்கு பாதிப்பு; 14,182 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,592 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,28,068. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,45,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,23,214. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 663 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை

Tamilnadu News Update : தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில். வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் கலைகட்ட தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம், செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து வேட்பாளர்கள் பலரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிப்பில் … Read more

உதயநிதி ஸ்டாலின் முன் கைகட்டி உட்கார்ந்த அமைச்சர்கள்.. வைரலாகும் புகைப்படம்.!

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் … Read more

ஹஜ் பயணிகளுக்கு உதவும் தன்னார்வலாராகச் செல்ல பிப். 23-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: ஹஜ் பயணிகளுக்கு உதவ தன்னார்வத் தொண்டர்களாக உடன் செல்ல விருப்புவர்கள் பிப். 23-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மற்றும் இதர மாநில ஹஜ் குழுக்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா செல்லும் புனிதப் பயணிகளுக்கு உதவி செய்வதற்காக ஹஜ் தன்னார்வத் … Read more

ஹிஜாப் விவகாரம் : மகள்கள் குறித்து பேசிய நெட்டிசனுக்கு குஷ்பு பதிலடி

BJP Khushboo Say About Hijab Issue : கர்நாடக மாநிலத்தில், ஹிஜாப் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பாஜகவின் நடிகை குஷ்பு காட்டமாக பதிலை அளித்துள்ளார். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில், உள்ள பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்துவந்த 6 மாணவிகள் வகுப்பறை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுட்ட நிலையில், ஹிஜாப் அணிவது அரசியலமைப்பு … Read more

கொங்கு மண்டலம் அதிமுக -வின் கோட்டை! ஓ. பன்னீர்செல்வம் பேச்சு.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவானந்தா காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அதாவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் தற்போது வரை கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது என்றார். 2011 ஆம் … Read more

சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு..! <!– சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்கு… –>

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 119வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் பேண்டு வாத்தியங்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது … Read more

'என் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை' – தஞ்சையில் பிரச்சாம் செய்த உதயநிதியிடம் முறையிட்ட பெண்

தஞ்சாவூர்: “பாசிச பாஜக, அடிமை அதிமுகவுக்கு எதிராக சிம்மசொப்பனமாக திமுக திகழ்கிறது” என்று தஞ்சாவூரில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சாவூர் கல்லுக்குளத்தில் இன்று காலை தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியது: ”திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், முக்கியமான வாக்குறுதிகளான கரோனா கால நிவாரணம் ரூ. 4 ஆயிரம், அரசு நகரப் … Read more

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தார். பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணமலை கூறியதாவது: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு யாருக்கெல்லாம் வாழ்வு கிடைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், தமிழககத்தில் இருக்கிற ரவுடிகளுக்கு … Read more