அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக பதிவு

டிரென்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் (வெள்ளிக்கிழமை, ஏப்.5) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை உணர்ந்துள்ளனர். இதை அமெரிக்க நாட்டின் புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10.23 மணி அளவில் லெபனான் அருகே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்துக்கு 45 மைல் மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இதுவரை பதிவு ஆகவில்லை என நியூயார்க் நகரின் அவசரகால மையம் தெரிவித்துள்ளது. களத்தில் … Read more

இங்கிலாந்தில் வினாடி-வினா போட்டி: இறுதிப்போட்டிக்கு தேர்வான கொல்கத்தா பட்டதாரி

லண்டன், இங்கிலாந்தின் பிரபல பிபிசி தொலைக்காட்சி ‘யுனிவர்சிட்டி சேலஞ்ச்’ என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது. அந்த நாட்டின் மிகவும் கடினமான வினாடி வினா போட்டியாக கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இந்த நிலையில் இந்த வினாடி வினா போட்டி அண்மையில் தொடங்கிய நிலையில் அதன் அரைஇறுதி சுற்று கடந்த வாரம் நடந்தது. இந்த போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு … Read more

கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது – இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

கொழும்பு, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பேசுபொருளாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசும், தி.மு.க.வும்தான் காரணம் என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன என பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. இதனிடையே கச்சத்தீவை மீட்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் … Read more

வெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் மரணம்

கராகஸ், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்தவர் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (வயது 114). இவர் கடந்த 1909 மே மாதம் 27-ந்தேதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் பிறந்தார். மேலும் கடந்த 2022-ம் ஆண்டில் உலகில் உயிருடன் வாழும் மிக அதிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு இவர் சொந்தக்காரராக மாறினார். இந்தநிலையில் தற்போது உடல்நலக்குறைவால் பெரெஸ் மோரா மரணம் அடைந்தார். இவருக்கு 11 குழந்தைகள், 41 பேரக்குழந்தைகள் மற்றும் … Read more

“கச்சத்தீவு விவகாரத்தில் வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” – இலங்கை அமைச்சர்

கொழும்பு: “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தமிழகத்தில் இதுதொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கச்சத்தீவை யார் தாரைவார்த்தது என்ற விவாதங்களுக்கு மத்தியில் அதை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே, “கச்சத்தீவை … Read more

சொத்துக்குவிப்பு வழக்கு: பெருவின் முதல் பெண் அதிபரிடம் விசாரணை

லிமா, தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பெண் அதிபராக டினா பொலுவார்டே பதவியேற்றார். இந்தநிலையில் அவர் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து ஆடம்பர கைகடிகாரங்கள், நகைகள் ஆகியவற்றை வாங்கி குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அதிபர் மாளிகை மற்றும் டினா பொலுவார்டே வீடுகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத பலகோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள், சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் … Read more

தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம்

பெய்ஜிங், தைவான் நாட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்த நிலையில், 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், தைவான், ஜப்பானை தொடர்ந்து சீனாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்கவியல் மையம் … Read more

காதலுடன் ஆசிரியர் செய்த காரியத்தை பாருங்க… குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை – வாழ்நாள் தடை

World Bizarre News: ஆரம்ப பள்ளியில் பணியாற்றி வந்த பெண் ஆசிரியை ஒருவர், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இனி அவர் ஆசிரியராக பணியாற்றவே முடியாது என்ற வகையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஜப்பானில் 2-வது முறையாக நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு

டோக்கியோ, தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்தது. … Read more

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கின. நேற்று இரவு 11.45 மணியளவில் இரண்டு தளங்களிலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்கல்களை சந்தித்தனர். செயலியில், உள்நுழைய முயற்சிக்கும்போது, தற்போது சேவை கிடைக்கவில்லை என்று காட்டியது. இந்த நிலையில் வாட்ஸ் அப் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 12,000 பேர் புகாரளித்துள்ளனர். இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட பயனர்களும், இங்கிலாந்தில் … Read more