இத்தாலியில் தொடர்ந்து சரியும் பிறப்பு விகிதம்

ரோம், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 379,000 குழந்தைகள் பிறந்துள்ளன. முந்தைய ஆண்டை விட சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த … Read more

Abby Hensel: ஒரே ஆளை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்! வைரலாகும் வீடியோ..

Conjoined Twins Abby Hensel Marriage : ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள், ஒரே ஆளை மணந்து கொண்ட சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தீங்கு தரும் பயங்கரவாதம்… இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்: ரஷிய தூதர்

புதுடெல்லி, ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரிலான இசை அரங்கிற்குள் புகுந்த பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 144 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 4 பேர் உள்பட சந்தேகத்திற்குரிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், தீங்கு தரும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா … Read more

நேபாளத்தில் டாக்சி ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி

காத்மாண்டு, நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு … Read more

கேளிக்கை விடுதியில் ஆயுதங்களுடன் புகுந்த நபர்: பணய கைதிகளாக பலர் சிறைபிடிப்பு

ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரம் ஈடி. இந்நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் இருந்தனர். அப்போது, அந்த கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக சிறைபிடித்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கேளிக்கை விடுதிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் … Read more

விபசாரத்தில் ஈடுபட்டால் பொது இடத்தில் கல் எறிந்து கொல்லப்படுவார்கள்: தலிபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றிய போது, தங்களின் முந்தைய ஆட்சி போல கொடூரமாக இருக்காது என்று தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும், பெண்கள் உயர் கல்வி கற்க தடை உள்பட பல்வேறு … Read more

பலுசிஸ்தானில் கனமழையால் மேற்கூரை இடிந்து விபத்து – சுரங்க தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில், பணியாளர்கள் சிலர் சிறிய அறைகளை அமைத்து தங்கியிருந்தனர். வெளியூர்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக அந்த அறைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின்போது, தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு … Read more

நெதர்லாந்தில் நிலவிய பல மணி நேர பதற்றம்: பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு

ஆம்ஸ்டெர்டாம்: நெதர்லாந்தின் ஈத் நகரில் பணயக் கைதிகள் அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலை 4 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்பட்டது. இதையடுத்து, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்பட பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். நகரின் 150 கட்டிடங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து … Read more

“காலநிலை மாற்றம் பற்றி உங்களுக்குப் பாடம் எடுக்கவா?” – குதர்க்க கேள்விகளை தெறிக்கவிட்ட கயானா அதிபர்

புதிய எண்ணெய், எரிவாயுத் திட்டங்களால் கயானா நாடு கரியமில வாயு உமிழ்வை அதிகரிக்கும் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து குதர்க்கமாகக் கேள்வி கேட்ட செய்தி ஊடக நெறியாளரை சரமாரியாக கேள்விகளால் துளைத்து கவனம் ஈர்த்துள்ளார் அந்நாட்டு அதிபர் இர்ஃபான் அலி. இத்தகைய குற்றச்சாட்டுகள் மூன்றாம் உலக நாடுகள் மீதான மேற்கத்திய நாடுகளின் நயவஞ்சனை என்றும் அவர் சாடியுள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில் உள்ளது கயானா நாடு. கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் … Read more