எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு

பீஜிங், லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி ஊடுருவியதன் தொடர்ச்சியாக, இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இரு தரப்பு நாடுகளும் படைகளை குவித்தன. எல்லை பகுதியில் பதற்றமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது … Read more

கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கிக் கணக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா

வாஷிங்டன், டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, கெஜ்ரிவால் கைது விவகாரத்தை கவனித்து வருவதாகவும், இதில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் உள்விவகாரங்களில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது 169 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. … Read more

பெங்களூர் விமானத்தை நெருங்கி வந்த எமிரேட்ஸ் விமானம்… நடுவானில் மிக பெரிய விபத்து தவிர்ப்பு!

Airplanes Accident Avoided : பெங்களூர் விமானத்தை நெருங்கி வந்து மோதவிருந்த எமிரேட்ஸ் விமானத்தால் பரபரப்பு! சில நிமிடங்களில் விபத்து தவிர்க்கப்பட்டு, மிகப் பெரிய சேதம் தடுக்கப்பட்டது…

உற்று கவனித்துக் கொண்டிருக்கிறோம்! கேஜ்ரிவால் கைது தொடர்பாக மீண்டும் கருத்து சொன்ன அமெரிக்கா!

Arvind Kejriwal Arrest Reactions: மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக முற்றும் இந்தியா – அமெரிக்கா அறிக்கைப் போர்… 

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: இந்திய மாலுமிகள் 22 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

நியூயார்க்: சிங்கப்பூரைச் சேர்ந்த கிரேஸ் ஓசன் என்ற நிறுவனத்தின் சரக்கு கப்பல் டாலி. இந்த கப்பலை டென்மார்க்கை சேர்ந்த மார்ஸ்க் என்ற கப்பல் நிறுவனம் வாடகைக்கு எடுத்து இயக்கி வந்தது. இந்த கப்பலை இந்திய மாலுமிகள் குழு இயக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த கப்பல் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் படாப்ஸ்கோ ஆற்றை கடந்து சென்றது. அப்போது கப்பலை இயக்கும் புரொபல்லர் சிஸ்டத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து நகர்ந்து சென்றதால், அது செல்லும் … Read more

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.. பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்

பாங்காக்: தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால் அவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை இந்த மசோதா சட்டப்பூர்வமாக்குகிறது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருமண பந்தம் தொடர்பாக ஷரத்துகளில் “ஆண்கள் மற்றும் பெண்கள்” மற்றும் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளை “தனிநபர்கள்” மற்றும் “வாழ்க்கை துணைவர்கள்” என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு … Read more

அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து ஈரான் கியாஸ் குழாய் திட்டத்துக்கு விலக்கு கோரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், அண்டை நாடான ஈரானில் இருந்து மலிவான விலையில் கியாஸ் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கடந்த 2009-ல் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் முதலில் இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் கியாஸ் குழாய் திட்டம் என கருதப்பட்டது. ஆனால் இந்தியா அதனை கைவிட்டதால் ஈரான்-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு திட்டமாக மாறியது. இதற்காக 1,150 கிலோ மீட்டர் நீளமுள்ள கியாஸ் குழாய் இரு நாடுகளிடையே பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா … Read more

சிரியாவில் வான்வழி தாக்குதல்; 15 பேர் பலி

டமாஸ்கஸ், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஈராக், சிரியாவில் ஈரானிய ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. எனவே அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. எனவே அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிர் எஸ் சோர் நகரில் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிரியாவில் … Read more

ஆயுதக் குழுவினர் இடைவிடாத தாக்குதல்.. ஹைதியில் பசி-பட்டினியால் வாடும் மக்கள்

கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை கடந்த பிப்ரவரி 7-ம் தேதிக்குள் நடத்தியிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது. பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் … Read more