ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின்

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரார்த்தனை செய்தார். உக்ரைன் உளவுத்துறை தலைவர்  Kyrylo Budanov, அதிபர் புதின் நோய்வாய்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் உயிரிழக்கக்கூடும் என தெரிவித்த நிலையில், புதின் பிரார்த்தனை செய்த காட்சிகளை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகையை, கதீட்ரல் தேவாலயத்தில், பல்லாயிரக்கணக்கானோருடன் கொண்டாடிய புதின், தற்போது தனி ஒருவராக கிரெம்ளினில் நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றுள்ளார். Source link

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக ட்ரம்ப் கட்சி உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி தேர்வு

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அமெரிக்காவை பொறுத்தவரையில் புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடந்த 8-ந் தேதி அமெரிக்க … Read more

‘புரோகிராம் கோடிங்’ தெரியாதவர்களும் ரோபோவின் செயல்பாட்டை வடிவமைக்க அறிமுகப்படுத்தியது அமெரிக்கா

ரோபோகளின் செயல்பாடுகள் Program Coding மூலம் தீர்மானிக்கப்பட்டுவந்த நிலையில், Program Coding தெரியாதவர்கள் கூட வெறும் வாய்மொழியால் பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றி அதற்கேற்ப தனது செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்ளக்கூடிய ரோபோ அமெரிக்காவில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புரோகிராம் கோடிங் தெரியாதவர்களும்  ரோபோகளின் செயல்பாட்டை வடிவமைக்க வழிவகை செய்யும்விதமாக, Tactagon Technology என்ற நிறுவனம், voice மற்றும் motion control மூலம் இயங்கக்கூடிய ஒரு அடி உயர ரோபோவை உருவாக்கியுள்ளது. நமது சைகைகளையும், வாய்மொழி உத்தரவுகளையும் பின்பற்றி அதற்கேற்ப செயலாற்றக்கூடிய இந்த ரோபோவிற்கு … Read more

இந்தியாவை வெகுவாக நம்புகிறோம்; அமெரிக்கா உறுதி.!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளுடன் சுமூக உறவில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் நெட் பிரைஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பு குறித்த கேள்வியில், உலகெங்கிலும் உள்ள எங்கள் நட்பு நாடுகள் அனைவருடனும் நாங்கள் மிகவும் நெருக்கமாக ஈடுபட்டுள்ளோம். நிச்சயமாக, அதில் இந்தியாவும் அடங்கும். ரஷ்யாவின் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச சமூகம் … Read more

ஹஜ் பயணம் செல்லுபவர்களுக்கு நற்செய்தி! சவூதி அரசின் முக்கிய அறிவிப்பு!

ஹஜ் இஸ்லாமிய மதத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான இஸ்லாமியர்கள், ஹஜ் பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியா செல்கின்றனர். இந்தியாவில் இருந்தும் ஏராளமானோர் சவூதி அரேபியாவை அடைகின்றனர். கொரோனா பாதிப்பால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. ஆனால் இந்த முறை இந்தியா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு வசதி அளிக்கும் வகையில், சவுதி அரசு ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப் போகிறது. அவரது … Read more

முதல்முறையாக இந்தியா – ஜப்பான் போர் பயிற்சி; சீனாவுக்கு செக்.!

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் கடந்த 1962ம் ஆண்டு சீன போர் வெடித்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்து. அதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் … Read more

உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்கள்; அமெரிக்கா அறிவிப்பு.!

பல ஆண்டுகளாக உக்ரைன் நாட்டை ரஷ்யா சொந்தம் கொண்டாடி வருகிறது. உக்ரைன் நாட்டின் கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளிட்டவை ஒத்துப் போவதால், அந்நாடு, தங்களுக்கு தான் சொந்தம் என, ரஷ்யா உரிமை கோரி வருகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த … Read more

தண்ணீருக்கு மேல் பறப்பதுபோல் செல்லும் மின்சார படகு அமெரிக்காவில் அறிமுகம்..!

ஹைட்ரோபாயில் தொழில்நுட்பம் மூலம், தண்ணீருக்கு மேல் பறப்பதுபோல் தோற்றமளிக்கும் அதிவேக மின்சார படகு அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மின்னணு சாதன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சார கார்களுடன் ஒப்பிடுகையில் மின்சார படகுகளுக்கு 15 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் அவற்றின் புழக்கம் குறைவாக உள்ளது. மேலும், படகுகள் தண்ணீரை கிழித்துக்கொண்டு செல்லும்போது முன்புறத்தில் தண்ணீர் மோதி வேகம் குறைவதை தவிர்ப்பதற்காக, படகுக்கு அடியில் விமான இறக்கைகள் போல் காட்சியளிக்கும் ஹைட்ரோபாயில்-கள்  பொருத்தப்படுகின்றன. இவ்வாறு ஹைட்ரோபாயில் பொருத்தப்பட்டு, மணிக்கு 37 கிலோமீட்டர் … Read more

"இளவரசர் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார்" – தலிபான்கள் குற்றச்சாட்டு

காபூல்: போர்ப் பயிற்சி என்ற பெயரில் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார் என்று தலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் ஹாரி, தனது ராணுவ பயிற்சிகளை 20 ஆண்டுகளாக போர் நடந்து கொண்டிருந்த ஆப்கனில் மேற்கொண்டார். இந்த நிலையில் ராணுவ பயிற்சி தொடர்பான தனது அனுபவங்களை ஹாரி தான் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் ஆப்கன் போரின் போது முஜாகீதின் அமைப்பை சேர்ந்த 25 பேரை கொன்றதாக ஹாரி தெரிவித்திருந்தார். … Read more

அலிபாபாவை தொடர்ந்து Ant குழுமத்தையும் இழக்கும் Jack Ma; தொடரும் சீனாவின் அடக்குமுறை!

Jack Ma: ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஜாக் மாவுவின் நெருக்கடிகள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன. நீண்ட நாட்களாக அவர் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் ஜப்பானில் வசிப்பதாக செய்தி வந்தது. தற்போது ஜாக் மாவுக்கு மிகப்பெரிய அடியாக மற்றொரு ஒரு செய்தி வந்துள்ளது. ஆண்ட் குழும நிறுவனர் ஜாக் மா தனது சொந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இப்போது ஆண்ட்  குழுமத்தில் … Read more