கௌதம் அதானி-யின் ஒரு நாள் வருமானம் என்ன தெரியுமா..? கேட்டா ஆடிப்போயிருவீங்க..!

இந்தியாவில் இருக்கும் பெரு நிறுவனங்களுக்குக் கடந்த 3 வருடம் ராஜயோகம் என்றால் மறுக்க முடியாது, அதிகப்படியான முதலீடு, வர்த்தக விரிவாக்கம், வேகமாக வளர்ச்சி என அசத்தி வருகிறது. இதேவேளையில் இந்திய நிறுவனங்களின் உரிமையாளர்களின் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வளர்ச்சி இந்திய மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் பணக்காரர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளது. கௌதம் அதானி-யின் ஒரு நாள் வருமானம் … Read more

7 வருடத்தில் முதல் முறையாக நஷ்டம்.. டாடா தான் காரணமா..?

இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில் ஆகாச நிறுவனத்தின் வருகை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஏர் இந்தியாவின் முக்கிய வர்த்தகப் பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எப்போதும் இல்லாத வகையில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதற்கு டாடா குழுமம் தான் காரணமா..? விப்ரோ அதிரடி.. 300 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. காரணம் Moonlighting..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவு … Read more

மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு.. ரத்தன் டாடா உள்ளிட்ட 3 பேர் பிஎம் கேர்ஸ்- அறங்காவலர்களாக நியமனம்!

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக தொழிலதிபர்களும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேடி தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபா நாயகர் கரிய முண்டா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய அரசு அறிக்கையில் கடந்த 2020ம் ஆண்டின் இருந்து நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றானது மிக மோசமாக பரவத் தொடங்கியது. அப்போது அவசர தேவைக்கும், நிவாரண உதவிகளுக்கும் அரசு பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பினை தொடங்கியது. கர்நாடக … Read more

வாடகை வீடு தேடி அலையும் உயர் அதிகாரிகள்.. பணத்தைக் கொட்ட தயாராம்..!

கொரோனா தொற்றுப் பாதிப்புகள் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் தணித்துள்ள காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குப் பணியாற்றிய ஊழியர்கள் இந்திய வர துவங்கியுள்ளனர். இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில் உலகளாவிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தூதரகப் பணியாளர்கள் முழுநேர அலுவலகப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனால் பெரு நகரங்களில் ஆடம்பர வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஒரு இரவுக்கு ரூ.40,000 .. விண்ணை முட்டிய பெங்களூரு லாட்ஜ் வாடகை.. என்ன காரணம் தெரியுமா..? … Read more

இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை!

பங்கு சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் இந்திய சந்தையில் பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு பிறகே சந்தையில் ஏற்றத் தாழ்வுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகம் உள்ளது என கூறியுள்ளனர். எனினும் இந்த காலகட்டத்தில் கவனிக்க ,வேண்டிய பங்குகள் பட்டியலில் மூன்று பங்குகளை சுட்டிக் காட்டியுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பேவரைட் பங்கு.. இவ்வளவு பேர் … Read more

பைஜூ ரவீந்தரன், நிதின் காமத், குனால் ஷா.. மாஸ் காட்டும் ஸ்டார்ட் அப் யூத் தலைவர்கள்..!

முதல் முறையாக 59 ஸ்டார்ட் அப்களில் 100 நிறுவனர்கள் ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.06 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனர்களில் 65 பேர் 37 யூனிகார்ன்களை சேர்ந்தவர்கள். இந்த நிறுவனர்களின் சராசரி வயது 40 ஆகும். இதன் காரணமாக அதிகளவிலான இளம் தொழிலதிபர்கள் ஐஐஎஃப்எல் ஹுருன் லிஸ்டில் சேர்ந்துள்ளனர். தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்! … Read more

வெறும் 19 வயதில் ரூ.1200 கோடி சொத்து.. வியக்க வைக்கும் பெங்களூர் இளைஞர்கள்..!

ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டு வரும் பணக்காரர்கள் பட்டியல், 2022க்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 2022 பட்டியலில் 19 வயதான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா ஆகிய இருவரும் இளம் பணக்காரர்களாக இடம்பெற்றுள்ளனர். WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்..! Zepto நிறுவனர்கள் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் இயங்கி வரும் Zepto இணை நிறுவனர்களான கைவல்யா … Read more

பாகிஸ்தானை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்..!

அதிகப்படியான பணவீக்கம், நிதி நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாடு எனத் திரும்பும் இடமெல்லாம் பிரச்சனைகள் உடன் இருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சமீபத்தில் கடன் உதவி கிடைத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு தனது வருமானத்தை அதிகரிக்கக் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே பல பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. விப்ரோ அதிரடி.. 300 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. காரணம் … Read more

விப்ரோ அதிரடி.. 300 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. காரணம் Moonlighting..!!

இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஆரம்பம் முதலே Moonlighting குறித்துக் கடுமையாக எச்சரித்து வந்த நிலையில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. Moonlighting குறித்த குழப்பத்தில் இருந்த ஐடி நிறுவனங்களுக்கு விப்ரோ நிறுவனத்தின் செயல் அதிர்ச்சி அடையச் செய்தது மட்டும் அல்லாமல் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெக் துறையில் ஊழியர்கள் இனி உஷாராக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!! விப்ரோ … Read more

மாஸ் காட்டிய பால்குனி நாயர்.. இந்தியாவிலேயே டாப்பு இவங்க தான்..!

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த வர்த்தகத் துறையில் இன்று, ஆண்களுக்கு இணையாக, ஏன் பல நேரத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல வர்த்தகச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் ஆன்லைன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தளமான நைகா நிறுவனத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது சொத்து மதிப்பு தாறுமாறாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கடந்த ஒரு வருடத்தில் சொத்து மதிப்பில் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்த இந்தியர்கள் பட்டியில் … Read more